உளுந்து லட்டு
Thu Jun 16, 2016 9:46 am
உளுந்து லட்டு
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 500g
அரிசி - 250g
சீனி - 500g
கற்கண்டு - 100g
நெய் - 100ml
பிளம்ஸ் - 50g
செய்முறை
உளுத்தம்பருப்பு, அரிசி என்பவற்றை தனித்தனியாக நன்றாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கற்கண்டை அருவல் நெருவலாக இடித்து வைக்கவும்.
அரிசிமா , உளுத்தம் மா இரண்டையும் சீனியுடன் கலந்து வைக்கவும்.
சட்டியினை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்த மாவினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு பிளம்ஸ் சேர்த்து இறக்கவும்.
பின்னர் லடடுகளாக பிடித்து தேநீருடன் பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum