ஸ்பைஸ்ஜெட் மழைக்கால சலுகை: ரூ.444-க்கு விமான பயணம்
Fri Jun 24, 2016 7:44 am
பட்ஜெட் பிரிவு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் மழைக்கால சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது. உள்நாட்டில் பயணம் செய்ய ரூ.444-க்கான கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்து நாட்கள் மழைக்கால சலுகை விற் பனை திட்டத்தை நேற்று அறிவித் துள்ளது. இதன்படி உள்நாட்டில் விமான பயணம் மேற்கொள்ள சலுகைக் கட்டணமாக ரூ.444 (வரிகள் தனி) என நிர்ணயித்துள்ளது. இந்த சலுகைக் கட்டணத்தில் ஜூலை 01 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு இடையே பயணம் செய்யலாம். இதற் கான முன்பதிவு இன்று அதிகாலை யிலிருந்து தொடங்கி ஜூன் 26 வரை நடக்கிறது.
ரூ.444 என்கிற அடிப்படைக் கட் டணத்தில் ஜம்மு- நகர், அகமத பாத்-மும்பை, மும்பை-கோவா, டெல்லி-டெராடூன், டெல்லி-அமிரு தசரஸ் தடங்களில் பயணம் செய்ய லாம் என அறிவித்துள்ளது. இந்த சலுகைக் கட்டணத்தில் எத்தனை இருக்கைகள் ஒதுக்கப்படும் என்கிற விவரங்களை நிறுவனம் வெளியிட வில்லை. ஸ்பைஸ்ஜெட் இணைய தளத்தில் அடுத்த மாதத்துக்கான பயணத் திட்டத்தில் சாதாரணமாக டெல்லி-டேராடூன் பயணத்திற்கான கட்டணம் அனைத்து வரிகளும் சேர்த்து ரூ.1,167 என குறிப்பிட்டுள்ளது.
இந்த சலுகைக் கட்டணத்தில் பயணத்தை ரத்து செய்தால் பணத்தை திருப்பி அளிக்க முடி யாது என்றும், சட்ட ரீதியான வரிகள் மட்டுமே திரும்ப பெற முடியும் என்றும் ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் நிறுவனம் தொடங்கிய 11 ஆண்டு கொண்டாட் டத்தை முன்னிட்டு ரூ.555 க்கு சலுகைக் கட்டணத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|