தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்
Wed Jun 22, 2016 1:01 pm
‘‘தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.’’
“நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர் வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்.”
- வால்ட் டிஸ்னி, (வால்ட் டிஸ்னி கம்பெனி)
Re: தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்
Wed Jun 22, 2016 1:01 pm
“வாழ்க்கை சில வேளைகளில் உங்கள் தலையில் செங்கல்லைக் கொண்டு தாக்கும். மனம் தளராதீர்கள். நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்க வேண்டாம்.”
-ஸ்டீவ் ஜாப்ஸ்
Re: தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்
Wed Jun 22, 2016 1:02 pm
“நாம் தோல்விகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதில்லை. நான் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி அடைந்து நொந்துபோயிருந்த நேரத்தில், வாழ்க்கையில் ஓரளவு வெற்றி பெற்ற யாராவது என்னிடம் வந்து, ‘நீ பல தோல்விகளைச் சந்தித்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’ என்று சொல்லியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.”
ஜே.கே.ரவுலிங் ஒருமுறை மாணவர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்: “உங்களில் யாரும் நான் சந்தித்த அளவுக்கு மோசமான தோல்விகளைச் சந்திக்கப் போவதில்லை. ஆனாலும் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அவை வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம்.”
-ஜே.கே.ரவுலிங் (ஹாரிபாட்டர் நாவல்கள்)
ஜே.கே.ரவுலிங் ஒருமுறை மாணவர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்: “உங்களில் யாரும் நான் சந்தித்த அளவுக்கு மோசமான தோல்விகளைச் சந்திக்கப் போவதில்லை. ஆனாலும் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அவை வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம்.”
-ஜே.கே.ரவுலிங் (ஹாரிபாட்டர் நாவல்கள்)
Re: தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்
Wed Jun 22, 2016 1:02 pm
"வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி"
-சாய்க்கிரோ ஹோண்டா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum