ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்
Thu Mar 14, 2013 1:09 am
உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை
பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும்
ஊட்டச்சத்து
மற்றும் மருத்துவ நிபுணர்கள், அத்தகைய உணவுகள் எவை என்பதையும்
பட்டியலிட்டுள்ளனர். கீழ் காணும் இந்த ஐந்து வகையான உணவுகளை உடல் எடையை
குறைக்க விரும்புவர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
பால்:
உங்களது
அன்றாட உணவு பட்டியலில் பாலையும் சேர்த்துக் கொள்வது உங்களை ஆரோக்கியமாக
வைத்துக் கொள்ளும் என்றாலும், அதிக எடை கொண்டவர்கள் அல்லது உடல் எடையை
குறைக்க விரும்புவர்கள் பாலை அதிக அளவில் அருந்துவதை தவிர்ப்பது
நல்லது.சிலர் இரவில் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டம்ளர் பால்
அருந்துவது வழக்கம்.வேறு சிலர் காலை உணவுக்கு பின்னரோ அல்லது மாலை
சிற்றுண்டிக்கு பின்னரோ பால் அருந்துவது வழக்கம்.இத்தகைய பழக்கம்
உடையவர்கள், குறைந்தது ஒரு மாதத்திற்காவது அப்பழக்கத்தை நிறுத்தி
பார்த்தால் மந்த நிலை அகன்று, உடல் எடையும் குறைந்து,மேனியும் தூய்மையாகி
வித்தியாசமான மாற்றத்தை உணரலாம்.இத்தகைய மாற்றங்கள் உங்களது பல பிரச்சனைகளை
தீர்த்துவிடும்.
சாப்பாட்டுக்கு பின் இனிப்பு:
நம்மில்
பலருக்கு சாப்பிட்டவுடன் குறைந்தபட்சம் ஒரு கடலை மிட்டாயையாவது சாப்பிடும்
பழக்கம் இருக்கிறது.இவ்வாறு சாப்பாட்டுக்கு பின்னர் ஸ்வீட்
எடுத்துக்கொள்ளும் பழக்கம் முற்றிலும் அநாவசியமான ஒன்று என்பதே
நிபுணர்களின் வாதம்.எடுத்துக்கொள்ளும் உணவே சர்க்கரை
சத்தாகத்தான்-குளுகோஸ்- மாற்றம்பெற்று உடலுக்கு தேவையான சக்தியை அளிக்க
தொடங்குகிறது.அப்படி இருக்கையில் மேலும் ஸ்வீட் எடுத்துக்கொண்டு சர்க்கரை
அளவை கூட்டுவது உடல் எடையை அதிகரிக்கத்தான் வழி வகுக்கும்.எனவே அந்த
பழக்கத்தை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு கைவிட்டு பார்த்தாலே அதன் பலனை
உணர்ந்து, நீங்கள அப்பழக்கத்தை அடியோடு தலைமுழுகி விடுவீர்கள்.
மாலை சிற்றுண்டியில் அதிக கார்போஹைட்ரேட்:
மதிய
உணவுக்கும், இரவு உணவுக்குமான இடைவெளியில் மாலை நேர சிற்றுண்டிகளாக
நம்மில் பலர் சமோசா, சாண்ட்விச் என பலமாக உள்ளே தள்ளுவார்கள். அது சரியா
அல்லது தவறா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவ்வாறு தினமும்
வயிற்றுக்குள் தள்ளப்படும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், உடல் எடையை
ஏகமாக அதிகரிக்க செய்துவிடும்.
இத்தகைய உணவுகளுக்கு பதிலாக
ஆரோக்கியமான புரதச் சத்து நிறைந்த கொட்டை பருப்புகளை
எடுத்துக்கொள்ளலாம்.இதனால் பசி உணர்வு தடுக்கப்பட்டு அதிக அளவு
கார்போஹைட்ரேட் வகையறா உணவுகள் எடுத்துக்கொள்ளப்படுவது தவிர்க்கப்படும்.
உருளைக்கிழங்கு:
சமீபத்தில்
நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றாக, உடல் எடையை அதிகப்படுத்தும் உணவுகளில் ஒன்றாக
உருளைக் கிழங்கை பட்டியலிட்டுள்ளனர்.இந்த உருளைக்கிழங்கை நீங்கள் தினமும்
எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அது நிச்சயம் உடல் எடையை
கூட்டிவிடும்.அதற்குப் பதிலாக பச்சை காயகறிகளை எடுத்துக்கொள்ளலாம்.
நொறுக்கு தீனிகள்:
ஆரோக்கியமான
நொறுக்கு தீனிகள் என்ற பெயரில் அதன் விபரீதம் புரியாமலேயே பலர் சிப்ஸ்,
முறுக்கு,பேக்கரி அயிட்டங்கள் என விதவிதமாக உள்ளே
தள்ளுகின்றனர்.இவையெல்லாம் லைட்ட்டான உணவு வகைகள்.உடல் எடையை அதிகரிக்க
செய்யாது என்பதோடு உடலுக்கு சத்தானது என்றும்
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இந்த எண்ணம் தவறானது.அதிக அளவில்
எண்ணெயில் பொறிக்கப்பட்ட இத்தகைய உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது
என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
நன்றி :இணையம்

Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்
Thu Mar 14, 2013 1:12 am
பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன்
என்றும் புரியவில்லை. .(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலா?) ஆனால் பெண்களை
விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான்
வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கரை
காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு
கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை
பாதுகாத்துக்கொள்ளனும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால்
மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும்.
வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்.. வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்..
முக அழகுக்கு:
பொதுவாக
ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு
வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம்
டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம்
கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள்
முட்டையின்
மஞ்சள் கருவை( மூக்கை மூடிக்கொள்ளவும்) எடுத்து அதில் பாலாடையும்,
பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான
வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக
மாறிவிடும். இது மாசம் 2 முறை செய்யவும்.
தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முகத்தின்
கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து
முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
உதடுக்கு:
சில
ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட்
சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி
வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு
இந்த டிப்ஸ் பயனில்லை)
பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு
கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல்
தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
கூந்தலுக்கு;
தலைமுடி
நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய்
எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க
வேண்டும்
வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை
சிறிது செம்பருத்தி பூ,இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.
உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்
இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.
முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்
ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த டிப்ஸ் ஏற்கனவே நான் தமிழ்குடும்பம்.காமில் கொடுத்தது தான்
ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.
நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது
நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்
சின்ன
சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை
குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.
இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகாக இருக்கும்
ஆடைகள்
வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ,
போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். அவர்களின் நிறத்துக்கு
ஏற்றதை போல் தேர்வு செய்யவும்..
உள்ளாடைகள் தேர்வு செய்யும்
பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது.
கல்லுரிக்கு போகும் ஆனா நீங்கள்
டீசுஷர்ட்
போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு
ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக
ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால்,
அசத்தலாக இருக்கும்.
இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில்
எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம்
இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது.
வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.
உடலின்
அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான
புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும், பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை
படுவது உங்களின் முக அழகை கொடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே
அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க..
நன்றி: தகவல் களஞ்சியம்

Thu Mar 14, 2013 1:13 am
அழகு என்பது பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். ஆனால் உண்மையிலேயே பெண்களை விட ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
ஆனால்
பெண்கள் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அவர்கள் அழகை பராமரிக்கின்றேன்
என்ற பெயரில், தங்கள் அழகை இன்னும் கூட்ட பியூட்டி பார்லர் செல்கின்றனர்.
அவ்வாறு
அவர்கள் செல்வதால், செயற்கையான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதால்,
பெண்கள் விரைவிலேயே முகச்சுருக்கத்தை அடைந்து, முதுமை தோற்றத்தில்
காணப்படுகின்றனர்.
ஆனால் ஆண்கள் எத்தனை வயதானாலும் இளமையாகவே காணப்படுகின்றனர்.
இருப்பினும் அவர்கள் வேலையின் காரணமாக வெயிலில் நீண்ட நேரம் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
தற்போது அடிக்கும் வெயிலின் வெப்பம் உடலின் சக்தி, அழகு ஆகியவற்றை விரைவில் கெடுத்துவிடுகிறது.
அதனால்,
அவர்களது அழகும் கெடுகிறது. ஆகவே அவ்வாறு ஏற்படுவதை தவிர்க்க, முகத்திற்கு
ஒரு சில மாஸ்க்களை செய்து வந்தால், முக அழகைப் பாதுகாப்பதோடு, சருமமும்
சற்று மென்மையாக அழகாக இருக்கும்.
அத்தகைய ஆண்களுக்கான ஃபேஸ் மாஸ்க்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அதனை செய்து பாருங்களேன்…
ஆரோக்கியமான சருமத்திற்கு சந்தன ஃபேஸ் மாஸ்க்!!!
சந்தனம்
உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, சருமத்தை ஆரோக்கியமாக
வெளிப்படுத்துவதற்கும், சருமத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக
நீக்குவதற்கும் பயன்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எந்த
ஒரு வெடிப்பும், மந்தமான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். ஆகவே அத்தகைய
சந்தனத்தை வைத்து எப்படி ஃபேஸ் மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!!
ஒரு
பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனப்பவுடர், ஒரு டேபிள் ஸ்பூன் மூல்தானி
மெட்டி பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை போட்டு, நன்கு
கெட்டியான ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
பின் அதனை முகம் மற்றும்
கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவ
வேண்டும். ஆனால் இந்த ஃபேஸ் மாஸ்க் சாதாரண சருமத்தில் இருப்பவர்களுக்கு
மிகவும் சிறந்தது.
ஏனெனில் இது சருமத்திற்கு ஈரப்பசையைத் தரும்.
மேலும் இது முகத்தில் முகப்பரு, பழுப்பு நிற சருமம் ஆகியவற்றை நீக்கி,
நன்கு ஒரு பொலிவான நிறத்தை தரும்.
இதனை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி: விடிகுரல்

Thu Mar 14, 2013 1:14 am
ஆண்களில் சிலரைப் பார்த்தால் வயது 50, 60 ஐ தாண்டினாலும் என்றும் 16 வயது
மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். இந்தத் தோற்றத்தை தக்கவைத்துக் கொள்வது
ஒன்றும் பெரிய பிரம்ம வித்தை அல்ல. உடலை நன்கு பராமரித்து வந்தாலே வயது
ஏறிக்கொண்டே போனாலும் குறைந்த வயதுத் தோற்றத்துடன் என்றும் மங்காத
இளமையுடன் வலம் வர முடியும். இதற்கு ஆணழகர்கள் ஆரோக் கிய வாழ்க்கைமுறையை
நாளும் பின்பற்றுவது அவசியம். இதன் காரணமாக, உடலின் தோற்றத்தில் பெரிய
மாற்றம் ஏற்பட்டு, தோலின் நிறம் முதல் தலைமுடி வரை பளபளப்புடன் பொலிவுறும்.
தோல் பராமரிப்பு
உங்கள்
தோல் காய்ந்து போவதில் இருந்து பாதுகாக்க, ஈரத் தன்மை மிக்க
'மோய்ஸ்ச்சரைசரை' பயன் படுத்துவது முக்கியம். 'சன் ஸ்கிரீன்
லோஷனை''பயன்படுத்து வதால் சூரிய ஒளிக்கதிர்களின் தாக்குதலில் இருந்து
விலகி, மூப்படையும் தன்மையில் இருந்து இளமை பாதுகாப்பைப் பெறலாம்.
'ஆண்கள்
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் அவர்களின் தோற்றத்தில் மாபெரும்
மாற்றத்தைக் காண லாம்,' என்று 'த ஸ்-கின் டைப் ஸொலுயூஷன்' என்ற
புத்தகத்தின் ஆசிரியரும், தோல் சிகிக்சை நிபுணருமான டாக்டர் லெஸ்லி
பாவ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Thu Mar 14, 2013 1:18 am
ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் 'மார்க்கண்டேயனாகவே' தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது
பிரம்ம வித்தையோ அல்ல. . . ! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிகொண்டு போனாலும்,
குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்
காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ். . .
நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை
உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம்
தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை
பயன்படுத்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை
பாதுகாக்கும்.
பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக்காடு
கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும்
புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை
காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு
சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம்
காணப்படுகிறது.
தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக
முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை
பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும்
திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு
செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.
ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க...
தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு
குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள
வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த
பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும்
காணப்படும்.
மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர்
போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க ...
மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின்
உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று
அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தூக்கம் கெடுவதால்...
உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது
6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால்
மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும்
பொலிவு ஏற்படும்.
இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க
வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை
கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தமது
கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும்
கூடிக்கொண்டே போகும்.
நன்றி: சிறுபிட்டி வலைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum