ஜாலியான டிராவலுக்கு இன்ஷூரன்ஸ் : இந்த 5 விஷயங்களையும் கவனியுங்கள்
Fri Jun 03, 2016 12:38 pm
- அமித் பண்டாரி, தலைவர் (ஹெல்த் அண்டர்ரைட்டிங் அண்ட் க்ளெய்ம்ஸ்), ஐசிஐசிஐ லொம்பார்ட்
பயணம் போவதில் பெரும்பாலானோருக்கு அலாதியான பிரியம் இருக்கும். ஆனால் பெரும்பாலான பயணங்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்தாலும் இயல்பாகவே ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அப்படியும் பயணம் போன பிறகு தெரியாத ஊரிலோ நாட்டிலோ ஏதேனும் அசம்பாவிதமோ உடல் நலக்குறைவோ திருட்டோ நடந்தால் ஏற்படும் பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் மீண்டும் பயணத்தைப் பற்றி நினைக்கவே கூடாது என்று நினைக்க வைத்துவிடும்.
இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் பயணம் தேவைதானா என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.
ஆனால் எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் நாம் போகும் பயணத்தைச் சுகமாகவும் மேலும் பயணங்களைத் திட்டமிடவும் வேண்டுமென்றால் ஒன்றே ஒன்று செய்தால் போதும். அது சுற்றுலா காப்பீடு (டிராவல் இன்ஷூரன்ஸ்).
டிராவல் இன்ஷூரன்ஸ் இருந்தால் பொருட்கள் பறிபோவது பற்றியோ, மருத்துவ செலவுகள் குறித்தோ கவலைப்படவே தேவையில்லை. டிராவல் இன்ஷூரன்ஸ் இப்போது பல நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. சீசன் நேரங்களில் பலவிதமான பேக்கேஜ்களும் சலுகைகளும் கூட வழங்கப்படுகின்றன.
உங்களுடைய பிரத்யேக தேவை என்ன என்பதன் அடிப்படையில் நீங்கள் டிராவல் இன்ஷூரன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
டிராவல் இன்ஷூரன்ஸ்களில் என்னவெல்லாம் கவராகும்?
தவறவிட்ட / ரத்துசெய்யப்பட்ட விமான சேவை, தொலைக்கப்பட்ட / திருடப்பட்ட பொருட்கள், தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும் மருத்துவ செலவுகள் ஆகியவை டிராவல் இன்ஷூரன்ஸ்களில் கவராகும்.
அனைத்து நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கவரேஜ்களை வழங்கினாலும் சில வித்தியாசங்கள் இருக்க வாய்ப்புண்டு. எனவே, விண்ணப்பத்தில் கையெழுத்திடும் முன் பாலிசி டாக்குமென்டை முழுவதுமாகப் படித்து விடவும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்:
1. உங்களுடைய டிராவல் பாலிசியின் கவரேஜ் உங்களுடைய பயணம் தொடங்கும் முதல் நாளிலிருந்து ஆரம்பிக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் திடீரென்று, உங்களுடைய பயணத்தை ரத்து செய்தாலும், பயண நாட்களைக் குறைத்தாலும் அதற்கேற்ப க்ளெய்ம் செய்ய முடியும். தவறவிட்ட விமானத்திற்காக க்ளெய்ம் கோரும்போது அதற்கு தகுதியான காரணம் ஆதாரத்துடன் வழங்க வேண்டும். இல்லையென்றால் க்ளெய்ம் கிடைக்காது. வரும் வழியில் கார் பிரச்னை என்றால் அதன் மெயின்டனன்ஸ் விவரங்களைத் தர வேண்டும்.
2. உங்களுடைய கட்டுப்பாட்டை மீறி நடக்கும் இயற்கை சீற்றங்கள், அரசியல் காரணங்கள் அல்லது தொழில்துறை நடவடிக்கைகளால் விமான சேவை ரத்து செய்யப்பட்டால், திட்டமிட்டபடி பயணத்தை முடிக்க விரும்பினால் உங்களுடைய பயண நாட்களை நீட்டித்துக்கொள்வது குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பேசி கவரேஜ் குறித்து தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
4. அனைத்து டிராவல் பாலிசிகளிலும் கவரேஜ் குறித்த நிபந்தனைகளும் விளக்கங்களும் உள்ளன. உதாரணத்திற்கு வருடாந்திர டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றால் தொலைவும், நாட்களும் முக்கியமான காரணிகளாக எடுத்துக்கொள்ளப்படும். பயண நாட்களில் ஏற்படும் உடல்நலக் குறைவு, விபத்து போன்றவற்றிற்கு கவரேஜ் உண்டு. முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும்.
5. டிராவல் செய்யும்போது உங்களுடைய பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூட்டப்பட்ட பெட்டியிலிருந்து திருடு போவதற்கு இழப்பீடு தர இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தயார், ஆனால் அஜாக்கிரதையாகப் பணத்தை வெளியே வைத்து தொலைத்ததற்கு இழப்பீடு தரமாட்டார்கள். இன்ஷுரன்ஸ் இருக்கிறதே என்று அஜாக்கிரதையாக இருந்தால் கவரேஜ் மறுக்கப்பட வாய்ப்புண்டு.
தொகுப்பு: ஜெ.சரவணன்

3. டிராவல் இன்ஷூரன்ஸ் கவரேஜ்கள் பயண இடத்தைப் பொறுத்து மாறலாம். உதாரணத்திற்கு 'வேர்ல்டு கவர்' என்ற கவரேஜ் எப்போதுமே அமெரிக்கா, கனடா அல்லது கரீபியன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்காது. எனவே உங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் நீங்கள் போகும் இடத்திற்கு / நாட்டிற்கு அவர்களது பாலிசி கவரேஜ்கள் என்னென்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். குறைவான நபர்கள் மட்டுமே பயணமாகும் இடத்திற்கு போகிறீர்கள் என்றால் அதற்கு தகுதியான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு அந்த இடத்திற்கான கவரேஜ் மறுக்கப்படலாம். இதனை நிறுவனத்திடம் பேசி கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.
4. அனைத்து டிராவல் பாலிசிகளிலும் கவரேஜ் குறித்த நிபந்தனைகளும் விளக்கங்களும் உள்ளன. உதாரணத்திற்கு வருடாந்திர டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றால் தொலைவும், நாட்களும் முக்கியமான காரணிகளாக எடுத்துக்கொள்ளப்படும். பயண நாட்களில் ஏற்படும் உடல்நலக் குறைவு, விபத்து போன்றவற்றிற்கு கவரேஜ் உண்டு. முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும்.
5. டிராவல் செய்யும்போது உங்களுடைய பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூட்டப்பட்ட பெட்டியிலிருந்து திருடு போவதற்கு இழப்பீடு தர இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தயார், ஆனால் அஜாக்கிரதையாகப் பணத்தை வெளியே வைத்து தொலைத்ததற்கு இழப்பீடு தரமாட்டார்கள். இன்ஷுரன்ஸ் இருக்கிறதே என்று அஜாக்கிரதையாக இருந்தால் கவரேஜ் மறுக்கப்பட வாய்ப்புண்டு.
தொகுப்பு: ஜெ.சரவணன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum