வாழைபழ ஶ்ரீகண்ட் ஐஸ்க்ரீம்
Fri May 13, 2016 10:39 pm
வாழைபழ ஶ்ரீகண்ட் ஐஸ்க்ரீம்
தேவையானவை:
வாழைப்பழம் - 3
கெட்டித் தயிர் - 1 கப்
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 3 சொட்டுக்கள்
பொடித்த முந்திரி, பாதாம் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைப்பழங்களைத் துண்டுகளாக்கி ஒரு பவுலில் சேர்த்து ஃப்ரீசரில் 2 மணி நேரம் கெட்டியாகும் வரை வைக்கவும்.
பிறகு கெட்டித் தயிருடன் தேன், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த வாழைப்பழங்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து விப்பரில் சுற்றவும். அதனுடன் தயிர்க்கலவை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும்.
கலவையை ஐஸ்க்ரீம் கிளாஸ்களில் ஊற்றி, ஃப்ரீசரில் மீண்டும் 3 முதல் 4 மணி நேரம் கலவை கெட்டியாகி ஐஸ்க்ரீம் பதம் வரும் வரை வைக்கவும்.
பிறகு, வெளியே எடுத்து மேலே முந்திரி, பாதாம் தூவி பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum