நெத்தலிக்கருவாட்டுக்குழம்பு
Thu Jun 16, 2016 9:43 am
நெத்தலிக்கருவாட்டுக்குழம்பு
தேவையான பொருட்கள்
நெத்தலி - 100g
உருளைக்கிழங்கு - 100g
தக்காளிப்பழம் - 2
வெங்காயம் - 50g
பச்சைமிளகாய் - 4
தேங்காய்ப்பால் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் , தேசிக்காய் சாறு , கறிவேப்பிலை - சிறிதளவு
நெத்தலியை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் சிறிது விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு , கறிவேப்பிலையை வதக்கவும்.
அரைப்பதத்திற்கு வதங்கியதும் நெத்தலியை சேர்த்து கிளறவும்.
பிறகு அதனுள் தேங்காய்ப்பால் , மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.
நன்கு கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தேசிக்காய் சாறு சேர்த்து
பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum