எந்த செலவுமின்றி இலவசமாக M.B.B.S. கற்க வேண்டுமா?
Mon May 16, 2016 5:33 am
இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக M.B.B.S!
நாட்டிலுள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும். கட்டணம் எதுவும் இல்லாலும், கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரவும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.12 ஆயிரம், யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில் ரூ.6 ஆயிரம், அடுத்த ஆண்டு உடைகள் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.1,250, முடி வெட்ட மாதம் ரூ.100 வழங்கப்படும். இதுபோன்று மாணவர்களுக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு படிப்பு முடித்த பின்பு இந்திய ராணுவத்தில் நிரந்தரம் அல்லது குறுகியகாலப் பணியில் மருத்துவராக பணியாற்றலாம்.
மகாராஷ்ட்ரா யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இந்தக் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 130 இடங்களில் 105 மாணவர்களும், 25 மாணவிகளும் சேர்க்கப்படுவார்கள். இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க முடியும்.
இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கா அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் (AIPMT) நுழைவுத் தேர்வை எழுதி இருக்க வேண்டியது அவசியம். மேலும் ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் விண்ணப்பித்து, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ள மாணவர்களில் தகுதியுடைய மாணவர்கள், மற்றொரு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
எந்தவிதச் செலவுமின்றி இலவசமாக எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள், அதாவது ஏற்கனவே அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2016. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.afmc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum