தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தைக்கான சிறப்பு என்ன ?  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தைக்கான சிறப்பு என்ன ?  Empty அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தைக்கான சிறப்பு என்ன ?

Wed May 11, 2016 9:32 pm
பொதுவாக அட்லஸ் என்றால் என்ன என்று பலரிடம் கேட்டால் அது உலக வரைபடம் என்பார்கள், இன்னும் சிலர் அட்லஸ் சைக்கிள் என்பார்கள் இன்னும் சிலர் அவர் ஒரு நடிகர் என்பார்கள் இப்படி ஒவ்வொருவரும் ஒரு பதில்களுடன் இந்த அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறார்கள் .

 சரி அப்படி என்றால் இந்த அட்லஸ் ( ATLAS ) என்றால்தான் என்ன இந்த அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தைக்கான சிறப்பு என்ன ? 

எதற்க்காக இதற்கு இந்த பெயர் வந்தது என்று கேட்டால் இந்த அனைத்துக் கேள்விகளுக்கான பதில்கள் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கக் கூடும் . இந்த அட்லஸ் ( ATLAS ) பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கத்தின் விளைவுதான் இந்த பதிவு. சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம் .

முதலில் இந்த அட்லஸ் ( ATLAS ) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம். நிலவியல் வரை படங்களின் தொகுப்பிற்குத்தான் அட்லஸ் என்று பெயர் . இதை உலக வரை படம் என்று அனைவருக்கும் தெரிந்த வகையிலும் சொல்லலாம் . இங்கு இரண்டு விஷயங்களை தெளிவாக சொல்லியாகவேண்டும் ஒன்று நிலவியல் என்றால் என்ன ? மற்றொன்று வரைபடம் என்றால் என்ன ? .

சரி இப்பொழுது முதலில் நிலவியல் என்றால் என்ன என்பதை பார்க்கலாம். நிலவியல் என்பது பூமி, அதன் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். 

நிலவியல் அறிவானது, புவியில், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, உரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது. இந்த நிலவியல் என்ற ஒரே வார்த்தையில் பல வேறுபட்ட பிரிவுகளும் இருக்கின்றன அது இப்பொழுது நமக்குத் தேவை இல்லை.

அடுத்ததாக வரைபடம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம் வரைபடம் என்பது ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் , பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு பார்வைக்குரிய அடையாள பிரதியாகும். 

வரைபடங்களுள் பல, முப்பரிமாண பரப்பின், நிலையான புவியியற்பிழையற்ற இருபரிமாண பிரதிகளாகவும், இன்னும் சில, சக்திவாய்ந்த ஊடுதலைக் கொண்ட முப்பரிமாண பிரதிகளாகவும் உள்ளன. 

இப்பொழுது அனைவருக்கும் நிலவியல் வரைபடம் என்பது பற்றி தெளிவாக புரிந்திருக்கக் கூடும் இவை அனைத்தையும் பற்றிய விரிவான வரைபடங்களின் தொகுப்பிற்குதான் அட்லஸ் என்று பெயர் .

சரி இப்பொழுது இந்த அட்லஸ் என்ற பெயர் எப்படி இந்த உலக வரைபடம் மற்றும் நிலவியல் வரைபடங்களின் தொகுப்பிற்கு வந்தது என்று பார்க்கலாம் . மிகவும் பழமை வாய்ந்த கிரேக்கப் புராணத்தின் அட்லசு என்பவன் கிரேக்க புராணங்களில் கூறப்படும் ஓர் அசுரன் (Atlas Titans).

ஒரு முறை அரக்கர்களுக்கு இடையிலான போரில் அட்லஸ் ( ATLAS ) கலந்து கொண்டு எதிரிகளுக்கு சாதகமாக செயல் பட்டதால் கோபம் கொண்ட கிரேக்கர்களின் தலைமைக் கடவுளான ஜீயஸ் விண்ணுலகைத் தாங்கி நிற்கும் படி அட்லசிற்கு தண்டனையை வழங்கினாராம் . பின்னாளில் அதே அட்லசை கிரேக்கர்கள் அனைவரும் சொர்க்கத்தை தாங்கி நிற்கும் கடவுளாகவும் வணங்கினார்களாம் . அது மட்டும் இல்லாது அந்த காலக் கட்டத்தில் இருந்த மன்னன் ஒருவன் சிறந்த கணித வல்லுனராகத் திகழ்ந்ததாகவும் அவனின் பெயரும் அட்லஸ் என்றும் கிரேக்கப் புராணங்களில் குறித்து வைத்திருக்கிறார்கள் .

உலக வரைப்படத்தை உருவாக்கிய டச்சு நாட்டுக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீரன் உலகை தாங்கிப் பிடிதிருப்பதுபோல் பல ஓவியங்களை வரைந்திருகிறார்கள் பின்னாளில் அந்த வீரனுக்கு அட்லஸ் என்றும் பெயரிட்டு அழைத்து வந்திருகிறார்கள் . பின்னாளில் அனைவரும் இந்த அட்லசை டச்சு வணிகர்ளுடன் இணைத்து பேசி இருக்கிறார்கள் . 

டச்சு நாட்டவர்களும் இவற்றை உண்மையாக்கும் பொருட்டு ஆம்ஸ்டர்டாமில் உள்ள உலக வணிக மையக் கட்டடத்தில் அட்லசு உலகைத் தாங்கி நிற்பது போன்ற சிலை ஒன்றையும் அமைத்து இருக்கிறார்கள் . அந்தக் காலக் கட்டத்தில்தான் உலக வரை படமும் வரைந்து முடிக்கப் பட்டு பெயர் சூட்டுவதற்க்காக தயார் நிலையில் இருந்திருகிறது . இதை அறிந்த டச்சுக் காரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உலக வரைபடத்திற்கு அட்லஸ் ( ATLAS ) என்றே பெயர் சூட்டினார்களாம்.

காலப்போக்கில் இதே அட்லஸ் என்ற சொல் ஒருபொருட் பன்மொழியாக ஒரே காரணத்தால் பல பொருட்களையும் குறிக்கப் பயன்பட்டது. 

அட்லசு எனும் சொல் குறிக்கும் பொருட்களாவன : 

உலக வரைபடம், World Map உலகைத் தாங்கி நிற்கும் டைட்டன், மனித உடலின் முதல் முதுகெலும்பு. போன்ற பலவற்றைக் குறிப்பது போன்று மாற்றம் பெற்றது .



அத்துடன் நின்றுவிடாமல் இந்த அட்லஸ் ( ATLAS Experiment ) , World Atlas அறிவியலின் பல வளர்சிக்கு பின்பும் அனைவரும் வியக்கும் ஒன்றிற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது .நம் உடலில் கபாலத்தைத் தாங்கி நிற்பது முதுகெலும்பு. 

மனித உடலில் மொத்தம் உள்ள 33 முதுகெலும்புகளில் முதலாவது முதுகெலும்பு அட்லசு எனவும் இரண்டாவது எலும்பு ஆக்சிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அட்லசு கபால எலும்புகளில் ஒன்றான ஆக்சிபிட்டல் எலும்புடன் இணைந்து இயங்கி வருகிறது.அத்தகைய சிரசைத் தாங்கி நிற்கும் முதுகெலும்பும் அட்லசின் நினைவாக அவன் பெயரிலேயே இன்றும் மருத்துவத் துறைகளில் புகழ் பெற்று விளங்குகிறது . 

என்ன நண்பர்களே அட்லஸ் ( ATLAS ) என்ற ஒரு சிறிய வார்த்தை எவளவு துறைகளில் கொடிகட்டி பறக்கிறது என்பதை இந்த தகவலின் வாயிலாக நீங்களும் அறிந்துகொண்டிருபீர்கள் என்று நம்புகிறேன் .
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum