தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராக அட்டகாசமான 7 'ஆப்ஸ்'! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராக அட்டகாசமான 7 'ஆப்ஸ்'! Empty அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராக அட்டகாசமான 7 'ஆப்ஸ்'!

Tue May 24, 2016 9:39 am
அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராக அட்டகாசமான 7 'ஆப்ஸ்'! App600
ப்போது எல்லாமே ஆப் மயம்தான். டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், கல்வி சார்ந்த ஆப்களும் கொட்டிக்கிடப்பதை நாம் அறிவோம். ஆனால், அதில் எந்த ஆப் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக அமையும்,  நம் வாழ்க்கையை எப்படி வளப்படுத்திக்கொள்ள உதவும் என்பதில்தான் நம் திறமை வெளிப்படும்.
இந்திய வரலாறு தொடங்கி , கணிதம், அகராதி, செயல்திறன், ஆங்கிலம், பொது அறிவு, போட்டித் தேர்வு... என துறைதோறும் குவிந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான ஆப்ஸில் சிறந்தது எது என்பது குறித்த ஒரு கண்ணோட்டம் இங்கே... 


TNPSC தமிழ்

இதில், டி.என்.பி.எஸ்.சி-யின் குரூப் தேர்வுகள் , வி.ஏ.ஓ மற்றும் TET தேர்வுகளுக்கான தினசரி வினாக்கள்,அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராக அட்டகாசமான 7 'ஆப்ஸ்'! Tnpsc நடப்பு நிகழ்வுகள், தேர்வு வரைமுறைகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள உதவும். எந்தெந்த துறையில் அரசு பணிகளுக்கான வாய்ப்பு இருக்கிறது , எத்தனை இடங்கள் இருக்கின்றன என பல்வேறு தகவல்களைத் தெரிவித்துக்கொண்டே இருக்கும். இதில் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள், திறனாய்வு மற்றும் மனத்திறன் பயிற்சி, பாடத்திட்டம் என அரசு தேர்வுகளுக்கு படிக்கவும் பயிற்சி எடுத்துக்கொள்ளவும் உதவும் சூப்பர் ஆப்.

IAS

பெயரைப் பார்த்தவுடனே புரிந்திருக்கும். இது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது. நடப்பு நிகழ்வுகள், கேள்வி-பதில்கள், குறிப்புகள், தேர்வுமுறைக்கான பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் எனத் தேர்விலும் வாழ்விலும் தேர்ச்சி பெறுவதற்கான பெஸ்ட் ஆப்.


Indian History , Book & Quiz

இந்திய வரலாற்றை முழுமையாகத் தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஆப். 9000 BC பீம்பெட்கா ராக் ஷெல்டர்ஸ் (BHIMBETKA ROCK SHELTERS) தொடங்கி,  சிந்துசமவெளி நாகரிகம் முதல் இந்தியாவின் மன்னர்கள் ஆட்சி , சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் என இந்திய வரலாற்றை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம். வரலாறு என்றவுடன் `ஐயய்யோ...அது பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்குமே!' என சோர்ந்து போக வேண்டாம். வரலாற்று நிகழ்வுகளில் நாம் தெரிந்துகொள்ளாத சுவாரஸ்ய தகவல்களையும் இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். கலிங்கப் போர் என்றால், வருட ரீதியிலான முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த ஆப்பில், அந்த முக்கிய நிகழ்வுகளுடன் அதற்கான பின்னணியை சொல்வதோடு நிகழ்வுகளுக்கான காரணங்களை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகச் சொல்லும். ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஆப்களில் இதுவும் ஒன்று. 


அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராக அட்டகாசமான 7 'ஆப்ஸ்'! MathstricksMath Tricks

பிரைன் ட்ரெய்னர் ஆப்பான இதன் மூலம் கூட்டல், வகுத்தல், பெருக்கலைத் தாண்டி, கணிதத்தின் வெவ்வேறுவிதமான செயல்முறைகளையும், அதை சுலபமாகக் கையாளும் முறை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மேலும், சட்டென பதிலைச் சொல்லி சடுதியில் அசத்த, இந்த ஆப் நிச்சயம் உதவும்.


World G.K

பொதுஅறிவுப் பிரியரா நீங்கள்? உலகத்தில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுத் தருகிறது இந்த ஆப்.


Aptitude

போட்டித் தேர்வுகளிலேயே பொக்கிஷமாகத் திகழ்வது ஆப்டிட்யூட் கேள்விகள். காரணம், கேள்விகளுடன் பதில்களையும் கொடுத்து, கொள்குறியின் மூலம் பதில்களைத் தேர்வுசெய்தால் போதும் என்பதால் என்பதால், இந்த வகை தேர்வில் அநேகர் வெற்றி பெறுவர். இருப்பினும் அதில் சாதாரண வெற்றி பெறுவதைவிட மகத்தான வெற்றி பெற்று மதிப்பெண்கள் மூலம் நமக்கான பதவியைத் தேடித்தரக்கூடிய தோழமையான ஆப் இது.


English to Tamil

தமிழ் அகராதி ஆப். நாம் அன்றாடம் பழகக்கூடிய வார்த்தைகளைத் தவிர்த்து, தமிழின் சாரத்தை ஆழமாகப் பதியவைக்கக்கூடிய வார்த்தைகளுக்கான பொருள்கள் என்ன, அது எதைக் குறிக்கிறது என்பது போன்ற வார்த்தைகளுக்கான விளக்கங்களை தெரிந்துகொள்வதோடு, வார்த்தை விளையாட்டு விளையாடுவதற்கான தமிழ் வார்த்தைகளை சுலபமாகத் தெரிந்துகொள்ளவும், பொது அறிவு, தினசரி செய்தி சுருக்கம், திறனாய்வு என பல தரப்புகளில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கான பொருளை அறிந்துகொள்ளவும் இந்த ஆப் கைகொடுக்கும்.

- கே. அபிநயா
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum