சூடான கரட் வறை
Thu Jun 16, 2016 9:42 am
கரட் வறை
தேவையான பொருட்கள்
கரட் - 100g
வெங்காயம் - 50g
செத்தல்மிளகாய் - 5
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் - தேவைக்கேற்ப
செய்முறை
கரட்டை சுத்தம் செய்து ஸ்கிறேப்பரால் ஸ்கிறேப் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கவும்.
செத்தல்மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கவும்.
தேங்காய்த்துருவலுடன் மிளகாய்த்தூள் , சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
அடுப்பில் சட்டியினை வைத்து சிறிதளவு
எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் , செத்தல்மிளகாய் , பெருஞ்சீரகம் , கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கியதும் கரட் சேர்த்து வதக்கவும்.
பாதி வெந்ததும் மிளகாய்த்தூள் கலந்த தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூடான கரட் வறை தயார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum