மூணு (ட்ரை) கலர் இட்லி
Fri May 13, 2016 10:35 pm
தேவையானவை:
இட்லி மாவு - அரை கிலோ
(உப்பு கலந்தது)
ஆரஞ்சு கலருக்கு:
கேரட் - 1 (60 கிராம்)
பச்சை கலருக்கு:
புதினா - 50 கிராம்
கொத்துமல்லித்தழை -
50 கிராம்
பச்சைமிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு -
அரை பழம்
செய்முறை:
இட்லி மாவை உப்பு போட்டு கலக்கி மூன்று பவுலில் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளவும். கேரட்டை சிறிதளவு தண்ணீர் தெளித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து ஒரு பவுலில் கலந்து கொள்ளவும். புதினா, கொத்துமல்லித்தழை, பச்சைமிளகாய், ஒரு சிட்டிகை உப்பு, எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மற்றொரு பவுலில் இருக்கும் இட்லி மாவுடன் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். மூன்றாவது ஒரு பவுலில் இருக்கும் ப்ளைன் இட்லி மாவை அப்படியே வைத்திருக்கவும்.
இட்லித் தட்டில் ஒவ்வொரு குழியிலும் முதலில் ஆரஞ்சு நிற மாவை சிறிது ஊற்றி, அதன்மீது சிறிதளவு வெள்ளைநிற சாதாரண மாவையும், அதன்மீது சிறிதளவு பச்சைநிற மாவையும் ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வேகவைத்து எடுத்த இட்லியானது, தேசியக் கொடி போன்ற தோற்றத்தில் இருக்கும். ட்ரை கலர் இட்லியை காரச் சட்னி, தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum