தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
'கீமோ’ என்றால் என்ன? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

'கீமோ’ என்றால் என்ன? Empty 'கீமோ’ என்றால் என்ன?

Sat May 14, 2016 2:12 pm
மருத்துவர் கு.சிவராமன்

'கீமோ’ - இந்தச் சொல் தரும் வலியும் பயமும்போல், அநேகமாக வேறு சொல் மருத்துவ உலகில் இப்போதைக்கு இல்லை. நோயைப் பற்றி அதிகம் புரியாத, அதீத பயமும் மன அழுத்தமுமான சூழலில், இந்தச் சொல் பல நேரங்களில் தவறாகவும் பதற்றத்துடனும்தான் பார்க்கப்படுகிறது. 'ஐயோ... கீமோ தெரபியா?’ என்ற பக்கத்து நபரின் விமர்சனமும், 'முடி கொட்டிடுமே... ரத்த அணுக்கள் குறைந்திடுமே... மிகுந்த உடல் சோர்வைத் தந்திடுமே’ என எங்கோ கேள்வியுற்ற தலை, வால் இல்லாத செய்திகளும் சேர்ந்துகொண்டு, கீமோதெரபி பற்றிய அதீத பயத்தைக் கிளப்பிவிடுகிறது.   
'கீமோ’ என்றால் என்ன, ஏன் இந்தப் பதற்றம், கண்டிப்பாக இது அவசியமா, தவிர்க்க முடியுமா, இந்த மருந்து, நம்முள் என்ன செய்யும், நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவசரமாகவே பேசும் மருத்துவரிடம் எதைக் கேட்பது... என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் காண, கொஞ்சம் விரிவாக விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கட்டற்றுப் பெருகும் செல்களை அழிக்கும் மருந்துதான் கீமோ. தொடக்கத்தில் கேன்சர் செல் மட்டும் அல்லாது எல்லா செல்களையும் அழித்துவிடும் ஆபத்தோடு இருந்த இந்த மருந்துகள், இப்போது தொல்லைதரும் வளர்ச்சியைக் குறிவைத்து அழிக்கும் மருந்தாக மாறியுள்ளன. 'குறைந்த நுண்ணிய அளவில் கொடுத்தால் பயன் இல்லை. கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் பக்கவிளைவுகள் பெருகுகின்றன’ என்ற பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், சில ரத்தப்புற்று வகைகளைக் குணப்படுத்தும் வகையில் இந்தத் துறை வளர்ந்திருக்கிறது என்பதுதான் காய்ப்பு உவப்பு இல்லாத உண்மை. குணப்படுத்த இயலாத பல புற்றுநோய்களுக்கு நோயின் தீவிரம் மிகுகையில் குறைந்தபட்சம் நோயாளியின் துயரத்தையும் வலியையும் பல்வேறு புது அவஸ்தைகளையும் வராது காக்கவும், வாழ்நாளைக் கூட்டவும் இந்த மருந்துகள் பயன்படுகின்றன.
'கீமோ’ என்றால் என்ன? P54a
உயிர் உதிர்வதைவிட சிலகாலம் மட்டும் மயிர் உதிர்வது பெரிது அல்ல என்ற நிலைப்பாட்டிலும் எச்சரிக்கையாக, 'யாருக்கு, எந்த அளவில், எப்போது, எது வரை?’ என்ற கணக்கில் இந்த மருந்தை அறம் சார்ந்து கையாள்வது காலத்தின் கட்டாயம். 'புற்றின் இந்தப் பிரிவுக்குப் பயனே இல்லை. இவருக்கு, இந்த வயதில் இந்த மருந்து அவசியம் இல்லை. இந்த அளவில் போதும்’ என்ற கணக்குகள் அடிப்படையில் கையாளப்படவேண்டிய மருந்துகள் அவை. ஆனால், அப்படித்தான் நடைமுறையில் நடக்கின்றனவா என்பதில் உலகெங்கும் அச்சமும் ஐயமும் நிறையவே உள்ளன. 'ஐந்து கீமோ எடுத்துக்கிட்டா, ஆறாவது கீமோ இலவசம்’ என்பதுபோல், இதில் ஆங்காங்கே நடக்கும் மருத்துவ வணிகங்கள், இந்த அச்சத்தை வளர்க்கின்றன. கூடவே, சில தன்னார்வத் தொண்டு மருத்துவ நிறுவனங்கள் தவிர, ஏனைய அடுக்குமாடி மருத்துவமனைகளின் வாசலுக்குக்கூட ஏழைப் புற்றுநோயர் நுழையவே முடியாது என்ற நிலைப்பாட்டை, கீமோ குறித்த பல அச்சங்களை சாமானியன் மனதுள் வணிகங்கள் விதைத்துள்ளன.
'கீமோ முழுதாகக் குணப்படுமா எனத் தெரியவில்லையே, வேறு என்ன செய்யலாம்?’ எனத் தயங்கியபடி அலைந்து திரியும் அப்பாவி நோயருக்கு முன்னால் பல செய்திகள். இணையத்தில் தேடினாலும் சரி, ஆங்காங்கே வாய்வழிச் செய்தியாகவும் சரி, பாரம்பர்ய மருத்துவ அனுபவங்கள் ஏராளமாகப் பேசப்படுகின்றன. நவீன சிகிச்சையின் கட்டற்ற விலையும், தெளிவான நிலையை விளக்க மறுக்கும் அல்லது தயங்கும் நவீன மருத்துவம் தரும் பயம் ஒரு பக்கம். 'நீங்க முதல்லயே வந்திருக்க வேண்டும். கீமோவுக்கும் முன்னர் பார்த்திருக்கலாம். அவசரப்பட்டு ஏன் கதிர்வீச்சு செய்தீர்கள்?’ எனப் பேசும், அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத, பாரபட்சம் இல்லா முடிவுகளை ஆவணப்படுத்தாத பாரம்பர்யம் இன்னொரு பக்கம். 'எதை நம்பி எங்கே போவது?’ என்ற குழப்பத்தில் ஏழைக் குடியானவன் திக்கற்று நிற்கும் இப்படியான காட்சிகள் இங்கே ஏராளம்!
'சார், அமைதிப் பள்ளத்தாக்கு பக்கம் கேரளாவில் ஒரு மூலிகைக் கஷாயம் கொடுக்கிறார்கள். ஷிமோகாவில் உள்ள ஒரு பட்டை, கேன்சருக்குப் பயன்படுகிறதாமே? சித்த மருத்துவச் செந்தூரம் ஒன்று பயன் அளிக்கிறதாமே? கொரியாவிலும் ஜப்பானிலும் இந்தக் காளானைப் பயன்படுத்துகிறார்களே! அக்குபஞ்சரில் நிறையவே வலி குறைந்து ஊக்கமான வாழ்வியல் உள்ளதாமே?’ இப்படிப் பல கேள்விகள் புற்றுநோயரிடம் உள்ளன. கொஞ்சம் தைரியத்துடன், நவீன மருத்துவரிடம் 'முயற்சிக்கலாமா?’ எனக் கேட்கப்படும்போது, அதைத் துளி அளவும் வினவாமல், அத்தனையும் ஒட்டுமொத்தமாகப்  புறக்கணிக்கப்படுவது இங்கே வாடிக்கையான, வேதனையான விஷயம். பாரம்பர்ய மருத்துவ அனுபவங்கள்தாம் நவீன மருத்துவத்தின் தொடக்கப்புள்ளிகள் என்பதை ஏனோ நம் ஊர் நவீன மருத்துவர்கள் ஏற்க மறுப்பதும் உற்றுப்பார்க்க மறுப்பதும் வேதனையே!  
தற்போது புற்றுநோய் சிகிச்சையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் Vincristine , நம்ம ஊர் நித்யகல்யாணிச் செடியில் இருந்து எடுக்கப்பட்டது. ரத்தப்புற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் இந்த மருந்தை இப்போது செடியில் பிரிக்காமல், ரசாயனத்தில் செதுக்க ஆரம்பித்துவிட்டனர். அதேபோல் சினைப்பை, நுரையீரல் மார்பகப்புற்று முதலான பல புற்றுநோய்களுக்கு கீமோ மருந்தாகப் பயன்படும் டாக்ஸால் (Taxol), பசிபிக்யூ மரப்பட்டையில் இருந்துதான் பிரித்து எடுக்கின்றனர். இதே டாக்ஸால் போன்ற சத்து, சளி-இருமலுக்கு சித்த-ஆயுர்வேத மருத்துவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும், தாளிசபத்திரியிலும் உண்டு என்கிறது நவீன உத்திகள்.
இன்றைய கீமோதெரபியின் வரலாறு விசித்திரமானது. கீமோவின் படைத்தலுக்குப் பின்னே, தன்னலம் அற்ற இருவரின் கூட்டு ஆய்வுகள் இருந்தன என்பது இப்போது எத்தனை பேருக்குத் தெரியும்? இங்கே சென்னையில் இருந்த ஒரு சுதேசிச் சிந்தனையாளனின் அறிவும் அதில் இருந்தது என்றால், எவ்வளவு ஆச்சர்யம்? இந்த வரலாறு நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.
'கீமோ’ என்றால் என்ன? P54b
முதலாம் உலகப் போரில் ஜெர்மானியர்கள், இங்கிலாந்து ராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் கொன்று குவிக்கப் பயன்படுத்திய விஷவாயுக் குண்டுகளில் (Mustard Gas Weapon)   இருந்துதான் கீமோ சிகிச்சையின் தத்துவம் பிறந்தது. ஏராளமான பொதுமக்களும் ராணுவ வீரர்களும் இந்த மஸ்டர்டு விஷவாயு தாக்கி உடல் முற்றும் பெரும் கொப்புளங்களைப் பெற்று மரணம் அடைந்தனர். 1910-களில் ஜெர்மன் தொடங்கிய வெறியாட்டத்தை உலக வல்லரசுகள் எல்லாம் பழகி, அவரவர் 'வெறி அறிவியல்’ அனுபவத்தில் பல மஸ்டர்டு வாயு குண்டுகளைத் தயாரித்தனர். இரண்டாம் உலகப் போர் வந்தபோது, தவறுதலாக தன் நேச நாட்டு இத்தாலி போர்க் கப்பலிலேயே மஸ்டர்டு வாயுக்குண்டை வீசப்போக, அதில் இருந்த பல அமெரிக்கப் போர் வீரர்கள் மாண்டனர். இறந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது, அனைவரின் வெள்ளை அணுக்களும் குறைந்திருப்பதை அமெரிக்க உலகம் கண்டறிந்தது. அப்போது பெருவாரியாக வெள்ளை அணுக்களின் கட்டுப்பாடற்ற உயர்வால் ஏற்படும் ரத்தப் புற்றுநோய்க்குச் சிகிச்சை தேடி அலைந்த விஞ்ஞானிகள், 'இந்த விஷவாயுக் குண்டு தந்த விளைவை ஏன் மருத்துவமாக மாற்றக் கூடாது?’ என நினைத்ததில்தான் முதல் கீமோ மருந்தாக Mustine பிறந்தது.
விஷவாயுக் குண்டுகளில் இருந்து பிறந்த Mustine அவ்வளவாகப் பயன் இல்லாததால், அதற்கு மாற்று தேடியபோது கீமோவின் தந்தை சிட்னி ஃபேபர், ரத்தப் புற்றுநோய்க்கு ஒரு மாற்றுச் சிந்தனையின் மூலமாக 'இப்படி ஒரு மருந்தைக் கண்டறிந்தால் என்ன... யார் இதைத் தயாரிப்பார்கள்?’ என யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது, 'நான் காந்தியவாதி... அந்நிய உடைகளை அணிய மாட்டேன். அந்த மருத்துவ கோட், அறுவைசிகிச்சை யூனிஃபார்ம் எல்லாம் போட மாட்டேன்’ எனச் சொல்லி, கதர் ஆடை அணிந்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் புரட்சியாளனாக வலம்வந்துகொண்டிருந்தார் அந்தக் கால மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த 'யேல சுப்பாராவ்’ என்ற மாணவன். ('குறைந்தபட்சம் மூன்று நோபல் பரிசாவது பெற்றிருக்கவேண்டியவர்’ என, சக உலக விஞ்ஞானிகளால் புகழப்பட்டவர். தன்னலம் அற்ற, சுதேசிச் சிந்தனையுடன் திகழ்ந்த இந்தியன் என்பதாலேயே அது மறுக்கப்பட்டதாம்!) அவரது சுதேசிச் சிந்தனையால் பெரும் கடுப்பாகி, அவருக்குப் பாடம் எடுத்த ஆங்கிலேய மருத்துவப் பேராசிரியர், 'அப்படியென்றால், உனக்கு எம்.பி.பி.எஸ் கொடுக்க மாட்டோம். இங்கே சுருக்கமாகப் பயிற்சி செய்ய அனுமதிப் பட்டயம் மட்டும் பெற்றுக்கொள்’ என சுப்பாராவைப் பழிவாங்கினார். அதை ஏற்று, சென்னையில் ஓர் ஆயுர்வேதக் கல்லூரியில் விரிவுரையாளராக தன் வாழ்வைத் தொடங்கினார் சுப்பாராவ். அவரது அதீத அறிவாற்றலைக் கண்ட இன்னோர் ஆங்கிலேயன் தன்னோடு கப்பலில் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல, அவரது ஆய்வு உலகளாவ விரிந்தது. அங்கு இருந்து உலகின் தலைசிறந்த பல மருத்துவ ஆய்வகங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றினார். கீமோதெரபிக்கான மருந்தைத் தேடி வந்த ஃபேபருக்கு இவரது நட்பு கிடைத்து, ரத்தப் புற்றுநோய்க்கு, 'இந்த மருந்தை நீ ஏன் பயன்படுத்தக் கூடாது?’ எனச் சொல்லி மீத்தோட்ரெக்சின் என்ற மருந்தை ஃபேபருக்குக் கொடுக்க, ஃபேபர் தன் நோயாளிகளுக்குக் கொடுத்து ரத்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த, கீமோதெரபி வரலாறு முறையாகப் பிறந்தது.
'கீமோ’ என்றால் என்ன? P54c
விஷத்தில் இருந்து பிறந்த வித்துதான் கீமோ. ஆனால், அதை மருந்தாக்கியது, ஒரு சுதேசிச் சிந்தனை கொண்ட இந்தியனின் தொழில்நுட்ப அறிவும், மனிதகுல நல்வாழ்வுக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்த மேற்கில் பிறந்த ஆங்கிலேய மருத்துவனின் மருத்துவச் சிந்தனையும்தான். இப்போதும் இப்படியான இந்த ஒருங்கிணைப்பு மிக அவசியமானது; மிக அவசரமானதும்கூட.
'கீமோ’ என்றால் என்ன? P54dபாரம்பர்யம் ஏதும் இல்லா அமெரிக்கா, அதை வெகுவேகமாக ஆராய்ந்துவருகிறது. அதிலும் அவர்கள் காப்புரிமை பெற்று வெகுசீக்கிரம் கோலோச்சுவார்கள். இங்கே ஒவ்வொரு வீட்டுப் பரணிலும் உள்ள வெங்கல உருளியிலும், முற்றத்தில் காயும் மூலிகை இலையிலும், சோற்றில் போடும் அன்னாசிப்பூவிலும், தோட்டத்து தூக்கணாங்கூட்டிலும் பாரம்பர்ய அனுபவங்கள் இன்னும் கொஞ்சம்தான் ஒட்டியிருக்கின்றன. மிச்சம் மீதியும் செத்துப்போகாமல் இருக்க, கூட்டு ஆய்வும் பயன்பாடும் மிகமிக அவசியம். நவீன கீமோவுடன் நாவில் தடவும் செந்தூரமும், நறுக்கெனக் குத்தும் அக்குபஞ்சர் சிகிச்சையும், மூச்சைப் பிடித்து ஆளும் யோக சிகிச்சையும் சேர்ந்து தரைப் படை, யானைப் படை, குதிரைப் படை என எதிரே நிற்கும் புற்றுப் படையைத் துவம்சம் செய்யும் நாள் இங்கே பிறக்கும். முன் எப்போதையும்விட இப்போதுதான்  ஃபேபர் - சுப்பாராவ் கூட்டணிக்கான தேவை அதிகம் இருக்கிறது!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum