பெங்களூருவில் தேவாலயத்தை இடித்துத் தரை மட்டமாக்கிய மத வெறியர்கள்
Sat May 28, 2016 2:43 pm
பெங்களூருவில் தேவாலயத்தை இடித்துத் தரை மட்டமாக்கிய மத வெறியர்கள் மற்றும் சமூக விரோதிகள்!
--------------------------------------------------------------------------------------------------------
1988ம் வருடம் முதல் இப்போதைய எங்கள் ஆலயம் இருக்கும் தெருவிலிருந்து 2 தெரு தாண்டி இருந்த ஃபெய்த் லூத்தரன் தமிழ் சர்ச் நேற்று இரவு 11 மணிக்கு மேல் மத வெறியர்கள் மற்றும் சமூக விரோதிகளால் ஜே.சி.பி மெஷின் மூலம் நிர்மூலமாகத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. அருகில் வசித்தவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
6 மாதங்களுக்கு முன்பும் இதே போலத் தாக்கினார்கள், சட்டப்பூர்வமான நடவடிககைகள் எடுத்தும் பலனேதுமில்லை.
நேற்று இரவு காவலாளிகளைத் தாக்கித், தூக்கி எறிந்துவிட்டுத் துணிகரமாக இக்கொடிய செயலைச் செயதுள்ளனர். சுமார் 3 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் நொறுக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்துக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வந்தபோதும் அதிகார வர்க்கம் ஆணவமாக இருந்ததின் விளைவுதான் இக்கொடிய செயல்.
அதிகாலை முதல் இயன்றவரை கிறிஸ்தவத் தலைவர்களை ஒன்றிணைத்து, அதிகாரிகளை மடக்கி, விரட்டிப் பிடித்து, போராடி மாலை 7 மணிக்குத்தான் FIR போட வைத்துவிட்டு, எஙகள் சபை வாலிபர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி இரவில் அந்த ஆலயக் காம்பவுண்டில் பாதுகாப்புக்குத் தங்க ஏற்பாடு செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளேன்.
நாளைக் காலை அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கவுள்ளோம். ஜெபித்துக் கொள்ளுங்கள்.
கிறிஸ்தவர்கள் வெறும் ஓட்டு வங்கிகளல்ல, இந்நாட்டின் முதுகெலும்புகள் என்பதை நிருபித்தேயாக வேண்டிய கட்டாயம் கர்நாடக மாநிலத்திலுள்ள எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தயவுசெய்து, சபைகளும், ஊழியர்களும் பாகுபாடுகளை மறந்து உள்ளூர் ஊழியர்களாகிய எங்களோடு இணைந்து நிற்கும்படி ஒருமனதின் ஆவிக்காகத் தயவுசெய்து ஜெபித்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு:
ஜெப உதவிக்காக இதை தயவுசெய்து SHARE செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum