ஆலயங்களுக்குள் நுழைந்துவிட்ட அலங்கோலம்!
Tue Jun 28, 2016 11:14 pm
வனாந்திரத்தில் ஆரோன் நடத்திய அதே அருவருப்பான கன்றுகுட்டி ஆராதனை ஆலயங்களுக்குள் நுழைந்துவிட்ட அலங்கோலம்!
கவனமாக இருங்கள்!!
இது கர்த்தரை பிரியப்படுத்தாது!!!
கவனமாக இருங்கள்!!
இது கர்த்தரை பிரியப்படுத்தாது!!!
Re: ஆலயங்களுக்குள் நுழைந்துவிட்ட அலங்கோலம்!
Thu Jun 30, 2016 7:50 am
வொர்ஷிப் எனும் புனிதமான நடைமுறையை வொர்ஸ்ட் ஆக மாற்றிவரும் ஒரு மோசமான போக்கு எங்கும் பரவியிருக்கிறது. இதற்கு உறுதுணையாக மூத்த போதகர்களும் இருக்கிறார்கள். தன் பிள்ளைகளைக் கண்டிக்கத் தவறி தாறுமாறுகளில் விழுந்துபோன ஏலியின் காலத்து ஆசாரியத்துவமே இன்றைய மேடைகளை ஆக்கிரமித்திருக்கிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய சபையில் நடைபெறும் குத்தாட்டம் அருவருப்பின் உச்சக்கட்டமாகும். இப்படிப்பட்ட சபைக்காக இயேசுவானவர் தம் ஜீவனைக் கொடுக்கவில்லை. இது பரிசுத்த தேவனின் சபையுமல்ல.
மன இறுக்கங்களிலிருந்து வருவோர்க்கு வடிகாலாக இருக்கவே இருக்கிறது டிஸ்கொதே க்ளப்புகள். கர்த்தருடைய சபையில் அவருடைய வார்த்தை மட்டுமே எல்லா இறுக்கங்களையும் நெருக்கங்களையும் போக்கும் நல்மருந்தாக அன்றும் இன்றும் விளங்குகிறது. அப்படியிருக்க இப்படிப்பட்ட தவறான முன்னுதாரணங்களை அனைத்து சபைகளும் எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்வது என்பது சீர்கேடுகளுக்கே துணைபோகும் செயலாகும் என்று அஞ்சுகிறோம்.
சம்பந்தப்பட்ட பையன் இதே அசுத்தாவியை மலேஷியா உள்ளிட்ட தேசங்களிலும் பரப்பிக்கொண்டிருக்கிறான். மலேஷியாவில் தமிழ் கிறிஸ்தவர்களின் எல்லா சீரழிவுகளுக்கும் இப்படி இங்கிருந்து சென்ற கள்ள சாத்தான்களே காரணமாய் இருக்கிறார்கள். வேறு சிலர் தங்கள் ஸ்தாபனங்களுக்கு நிதி சேகரிக்கும் புண்ணிய காரியத்துக்காக சென்று வருகிறார்கள். மலேஷியா போன்ற தேசங்களிலுள்ள சீன கிறிஸ்தவ மக்களிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவேண்டுமே தவிர தங்கள் பக்திவிருத்திக்கு ஒருபோதும் மலேஷிய தமிழ் கிறிஸ்தவர்கள் இந்திய / தமிழக ஊழியர்களை நம்பக்கூடாது என்று மிகுந்த பாரத்துடனே வேண்டி கேட்டுக்கொள்ளுகிறேன்.
**ஆளாளுக்கு ஊரூரூக்கு ஒரு நாகரீகம் இருந்தாலும் கிறிஸ்தவத்துக்கென்றே தனி உயர்மரபுகள் உண்டு. அதில் தேர்ச்சி பெறாதோரை மேடையேற்றி சபையாரை சாபத்துக்குள் தள்ளும் பயங்கரத்தில் தலைவர்கள் முண்டியடிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum