‘அற்புதமா?’...................
Thu Jun 09, 2016 9:07 am
விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper
June 7 at 3:29pm ·
காஞ்சி ‘மகா பெரியவாளின்’ (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) ஞான திருஷ்டி குறித்து மாலை மலர் அளந்து கொட்டியுள்ளது அல்லவா?
மயிலாப்பூர் கற்பகாம்பாள் கடவுளச்சி சென்னை மயிலாப் பூர் முத்துலட்சுமி அம்மாள் கனவில் தோன்றி தனக்குத் தங்கத்தில் லலிதா சகஸ்ரநாம காசு மாலை பண்ணிப் போடு என்று சொன்னது, காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எப்படித் தெரியும்? ஆகா மகா பெரிய வாளின் சக்தியோ சக்தி என்ற ஆனந்தக் கூத்தாடியுள்ளது மாலை மலர் ஏடு.
இப்படிதான் ‘தினமணி’ குழுமத்தின் ‘தினமணிக் கதிர்’ (22.8.1975) ஒரு செய்தியை அவிழ்த்து விட்டது.
“ஆகஸ்டு 15 (1975)ல் சென்னை டெலிவிஷன் துவக்க விழா நடைபெற்றதல் லவா... அந்த நிகழ்ச்சியிலேயே காஞ்சி காமகோடி சங்கராச்சாரி யாரின் பாத பூசையைப் படம் எடுத்து டெலிவிஷனில் காட்டி விட வேண்டும் என்ற கொள்ளை ஆசையாம்! அதற்கான முயற் சியில் ஈடுபட்டார்களாம். ஆனால் ஆச்சாரியார் மறுத்து விட் டாராம்;
மீறி சென்னை டெலிவி ஷன்காரர் படம் எடுத்த போது காமிராக்காரன் கை விளங்க வில்லை என்று இன்றைக்கு 41 ஆண்டுகளுக்குமுன் ‘தின மணிக் கதிர்’ கயிறு திரித்தது. (அது உண்மையில்லை என்பது பிறகு வெளியாகி விட்டது என்பது வேறு விடயம்)
அப்பொழுதே உண்மை இதழில் (1.9.1975 பக்கம் 30) காஞ்சி காமகோடிக்கும், புளுகு மணிக்கும் ஒரு சவால் என்று எழுதினோம்.
‘தினமணியாரே’ தினமணியாரே’ உங்கள் செய்தி உண்மையாக இருக்குமானால் நாங்கள் விடுக்கும் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாரா? நீங்கள் உங்கள் ஆச்சாரியாருடன் கலந்து ஒரு நாளையும், நேரத்தையும் குறிப் பிடுங்கள். அந்த நாளில் காமிரா சகிதத்துடன் நாங்களே - அங்கே வருகிறோம். ஆச்சாரியார் புகைப்படம் எடுக்க மறுப்புக் கூறட்டும் - நாங்கள் மீறி எடுக்கிறோம்!
அப்போது எங்கள் கை விளங்காமல் போகட்டும். கால்கள் முடமாகட்டும். அப்படி நடந்து விடுமேயானால், அந்தச் செய்தியை நாங்களே இலட்சக் கணக்கில் அச்சடித்து ஊரெல் லாம் - பறை சாற்றுகிறோம் - சரிதானா, ஏற்கத் தயாரா? உடன் பதில் இல்லை என்றால் உங்கள் கதை நாறி விடும்!’ என்று அன்று உண்மை இதழ் (1.9.1975) சவால் விட்டதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானது.
அத்தோடு ஒரு கொசுறு செய்தியும் உண்டு.
“மந்திர தந்திர அற்புத சாகச சித்துகள் செய்பவர்களுக் கும், இந்து மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர் களை இந்து மதம் அங்கீகரிக் கவும் செய்யாது” இப்படி சொன்னவர் யார்? சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிதான். எங்கு சொன்னார்? காஞ்சியில் நடந்த உலக இந்து மத மாநாட் டில் தான் சொன்னார். ஹி.. ஹி.. எல்லா இடத்திலும் அடி வாங்குதே, என்ன சொல்ல!
- மயிலாடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum