இனி ஒருபோதும் மாட்டேன் பட்டியல்
Mon Jun 20, 2016 4:29 pm
இனி ஒருபோதும் மாட்டேன் பட்டியல்
----- ----- ----- ----- ------ ----- ------- -----
1. இனி ஒரு போதும் "இல்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி எங்கள் குறைவை எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி 4:19).
2. இனி ஒருபோதும் "என்னால் முடியாது" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு" (பிலி 4:13).
3. இனி ஒருபோதும் "பயமாய் இருக்கிறது" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியும் உள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோ 1:7).
4. இனி ஒருபோதும் "எனக்கு விசுவாசம் இல்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவு" ஒன்று உண்டு. (ரோமர் 12:3).
5. இனி ஒருபோதும் "எனக்கு பெலன் இல்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "கர்த்தரே என் ஜீவனின் பெலனானவர்" (சங்கீதம் 27:1).
6. இனி ஒருபோதும் "என் வாழ்வில் சாத்தான் அதைச் செய்து விட்டான். இதைச் செய்து விட்டான்" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4).
7. இனி ஒருபோதும் தோல்வி பற்றி பேச மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணுகிற.... தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி.2:14).
8. இனி ஒருபோதும் "எனக்கு ஞானமில்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்து இயேசுவே.... தேவனால் எனக்கு ஞானமானார்" (1 கொரி 1:31).
8. இனி ஒருபோதும் வியாதியைக் குறித்து அவிசுவாசமாக பேச மாட்டேன். ஏனெனில் "அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன்" (ஏசாயா 53:5).
9. இனி ஒருபோதும் நான் கவலைகளையோ, விரக்தியையோ அறிக்கையிட மாட்டேன். ஏனெனில் "அவர் என்னை விசாரிக்கிறவரானபடியால், என் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுகிறேன்" (1 பேதுரு 5:7).
10. இனி ஒருபோதும் "எதையும் விடவே முடியவில்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு".
12. இனி ஒருபோதும் ஆக்கினைத் தீர்ப்பு பற்றி பயப்பட மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாய் இருந்து, மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் 8:1).
- Don Gossett.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum