வழக்கறிஞர் போராட்டம்!!
Sat Jun 11, 2016 2:12 pm
#நீதிபதிகளின்_சண்டியர்தனம்
#மோடிக்கும்_லேடிக்கும்_போட்டியாக
#நீதிபதிகளின்_அராஜகம்.
காலனி ஆட்சியை கட்டிக்காக்க வெள்ளைக்காரன் நீதிமன்றம்,நீதிபதிகளுக்கு அளவுக்கு மீறிய அதிகாரத்தை கொடுத்திருந்தான்.
அதே சர்வாதிகாரத்தை, காலனியாதிக்க மனோபாவத்தை இப்போதும் காட்டி ஆதிக்கத்தை நிறுவப் பார்க்கிறார்கள்.
ஏற்கனவே, RSSபயங்கரவாதம், அரச பயங்கரவாதம்,ஏகாதிபத்திய உலகமய பயங்கரவாதத்தால் சிவில் சமூகம் மூச்சுத்திணறி தவிக்கும் வேளையில், போதாதற்கு நீதிபதிகளும் தனது பங்கிற்கு சாட்டையை வீசுகிறார்கள்.
நீதிமன்ற அதிகார நடைமுறைக்கென 34(A)பிரிவை வைத்துக் கொண்டு அதில் உட்பிரிவாக 14A,B,C,D என சகட்டு மேனிக்கு வழக்கறிஞர்கள் மீது விதிமுறை என்ற பெயரில் அடக்குமுறை ஏவியிருக்கிறார்கள்.
வழக்கறிஞர் தவறு செய்தால் தண்டிக்கும் அதிகாரம் வழக்கறிஞர் சங்கத்துக்கே வேண்டும். அதாவது பார் கவுன்சிலுக்கே அதிகாரம்.
இந்த 34(A)சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கறிஞர்களை தண்டிக்கும் அதிகாரத்தை நீதிபதியே எடுத்துக் கொள்கிறார்.
வழக்கறிஞர் தொழிலுக்கே தடை விதிக்கும் அதிகாரமும் நீதிபதிக்கே என அதிகாரத்தை குவித்து மிரட்டுகிறார்கள்.
பார்ப்பனர்களின் தொலைக்காட்சியான தினத்தந்தியில் இதைப் பற்றி விவாதம் நடத்துகிறார்கள்.
வக்கீலுக்கு ஆதரவாக ஒருவரையும்
நீதிபதிகளுக்கு ஆதரவாக 3பேரையும் நிறுத்தி," இதிலென்ன தவறு. தவறு செய்யும் வழக்கறிஞர்கள்தானே பயப்பட வேண்டும். எல்லோரும் எதிர்ப்பது ஏன்" ஒரு பாப்பாத்தி தொகுப்பாளராக இருந்து வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார்.
வழக்கறிஞர்கள் குடித்துவிட்டு வரக்கூடாது,நீதிபதியை "அவமானமாக " திட்டக்கூடாது,
நீதிமன்றத்துக்குள்ளோ, நீதிமன்ற வளாகத்துக்குள்ளோ போராட்டம் நடத்தக் கூடாது. நீதிபதி முன்பு கத்திப் பேசக்கூடாது என அடிமைச் சட்டதிட்டங்கள் விரிந்து கொண்டே,போகிறது.
இதற்கு கட்டுப்படாவிட்டால் வழக்கறிஞர் தொழிலுக்கே தடைவிதிக்க நீதிபதிகளால் முடியும்.
வெள்ளைக்காரன் காலத்தில்கூட இப்படிப்பட்ட போக்கிரித்தனம் இருந்திருக்குமா எனத் தெரியவில்லை?
இந்த அடக்குமுறைக்கு பின்னிலுள்ள நோக்கமென்ன என்பதை பத்தரை மாத்துத் தங்கங்களான, யோக்கிய சிகாமணிகளான நீதிபதிகளைப் சிறிது உரசிப் பார்த்தால் தெரிந்து விடும்.
வழக்கறிஞர்கள் மீது அடிமைச் சட்டத்தை ஏவிவிட்டுட்டு, "தப்பு செய்யாவர்கள் ஏன் பயப்பட வேண்டுமென" நமுட்டுச்சிரிப்பாகக் கேட்கிறார்கள் நீதிபதிகளும்,பார்ப்பன ஊடகங்களும்.
இதே போல் 1ஆண்டுக்கு முன்பு கேடிமோடி நீதிபதிகளை டம்மியாக்கும் கொலீஜியம் முறையை கொண்டுவந்த போது குய்யோமுய்யோ என கத்தியவர்கள்தான் நீதிபதிகள்.
பாராளுமன்றத்தில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக வரும் சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடுக்கும் போதெல்லாம்
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள்,
"அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது" என தப்பித்துக் கொண்டன
கொலீஜியம் முறையும் கூடத்தான் மத்திய அரசின் கொள்கை முடிவு.
நீதித்துறையின்,நீதிபதிகளின் சுதந்திரத்தில் தலையிடும் செயலெனச் சொல்லி
அதை மட்டும் வெறிகொண்டு எதிர்த்த நீதிபதிகள்தான் இப்போது
வழக்கறிகளிடம் எகடாசு பேசுகிறார்கள்.
போராட்டத்தில் எப்போதும் முன்னிலிருக்கும் தமிழகத்தில் நிலப்பிரபுத்துவ திமிரோடு வரும் மற்ற மாநிலத்து நீதிபதிகள் வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமைகளை வெறுப்போடு பார்க்கிறார்கள்.
நீதிபதிகளுக்கெதிராக போராடுவதை இவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
ஹெல்மெட்டை அணியமுடியாதென ஹெல்மெட்டை தீயெரித்ததும், நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கத் தனி அமைப்பு வேண்டுமென போராடுவதும்,
நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை காட்டவேண்டுமென கோரிக்கை வைப்பதும்,
நீதிபதி நியமனத்தில் இடஒதுக்கீடை பின்பற்றச் சொல்வதும் தமிழக நீதிமன்றத்தில் குறிப்பாக சென்னை நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மட்டும்தான்.
அதனால்தான் மற்ற மாநிலங்களில் இல்லாத அடக்குமுறையை சென்னை உயர்நீதி மன்றத்தில் அமலாக்குகிறார்கள்.
"தப்பு செய்யும் வழக்கறிஞர்கள் தானே இந்த சட்டத்தைப் பார்த்துப் பயப்பட வேண்டும் நீங்கள் ஏன் பயந்து போராடுகிறீர்கள் " என எகத்தாளம் பேசும் நீதிபதிகளும் பார்ப்பன ஊடகங்களும்
அதே கேள்வியை நீதிபதியைப் பார்த்துக் கேட்பதில்லை.
நீதிபதிகள் ஏன் தனது சொத்துக் கணக்கை சமர்பிக்கக்கூடாது?
நீதிபதிக்களுக்கெதிராக ஏன் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கக்கூடாது?
ஊழல் நீதிபதிகளை ஏன் தண்டிக்கக் கூடாது?
90%பார்ப்பனர்களே நீதிபதிகளாக இருக்கிறீர்கள் என ஏன் கேட்கக்கூடாது?
நீதிபதிகளின் வெள்ளைக்காரன் காலத்து வானளாவிய அதிகாரத்தை ஏன் நீக்கச் சொல்லக் கூடாது?
இதை எந்த மாநில வழக்கறிஞர்களும் கேட்பதில்லை.
சுயமரியாதை மண்ணாகிய தமிழகத்தில் மட்டும்தான் இந்த கேள்வி எழுகிறது. போராட்டம் வெடிக்கிறது.
இப்படியான நீதிபதிகளின் பயங்கரவாதத்தை பாதுகாக்க மத்திய அரசின் பயங்கரவாதப் படையான மத்திய தொழில் பாதுகாப்புப்படையை நிறுத்தி இந்திய காலனியாதிக்கத்தின் கீழ் சென்னை நீதிமன்றம் ஏற்கெனவே அடிமையாகிப் போனது.
"ஏன் அப்பீலுக்குப் போகலாமே"என நீதிபதிகள் எகத்தாளம் பேசுகிறார்கள்.
நீதிபதிகளெல்லாம் ஒரே ஜாதியாக இருக்கும் போது, தீர்ப்பு கொடுப்பதும் பார்ப்பான்,அப்பீலை விசாரிப்பதும் பார்ப்பான்
ஒரு நீதிபதியை கண்டித்து வழக்கு தொடுத்தால் மற்ற நீதிபதி யாருக்கு ஆதரவுதருவார்?
நிரந்தர வருமானமில்லாத,துச்ச வருமானத்தில் பிழைப்பு நடத்தும் 70%வழக்கறிஞர்கள் அப்பீலுக்கு போவதென்பது நடக்கவே நடக்காது
"அந்த நீதிபதிக்காக பணம் வாங்கினேன்,பணம் கொடுத்தேன்" என வழக்கறிஞர்கள் யாராவது சொன்னால் அவர்களை நிரந்தரமாக வழக்கறிஞர் தொழில் செய்யத் தடைவிதிக்கும் அதிகாரம் ஊழல் நீதிபதிகள் தங்களை காத்துக் கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவே ஆகும்.
பணக்காரனின் கழிப்பறையாக அரசியல்வாதிகளின் கொட்டமாக
பார்ப்பனர்களின் கிளப்பாக மாறி நாறிப் போன நீதிமன்றங்கள் தங்களது நாற்றத்தை மறைக்க வழக்கறிஞர்களை சுத்தபத்தமாக காலைக் கழுவி உள்ளே வாருங்களென உபதேசிக்கிறது.
குஜராத் குற்றவாளிகளான மோடி,அமித்ஷாவை விடுவித்த,
ஊழல்ராணி ஜெயாவை விடுவித்த
விடுவிக்கப் போகிற
கார்ப்பரேட்டுகளின் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிற
பொறுக்கி காஞ்சி சங்கராச்சாரியை விடுவித்த இந்த நீதிமன்றங்களுக்கு உபதேசிக்க என்ன யோக்யதை இருக்கிறது?
அரசுதரப்பை கேட்டறிந்து கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் இவர்கள் நீதிபதிகளா..நாட்டாமைகளா...
இன்சூரன்ஸ் வழக்குகளில் நீதிபதிகளின் ஊழல் நாடறிந்த ரகசியம்.
நிலக்கிழார்,கார்ப்பரேட்டுகள், ஆதிக்க ஜாதியினர், அதிகாரிகள்,அரசியல்வாதிகள், ஊழல் நீதிபதிகள் இந்த 69 ஆண்டுகளில் தண்டிக்கப் பட்டோர் எத்தனை பேரென்ற கணக்கை வெளியிட முடியுமா?
ஊழலில் நாறிப்போன நீதிபதிகள் இதுவரை ஒருவர்கூட தண்டிக்கப் பட்டதில்லை.
இப்படிப்பட்ட நீதித்துறைக்கெதிரான போராட்டத்தை நாடெங்கும் பரவச் செய்வோம்.
ஊழல் நீதிபதிகளை தண்டிக்கும் அதிகாரத்தை உருவாக்க வேண்டும்
என உரக்கச் சொல்வோம்.
உலகமயத்திற்கெதிராக கடுமையாக தன்னெழுச்சியாக மக்கள் போராடி வருகிறார்கள்
போராட்டை சமாளிக்கமுடியாமல் கட்டமைப்பு செயலிழந்த அரசு தடுமாறுகிறது.
அதனால் உலகமயத்திற்கேற்ப சட்டத்திருத்தங்களை ஒடுக்குமுறைகளை கொண்டு வருகிறது அரச பயங்கரவாதம்
அதை மறைக்க களமாடுகிறது RSSபயங்கரவாதம்.
அந்த நெருக்கடியின் எதிரொலியாக நீதிமன்றமும் தனது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது.
அதாவது, உலகமயம், மோடி,லேடிக்கு போட்டியாக நீதிமன்றமும் தனது பாசிச நடவடிக்கையை காட்டுகிறது
அல்லது, உலகமய காலனியாதிக்கத்திற்கேற்ப மோடி லேடியைப் போல தன்னை தகவமைத்துக் கொள்கிறது என்றும்கூடச் சொல்லலாம்.
வெல்க வழக்கறிஞர் போராட்டம்!!
அதை மக்கள் போராட்டமாக மாற்றுவதிலிருக்கிறது அதன் வெற்றி வழி.
- Vijayakumar R

Permissions in this forum:
You cannot reply to topics in this forum