ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவு வெளியீடு
Wed May 11, 2016 4:44 pm
சென்னை,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் டெல்லி பெண் டினா தாபி இந்தியாவில் முதலிடம் பெற்றார். சென்னை மனிதநேய மையத்தில் படித்த 46 பேர் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெல்லி பெண் முதலிடம்
2015-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில் அகில இந்திய அளவில் டெல்லியை சேர்ந்த பெண் டினா தாபி (வயது 22) முதலிடத்தை பிடித்தார். டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றிருப்பது முக்கிய அம்சம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இது எனக்கு பெருமிதத்துக்குரிய தருணம்” என குறிப்பிட்டார்.
2-வது இடம்
2-வது இடத்தை காஷ்மீரை சேர்ந்த அத்தர் அமீர் உல் ஷபிகான் பெற்றார். இவர் 2-வது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். 2014-ம் ஆண்டு இவர் முதல் முயற்சியில் ஐ.ஆர்.டி.எஸ். எனும் இந்திய ரெயில்வே போக்குவரத்து பணிக்கு தேர்வாகி, தொடர்ந்து பயிற்சி பெற்றுவந்தார். இப்போது அவர் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வாகி இருப்பது குறித்து, “என் கனவு நனவாகி இருக்கிறது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
டெல்லியின் ஜஸ்மீத்சிங் சந்து 3-வது இடம் பெற்றார். இவரும் 2014-ம் ஆண்டு 3-வது முயற்சியில் தேறி, ஐ.ஆர்.எஸ். என்னும் இந்திய வருவாய் பணி கிடைத்தது. தேசிய சுங்கம், கலால், போதைப்பொருள் தடுப்பு அகாடமியில் பயிற்சியில் உள்ளார். இவர் இப்போது 4-வது முறையாக முயற்சித்து ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
1,078 பேர் பரிந்துரை
இந்த தேர்வில் 1,078 பேர் மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் (யு.பி.எஸ்.சி.) பணி நியமனத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 499 பேர் பொதுப்பிரிவிலும், 314 பேர் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், 176 பேர் தாழ்த்தப்பட்டோர் பிரிவிலும், 89 பேர் பழங்குடியினர் பிரிவிலும் பரிந்துரை பெற்றுள்ளனர்.
இவர்கள் தாங்கள் பெற்ற ரேங்க் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
மனிதநேய மையம்
இந்த தேர்வில் சென்னை மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்கும் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 9 பெண்கள் உள்பட 46 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மனிதநேய மையத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை சிவில் சர்வீசஸ் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள், சீருடை பணியாளர் தேர்வுகளில் 2,722 பேர் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூலித்தொழிலாளி மகன்
தமிழில் தேர்வு எழுதிய கூலித் தொழிலாளியின் மகன் சரவணன் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர். பெற்றோர் செல்வன்-பாப்பம்மாள். இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளிகள். சரவணன் கூறியதாவது:-
நான் 2005-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக வந்தேன். தொடர்ந்து படிக்க முடியாததால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எனது தந்தை மனு அனுப்பினார். உடனே அவர் என்னை அழைத்து உயர்கல்வி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றார்.
சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. படித்தேன். பின்னர் மனிதநேய மையத்தில் இலவசமாக சிவில் சர்வீசஸ் பயிற்சி பெற்றேன். கடந்த வருடம் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.எஸ். பணி கிடைத்தது. இப்போது 2-வது முறையாக எழுதி 366-வது இடம் கிடைத்துள்ளது. கண்டிப்பாக ஐ.ஏ.எஸ். பணி கிடைக்கும்.
நான் தமிழில் தான் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதினேன். நான் படித்தது எல்லாம் அரசு பள்ளியில் தான். மனிதநேய மையத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum