ஜெபிப்போம் - மனைவியை ஒதுக்கிய கணவனின் மூடநம்பிக்கை மாற
Fri Jun 03, 2016 9:51 am
கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்ததாக திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மனைவியை கணவன் புறக்கணித்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சாதி பஞ்சாயத்துக் கூட்டத்தில் மனைவியை தள்ளி வைப்பதாக கணவன் தெரிவித்துள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்ய முயன்ற மணப்பெண்ணையும் அவரது தாயாரையும் வீட்டில் பூட்டி வைத்துள்ளனர்.
இது குறித்து மகாராஷ்டிரா அந்தாஸ்ரதா நிர்மூலன் சமிதியின் ஒருங்கிணைப்பாளர் அவிநாஸ் படீல் கூறும்போது, "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு (20 வயது). அண்மையில் நாசிக்கைச் சேர்ந்த 25 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இருவருமே காஞ்சர்பாத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சமூக வழக்கத்தின்படி திருமணமான புதுமணத் தம்பதிகள் வெள்ளை விரிப்பு கொண்ட படுக்கை மீது உறவு கொள்ள வேண்டும். உறவுக்காரர்கள் அனைவரும் வீட்டைச் சுற்றி காத்திருப்பர். பின்னர், தம்பதிகள் படுத்திருந்த விரிப்பில் ரத்தக் கறை இருக்கிறதா என்பதை சோதிப்பர். அவ்வாறு இல்லை என்றால் பெண்ணுக்கு கன்னித்தன்மை இல்லை எனக் கூறி அவளை தள்ளி வைப்பர். அதேபோல்தான் இந்த திருமணத்திலும் படுக்கை விரிப்பில் ரத்தக் கறை இல்லாததால் பெண் கன்னித்தன்மை அற்றவள் எனக் கூறி மணமகன் அவளை ஒதுக்கி வைத்துள்ளார். சாதி பஞ்சாயத்துத் தலைவர்களும் திருமணத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தான் போலீஸ் தேர்வுக்காக பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொண்டதாலேயே தன்னால் கன்னித்தன்மை சோதனையில் வெற்றி பெற முடியாமல் போனதாக அப்பெண் விளக்கமளித்தார். ஆனால், அவர் வாதத்தை யாரும் ஏற்கவில்லை. மேலும், மணமகன் வீட்டார் பெண் வீட்டார் கொடுத்த நகைகளை திரும்பத் தர மறுத்துவிட்டனர்.
இருப்பினும், திருமணத்தை செல்லத்தக்கதாக அறிவிக்க வேண்டும் என்றால் மணப்பெண் தவறுக்கு பிராயச்சித்தமாக மற்றுமொரு சோதனைக்கு உட்பட வேண்டும் என பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.
அதாவது மணப்பெண்னுக்கு பஞ்சாயத்தார் ஒரு மீட்டர் நீள துணியை தருவர், அதை மேலாடையாகவோ அல்லது கீழாடையாகவோ அணிந்து கொண்டு அரை நிர்வாணமாக அவள் ஓட வேண்டும். அவளை துரத்தும் பஞ்சாயத்து ஆண் உறுப்பினர்கள் அவள் மீது சூடான மாவுப் பந்தை வீசுவர். அதை பொறுத்துக் கொண்டு அவள் ஓட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த போட்டியை தான் ஏற்கப்போவதில்லை என மணப்பெண் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து திருமண ரத்து உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மணப்பெண்ணும் அவரது தாயாரும் போலீஸில் புகார் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரையும் பெண் வீட்டாரே பூட்டி வைத்தனர். போலீஸுக்கு சென்றால், சாதிப் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனக் கூறி பெண்ணின் தந்தையே அவர்களை பூட்டி வைத்துள்ளார்" என நடந்த சம்பவங்களை விவரித்தார்.
இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில சமூக புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹமீத் தபோல்கர் கூறும்போது, "இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கே மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வன்கொடுமைகளை தடுக்க உடனடியாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்" என்றார்.
நம் தேசத்தில் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் அகல ஜெபித்துக் கொள்வோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum