எச்-1-பி விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா!
Sat May 28, 2016 7:31 pm
கடந்த டிசம்பரில் இருந்து அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, இந்திய ஐடி நிறுவனங்களின் எச்-1-பி விசா கட்டணம்
ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 4,000டாலர் ( இந்திய ரூபாயில் சுமார் ரூ.2,68,000) வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
அமெரிக்க பெடரல் சிட்டிசன்ஷிப் அண்டு இம்மிகிரேஷன் சர்வீசஸ் என்ற அமைப்பு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி எச்-1-பி மற்றும் எல்-1 விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் எச்-1- பி என்பது அமெரிக்காவில் வெளிநாட்டினரை பணியமர்த்துவது, நிபுணர்களின் சேவைகளை பெறுவது போன்றவற்றுக்கான விசா ஆகும்.
எல் -1 என்பது அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ள சர்வதேச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான விசா ஆகும்.
புதிய விதிமுறைகள் படி, இனி ஒவ்வொரு எச்-1-பி விசா விண்ணப்பத்துடன் அதற்கான புதிய கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கூடுதல் கட்டணத்தை தனி காசோலையாக செலுத்த வேண்டும்.
புதிய முறையில் எச்-1-பி விசா கூடுதல் கட்டணம் 4,000 டாலராகவும், எல்-1 விசா கூடுதல் கட்டணம் 4,500 டாலராகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட முடிவு என இத்துறையினர் கூறுகின்றனர்.
இதை கைவிட வேண்டும் என ஏற்கெனவே இந்தியாவின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
- குலுக்கல் முறையில் எச் 1 பி விசா வழங்க அமெரிக்கா திட்டம்
- 38 நாடுகளுக்கு சென்று இறங்கி விசா எடுத்து கொள்ளலாம். (ஆன் அரைவல் விசா) இந்திய பாஸ்போர்டுக்கு.
- ஏழு மணி நேரத்தில் பிரிட்டன் விசா சூப்பர் ப்ரையாரிட்டி விசா அறிமுகம்…….!
- ஏழு மணி நேரத்தில் பிரிட்டன் விசா சூப்பர் ப்ரையாரிட்டி விசா அறிமுகம்…….!
- விசா வாங்க வழிகாட்டும் எளிதான இணைய தளம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum