தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விலைவாசி உயர்வை சமாளிக்க 7 வழிகள்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விலைவாசி உயர்வை சமாளிக்க 7 வழிகள்! Empty விலைவாசி உயர்வை சமாளிக்க 7 வழிகள்!

Fri Jun 17, 2016 8:37 am
ன்றாடம் பயன்படுத்தப்படும் பல பொருட்களின் விலை வரிசையாக உயர்ந்து கொண்டே வருகிறது. சில பொருட்கள் விலை எவ்வளவுதான் உயர்ந்தாலும் அதை கட்டாயம் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைகளில் இருக்கிறோம். மேலும், சில பொருட்களை தவிர்க்கலாம். ஆனால் பருப்பு, அரிசி போன்ற பொருட்களை தவிர்க்க முடியாது. எனவே இந்த விலைவாசி உயர்வை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

1. விலைவாசி உயர்வு என்பது எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும். பொருட்கள்தான் மாறும். எனவே விலை அதிகம் உள்ள பொருட்கள் வாங்கும் அளவை முடிந்தவரை குறைப்பது நல்லது. பருப்பு விலை அதிகமாக இருக்கும் சமயங்களில் பருப்பு இல்லாத சமையலை தேர்வு செய்வது நல்லது. அதேபோல விலை குறைவாக உள்ள காய்கறிகளை வாங்கலாம்.

2.  முடிந்தவரை செலவுகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி ஓட்டல், ஷாப்பிங், சினிமா போன்ற செலவுகளை முடிந்தவரை குறைத்தாலே, கணிசமான தொகை மிச்சமாகும். மிச்சமாகும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும்.

3. எப்போதும் இதுபோன்ற செலவுகளை சமாளிக்க, தனியாக ஒரு சேமிப்பு இருப்பது நல்லது. அதாவது ஆர்டி, ரிஸ்க் குறைந்த கடன் சார்ந்தமியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகியவற்றில் சேமித்து வைக்கலாம்.

4. மின்சாரக் கட்டணம், பெட்ரோல் செலவு ஆகியவற்றை முடிந்தவரை குறைக்கலாம். அதாவது கட்டாயம் தேவையான நேரங்களில் மட்டும் ஏசி பயன்படுத்தலாம். தேவையில்லாமல் வீட்டில் லைட், ஃபேன் ஓடுவதை தவிர்க்க வேண்டும். வாரத்தில் ஒருமுறை பொது போக்குவரத்து அல்லது கணவன், மனைவி சேர்ந்து ஒரே வாகனத்தில் அலுவலகத்திற்கு போவதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். அதேபோல டி.வி, செல்போன் சார்ஜ் போடும் ஸ்சுவிட் ஆகியவைற்றை ஆஃப் பண்ண வேண்டும். இல்லையெனில் அதிலும் மின்சாரம் தேவையில்லாமல் செலவாகும்.


5. வீட்டில் வீணாகும் பொருட்கள் என்னென்ன என்பதை கவனிக்க வேண்டும். அதை குறைக்க என்ன செய்யலாம் என்பதை யோசிக்க வேண்டும். அதாவது இரண்டு நபர்கள் மட்டும்தான் எனில், அவர்களுக்கு போதுமான அளவு சாதம் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் மீதமாகும் சாதத்தை பல வீடுகளில் குப்பையில் போட்டு விடுகிறார்கள். அதேபோல அனைத்து உணவு பொருட்களையும் தேவைக்கும் மட்டும் சமைப்பது நல்லது.

6. பொருட்கள் வாங்குவதற்கு முன் என்னென்ன பொருட்கள் வாங்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிட்டு லிஸ்ட் போட்டுக் கொள்வது நல்லது. இதன் மூலமாக தேவையில்லாமல் பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்குவது குறையும்.

7. தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீரை காசு கொடுத்துதான் வாங்குகிறோம். அதனால் காய்கறி, அரிசி கழுவுவதற்கு போர் வாட்டரை பயன்படுத்துவது நல்லது.

மேற்கூறிய வழிகளில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் போது, செலவு வெகுவாக குறையும். இதனால் செலவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும். எந்தவிதமான விலைவாசி உயர்வையும் எளிதாக சமாளிக்க முடியும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விலைவாசி உயர்வை சமாளிக்க 7 வழிகள்! Empty Re: விலைவாசி உயர்வை சமாளிக்க 7 வழிகள்!

Fri Jun 17, 2016 8:44 am
விலைவாசி உயர்வை சமாளிக்க 7 வழிகள்! Vithya%20bala%20height%20stamp- வித்யா பாலா -ஹெட் (மியூச்சுவல் ஃபண்ட் ரிசர்ச்),ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்







மிரளவைக்கும் உயர்கல்வி செலவு...கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!
ன்றைக்கு உள்ள பெற்றோர்கள் பலரும் சொல்ல நாம் கேட்டிருப்போம். அதாவது  நான் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது எல்லாமே என்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்குதான் என்பார்கள். இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமிக்கும் பணத்தை சரியான திட்டங்களின் பலரும் முதலீடு செய்வதில்லை. ஏனெனில் எதில் போடவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு என்பதும் குறைவாகவே உள்ளது.
குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை விட உயர் கல்விக்குதான் அதிக தொகை தேவைப்படும். மேலும் இப்போது  3 வயதில் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு இன்னும் 10, 12 வருடம் கழித்துதான் உயர்க் கல்விக்கான தேவை உருவாகும். எனவே இவர்கள் நீண்டக்கால அடிப்படையில் முதலீடு செய்யலாம். 
ஆனால் சில பெற்றோர்கள் ஆர்.டி, ஃபிக்ஸ்ட் டெபாசிட் , ஏலச்சீட்டு, தங்கம் வாங்கி வைப்பது என்றுதான் தங்களின் முதலீட்டை குறுகிய காலத்திற்கு வைத்துள்ளார்கள். இந்த முதலீடுகள் கொடுக்கும் வருமானத்தை விட சற்று அதிகமான வருமானத்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் இவை பணவீக்க விகிதத்தை தாண்டி  நல்ல வருமானத்தை தரும். 

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தொகையை, குறிப்பிட்ட காலத்திற்கு எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய முடியும்.  ஒருவேளை நீங்கள் முதலீடு செய்யும் திட்டம் விலைவாசி உயர்வை சமாளிக்க 7 வழிகள்! Mutual-funds%20-%20currencyசரியாக செயல்படவில்லை எனில், அதிலிருந்து  முதலீட்டை வேறு திட்டங்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும் அல்லது வெளியே எடுத்துவிட முடியும்.
அடுத்தது ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் ஒராண்டிற்கு மேல் முதலீடு செய்யும்போது கிடைக்கும் வருமானத்திற்கு வரி இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. கடந்த காலத்தில் நல்ல வருமானமும் இந்த ஃபண்ட்கள் கொடுத்துள்ளன.
ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சைல்ட் கேர் கில்ட் பிளான் என இரண்டு திட்டங்கள் உள்ளன. இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையில் மூன்றில் ஒரு பங்கை கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். எனவே இது ஒரு பேலன்ஸ்டு திட்டமாகும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது ஓப்பன் எண்டட் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.  
மேலும் முதலீடு செய்யும் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருக்கு இலவசமாக தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி கவரேஜூம் கிடைக்கும். இதன் மூலமாக பெற்றோர்களுக்கு ஏதாவது அசம்பவிதம் நிகழ்ந்தாலும் குழந்தைகளின் உயர்கல்விக்கு எந்தவிதமான பாதிப்பு வராது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சைல்ட் கேர் பிளான் - கில்ட் பிளான் கடந்த ஒரு வருடத்தில் 63 % , மூன்று வருடத்தில் 18.56% வருமானமும், ஐந்து வருடத்தில் 20.25 % வருமானமும் கொடுத்துள்ளது. 
ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் கில்ட் இன்வெஸ்மென்ட் பிளான்  ஒரு வருடத்தில் 44.91%, மூன்று வருடத்தில்  17.14 %, ஐந்து வருடத்தில் 21.93% வருமானத்தையும் கொடுத்துள்ளது.


தொகுப்பு: இரா.ரூபாவதி 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum