மோடிக்கு ஏன் 74 முறை கை தட்டினார்கள் தெரியுமா?
Wed Jun 15, 2016 8:00 am
Ayenan Chellaiyah
மோடியின் உரைக்கு 74 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டினார்கள் என்று பாஜகவினர் புளகாங்கிதத்தோடு எழுதுகிறார்கள். ஏன் அப்படி கைதட்டினார்கள் என்பது கூட்டறிக்கையை பார்த்த பிறகுதான் புரிபடுகிறது.அந்தஅளவுக்கு அமெரிக்கா நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டிருக்கிறார் மோடி.
அதனொரு"பிரதான ராணுவ கூட்டாளி"யாக இருக்க ஒப்புக் கொண்டிருப்பது மட்டுமல்லாது , அதனுடைய போர்க்கப்பல்கள், விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பவும் , உபகரணங்கள் கொடுக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டை தாக்க அமெரிக்கா முயன்றாலும் அதற்கு நாம் உதவிசெய்ய வேண்டும்!
அந்த நாட்டில் நமது இந்தியர்கள் இருந்தால் அவர்களும் அந்த தாக்குதலால் பாதிக்கப்படுவார்கள். அப்படி யெல்லாம் நடக்காது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள கூடாது.ஈராக்கோடு மிகுந்த நட்போடு இருந்த அமெரிக்காதான் பின்னர் அதை துவம்சம் செய்து அந்த நாட்டு அதிபரை தூக்கி சென்று தூக்கில் போட்டது என்பதை மறந்து விடக்கூடாது.
ஆசியா- பசிபிக் மற்றும் இந்துமகாசமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் "முன்னுரிமை கூட்டாளி"யாக இந்தியா இருக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் மோடி.இதன் அர்த்தம் இந்தப் பகுதியில் அமெரிக்காவின் கையாளாக நாம் செயல்பட வேண்டும் என்பது.
இது இந்தபகுதியின் பல்வேறுநாடுகளின் வெறுப்புக்கு நம்மை ஆளாக்கும் .இவ்வளவும் போதாது என்று 6 அணுஉலைகளை வாங்கவும் மனிதர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவற்றின் அநியாய விலை ரூ2.8 லட்சம் கோடி என்பது மட்டுமல்லாது விபத்துக்கான நட்டஈட்டை இந்தியாவின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்க வேண்டுமாம்!
இவ்வளவையும் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் செய்திருக்கிறார் என்பதை
சரியாக சுட்டிக் காட்டியுள்ளது மார்க்சிஸ்டு கட்சி. இத்தகைய வேலைசெய்த மோடிக்கு
அத்தனை முறை அமெரிக்க ஆட்சியாளர்கள் கை தட்டியதில் ஆச்சரியம் என்னவோ?
முகநூல்கருத்து:
Veera Vijay சரியாக சுட்டிக்காட்டிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பாதுகாப்பு அக்கறை பாராட்டுக்குரியது. இப்ப பேசி என்ன பண்ண இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து உரிமைகளும் இழந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் நாசமாய் நடுத்தெருவில் நின்றாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு வாக்களித்தால் இதுதான் நடக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum