Education Loan | கல்விக் கடன்
Thu May 12, 2016 6:38 pm
பண வசதி இல்லாத ஏழை மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.
உயர் கல்வி பெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
. இந்தியா மட்டும் இல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும். கல்விக்கடன் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் பெற முடியும்.
நம்நாட்டில் கல்வி 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடன் வழங்கப்படும்.
கல்விக் கடன் பெற வங்கி கேட்கும் அனைத்து ஆவணங்களை முறையாக சேகரித்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். உங்களுடைய அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, மாணவர் மற்றும் அவரது பெற்றோர் உடன் வங்கி அதிகாரி நேரடியாக கலந்துரையாடுவார். ஆண்டு வருமானம், குடும்பச் சொத்து, மாணவர் சேர்ந்துள்ள பாடப்பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள்.
கல்விக் குறைந்த பட்ச வட்டி விகிதம் கடன் தொகை ரூ.4 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேல் இருந்தால், குறைந்தபட்ச வட்டித் தொகையுடன், 1 விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறுபடும்.
கடன் ஜாமீன் ரூ.4 லட்சம் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. அதற்கு மேல் கடன் தொகை இருக்குமனால், சில நேரங்களில் மூன்றாம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும். வங்கிக் கணக்கில் பண வைப்பு அல்லது வீட்டு பத்திரம் போன்ற ஆதாரங்களை கடன் பெறும் போது அளிக்க வேண்டும்.
கடன் தொகையை, படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த அவசியம் தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன. படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும்.

கடனை திருப்பி அளித்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum