"தலாக்'குக்கு தடை கோரி 50,000 முஸ்லிம்கள் மனு..
Thu Jun 02, 2016 1:06 pm
"தலாக்'குக்கு தடை கோரி 50,000 முஸ்லிம்கள் மனு..
முஸ்லிம் தங்களது மனைவிகளிடம் மூன்று முறை "தலாக்' கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி, பாரதிய முஸ்லிம் மஹிளா அந்தோலன் (பிஎம்எம்ஏ) என்ற இஸ்லாமிய பெண்களின் அமைப்பின் சார்பிலான மனுவில், 50,000 முஸ்லிம்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும், இந்த நடைமுறை குரானுக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎம்எம்ஏ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜாகியா சோமா, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது:
தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரும் எங்களது மனுவில், வலைதளம் மூலமாக 50,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். எங்களது கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு, தேசிய மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளோம்.
"குடும்பத்துக்குள் நீதி கோருதல்' என்ற பெயரில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், வாய்மொழியாகவும், ஒருதலைபட்சமாகவும் மேற்கொள்ளப்படும் "தலாக்' முறைக்கு, சட்டரீதியாக தடை விதிக்குமாறு 92 சதவீத முஸ்லிம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு விவாகரத்து செய்வதால், அந்தப் பெண்களின் வாழ்க்கையும், அவர்களது குழந்தைகளின் வாழ்க்கையும் நாசமடைகின்றன.
மேலும், கணவன் "தலாக்' கூறி செய்த விவாகரத்தைத் திரும்பப் பெறுவதற்கு, வேறு நபரைத் திருமணம் செய்து "தலாக்' பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது (நிக்காஹ் ஹலாலா). இந்தக் கொடிய நடைமுறைக்கும் தடை விதிக்க வேண்டும் என்றார் ஜாகியா சோமா.
இதனிடையே, "தலாக்' முறைக்கு தடை விதிக்கக் கோருவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு, அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் சைஷ்டா அம்பர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மார்க்கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "தலாக்' முறைக்கும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரும் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum