இன்டர்வியூவில் ஜெயிக்க ஈஸியான வழிகள்!
Fri Apr 15, 2016 9:12 pm
புத்தகத்தின் பெயர்: கெள டு சக்ஸீட் அட் இன்டர்வியூஸ் (How To Succeed At Interviews)
ஆசிரியர்: ராப் யெங் (Rob Yeung)
பதிப்பாளர்: How to Books Ltd
இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ராப் யெங் எழுதிய ‘ஹௌ டு சக்ஸீட் அட் இ்ன்டர்வியூஸ்’ என்னும் புத்தகத்தை. வேலைக்குச் சேருவதற்கான நேர்காணலை திறம்பட எதிர்கொள்வது எப்படி என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
இந்த சில மணித்துளிகளே உங்கள் வாழ்க்கையின் மதிப்புமிக்க நிமிடங்களாக இருக்கும். அப்படி இருக்க, நீங்கள் எந்தவிதத்தில் தயாராக வேண்டும் என்பதைச் சொல்வதே இந்தப் புத்தகம்.
நேர்காணலுக்கு செல்கிறவர்களின் வேலையைச் செய்யும் தகுதியும், வேலையைப் பெறும் தகுதியும் வெவ்வேறானவை. இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம், வேலையை பெற்றுத் தரும் தகுதியை சுலபத்தில் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதுதான்.
ஏனென்றால், நேர்காணல் என்பது ஒரு விளையாட்டைப் போன்றது. என்ன, விளையாட்டா என்பீர்கள். ஆம், மிகவும் சிரத்தையுடன் விளையாடி வெற்றிபெற வேண்டிய விளையாட்டு அது என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
இந்த விளையாட்டில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த விளையாட்டுக்கென்று நிறைய சட்டதிட்டங்கள் இருக்கிறது. இந்த சட்டதிட்டங்களை மீறிக்கூட நீங்கள் விளையாடலாம். நீங்கள் விளையாடும்போது யாருமே விதி மீறி விளையாடுவதை தடுக்க மாட்டார்கள். ஆனால், வெற்றிதான் கிடைக்காமல் போய்விடும் என்ற கிண்டலுடன் தொடர்கிறார் ஆசிரியர்.
கெமிட்ஸ்ட்ரி என்பது..!
நேர்காணலில் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் தகுதி, ஈடுபாடு, இணைத்துக் கொள்ளும் ரசவாதத் திறமை (கெமிஸ்ட்ரி) என்று சொல்லும் ஆசிரியர், கெமிஸ்ட்ரி என்பதே மிக அதிகமாக எதிர்பார்க்கப் படுகிறது என்கிறார். ஏனென்றால், திறமையும் ஈடுபாடும் கொண்ட ‘எந்திரன்’களை மட்டும் வைத்துக்கொண்டு நிறுவனங்கள் செயல்பட முடியாது. ஏற்கெனவே நிலவிவரும் கலாசாரத்துடன் தன்னை சுலபமாக இணைத்துக் கொள்ளும் ரசவாதம் தெரிந்த வித்தகர்களையே நேர்காணலில் அடையாளம் காண முயல்கின்றனர் என்கிறார்.
விண்ணப்பித்திருக்கும் வேலையின் தன்மைகள் குறித்து முழுவதுமாய் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், அதைவிட விண்ணப்பித்திருக்கும் நிறுவனம் குறித்த சிறியதோர் ஆராய்ச்சியை செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துகிறார்.
கெமிஸ்ட்ரி என்பதே பெரிய அளவில் நேர்காணலில் வெற்றி பெற உதவுகிறது என்பதால், உங்கள் உடையில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. சரியோ, தவறோ, உங்கள் வெளிப்புற தோற்றத்தைக்கொண்டே உங்களைப் பற்றிய முதல் கணிப்பு செய்யப்படுகிறது. அதனால் கொஞ்சம் அதிகப்படியான கவனம் ஆடைகள் விஷயத்தில் இருந்தால் தவறில்லை. ஒருபோதும் குறைவான தரத்தில் ஆடை அணிந்துகொண்டு சென்றுவிடாதீர்கள். நேர்காணலில் அணியப்போகும் ஆடைக்காக சம்பளத்தில் நான்கில் ஒரு பங்குவரைகூட செலவு செய்யலாம் என்கிறார் ஆசிரியர். ஏனென்றால் அது ஒரு முதலீடுதானே!
கொஞ்சம் சிரிங்க பாஸ்!
ஆடையெல்லாம் சரி, செலவில்லாமல் கிடைக்கும் ஒன்று இருக்கிறது. அதை அணிய மறந்துவிடாதீர்கள். அதுதான் புன்னகை என்று கிண்டல் செய்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.
புன்னகை நேர்மறை விளைவுகளை தராவிட்டாலும் கூட நிச்சயமாய் எதிர்மறை விளைவுகளை தராத ஒரு விஷயம் என்பதை மறந்துவிடாதீர்கள் என்கிறார். நேர்காணல் நடத்துபவர்களை ஒரு நொடி நேரக் கண்ணோடத்தில் கணியுங்கள். அவர்கள் கட்டுப்பெட்டியாய் தெரிந்தால், நீங்கள் கட்டுப்பெட்டியாய் நடந்துகொள்ளுங்கள். கொஞ்சம் புது நாகரீக பண்பாட்டுடன் இருந்தால், அதேபோல் நடந்துகொள்ளுங்கள். ஏறக்குறைய அவர்களது குணாதிசியங்களை பிரதிபலிக்க முற்படுங்கள். ஆனால், கொஞ்சம்கூட மிகையான நடிப்பைக் காட்டிவிடாதீர்கள் என எச்சரிக்கிறார்.
உண்மையைவிட சிறந்தது வாய்மை!
எல்லா நேர்காணலுமே தகுதியானவர்களால் நடத்தப்படுவதில்லை என்பதையும் அவ்வப்போது நினைவில்கொள்வது நல்லது என்றும் சொல்கிறார் ஆசிரியர்.
நேர்காணலில் பொய் சொல்வதைப் பற்றி குறிப்பிடும் ஆசிரியர், நேர்காணலைப் பொறுத்தவரை உண்மையைவிட வாய்மையே சிறந்தது என்கிறார். பலருக்கும் நேர்காணல் என்றவுடன் உடம்பு ஜில்லிடு கிறது. ஏனென்றால் உடல், மூளை மற்றும் நம் நடவடிக்கை என்ற மூன்றுமே ஒன்றுக்கொன்று இணைந்த விஷயமாகும். மூளையில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அவநம்பிக்கையுமே உங்கள் உடலையும் நடவடிக்கையையும் பெருமளவில் பாதிக்கிறது. அதனாலேயே எதிர்மறை எண்ணங்களை துரத்துங்கள்; நேர்காணலைப் பொறுத்தவரை, பயமே ஜெயத்தை பெறவிடாமல் செய்கிற முக்கிய விஷயம் என்கிறார். நேர்காணலைப் பொறுத்த வரை, பொதுவாக கேட்கப்படும் கேள்வி உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்னும் கேள்வி. பிறந்த ஊர், வளர்ந்த விதம், உங்களுக்குப் பிடித்த நடிகர், உங்கள் இலக்கு என்பதைப் பற்றியெல்லாம் இதில் பேசினால் தவறேதும் இல்லை.
ஆனால், அவற்றை கேட்பதால் உங்களை நேர்காணல் செய்பவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று நக்கலடிக்கிறார் ஆசிரியர். வேலை, வேலை சம்பந்தப்பட்ட நடவடிக்கை, வேலை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் பற்றி மட்டும் பேசுங்கள். குடும்பம், இலக்கு என்பதைப் பற்றி தோண்டித் துருவி கேட்டால் மட்டுமே சொல்வது நலம் என்கிறார்.
பொதுவாக, நேர்காணலில் பதில் சொல்லும்போது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால், நாம் சொல்லும் பதிலில் இருந்து முளைக்கிற கேள்வியைக் குறித்துத்தான் என்று சொல்லும் ஆசிரியர், இதை மனதில் வைத்தே நமது பதில்கள் இருக்க வேண்டும் என்று பல்வேறு உதாரணங் களுடன் விளக்குகிறார்.
ஏன் இந்த வேலை உங்களுக்கு வேண்டும் என்று கேட்கப்படும் போது, அதற்கான காரணங்களைச் சொல்ல வேண்டுமே தவிர, பார்க்கும் வேலையை ஏன் விடப் போகிறீர்கள் என்ற காரணத்தை ஒருபோதும் சொல்லிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார்.
நேர்காணலின்போது எந்த சமயத்திலும் நாலு நல்ல வார்த்தைகளைச் சொல்லிவிட்டு பின்னால் குறைகளைச் சொல்லவேண்டுமே தவிர, ஒரேயடியாய் எதிர்மறை விஷயங்களை கொட்டக்கூடாது என்கிறார் ஆசிரியர்.
உங்களுக்கான மதிப்பீடு அதிகம் என்பதைக் காண்பிக்க, நீங்களே என்னை அமெரிக்காவுல கூப்பிட்டாக, அண்டார்டிக் காவுல கூப்பிட்டாக என்று கதை விடாதீர்கள். நேர்காணல் செய்பவர்கள், இவர் பேசாமல் அண்டார்டிக்காவுக்கே போகட் டும் என நினைத்து ஒதுக்கிவிடும் வாய்ப்பே அதிகம் என்கிறார்.
அடுத்தபடியாக, உங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்ற கேள்விக்கு, பலவீனம் குறித்து சொல்லும்போது, அதை சரிசெய்ய என்ன முயற்சிகள் எடுக்கிறீர்கள் என்பதைப் பற்றியும் இரண்டு பிட்டுகளை உடனடியாகப் போட்டுவிடுங்கள் என்கிறார் ஆசிரியர்.
நான் வானத்தை வில்லாக வளைப்பேனாக்கும் என்று சொல்ல நினைகிறீர்களா? ஓ.கே., ஏற்கெனவே வளைத்ததற்கான ஆதாரத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பேசுங்கள். இல்லாவிட்டால் இதுபோன்ற பேச்சை முழுமையாகத் தவிருங்கள் என்கிறார் ஆசிரியர்.
மொத்த நேர்காணலிலுமே நேர்காணல் செய்கிறவர்களைப் பேசவிட்டு, நீங்கள் பேசினால் மட்டுமே வேலை கிடைப்ப தற்கான வாய்ப்புகள் அதிகம் என்று முடிக்கிறார் ஆசிரியர்.
மிகவும் எளிமையாகவும், பல உதாரணங்களுடனும் எழுதப் பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை வேலை தேடும் அனைவருமே படிப்பது நல்லது.

தங்கத்தின் தரத்தை சிறிய அளவில் உரசிப் பார்த்து கண்டறிவதை பார்த்திருப்பீர்கள். அதேபோல்தான் என்னதான் திறமையின் உறைவிடமாக நீங்கள் திகழ்ந்தாலும், உங்கள் திறமையை உரசிப் பார்த்து அதன் அளவு எவ்வளவு என்பதைச் சொல்வது நேர்காணல் நடைபெறும் ஒரு சில மணித்துளிகளே ஆகும்.
இந்த சில மணித்துளிகளே உங்கள் வாழ்க்கையின் மதிப்புமிக்க நிமிடங்களாக இருக்கும். அப்படி இருக்க, நீங்கள் எந்தவிதத்தில் தயாராக வேண்டும் என்பதைச் சொல்வதே இந்தப் புத்தகம்.
நேர்காணலுக்கு செல்கிறவர்களின் வேலையைச் செய்யும் தகுதியும், வேலையைப் பெறும் தகுதியும் வெவ்வேறானவை. இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம், வேலையை பெற்றுத் தரும் தகுதியை சுலபத்தில் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதுதான்.
ஏனென்றால், நேர்காணல் என்பது ஒரு விளையாட்டைப் போன்றது. என்ன, விளையாட்டா என்பீர்கள். ஆம், மிகவும் சிரத்தையுடன் விளையாடி வெற்றிபெற வேண்டிய விளையாட்டு அது என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
இந்த விளையாட்டில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த விளையாட்டுக்கென்று நிறைய சட்டதிட்டங்கள் இருக்கிறது. இந்த சட்டதிட்டங்களை மீறிக்கூட நீங்கள் விளையாடலாம். நீங்கள் விளையாடும்போது யாருமே விதி மீறி விளையாடுவதை தடுக்க மாட்டார்கள். ஆனால், வெற்றிதான் கிடைக்காமல் போய்விடும் என்ற கிண்டலுடன் தொடர்கிறார் ஆசிரியர்.
கெமிட்ஸ்ட்ரி என்பது..!
நேர்காணலில் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் தகுதி, ஈடுபாடு, இணைத்துக் கொள்ளும் ரசவாதத் திறமை (கெமிஸ்ட்ரி) என்று சொல்லும் ஆசிரியர், கெமிஸ்ட்ரி என்பதே மிக அதிகமாக எதிர்பார்க்கப் படுகிறது என்கிறார். ஏனென்றால், திறமையும் ஈடுபாடும் கொண்ட ‘எந்திரன்’களை மட்டும் வைத்துக்கொண்டு நிறுவனங்கள் செயல்பட முடியாது. ஏற்கெனவே நிலவிவரும் கலாசாரத்துடன் தன்னை சுலபமாக இணைத்துக் கொள்ளும் ரசவாதம் தெரிந்த வித்தகர்களையே நேர்காணலில் அடையாளம் காண முயல்கின்றனர் என்கிறார்.
விண்ணப்பித்திருக்கும் வேலையின் தன்மைகள் குறித்து முழுவதுமாய் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், அதைவிட விண்ணப்பித்திருக்கும் நிறுவனம் குறித்த சிறியதோர் ஆராய்ச்சியை செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துகிறார்.
1950-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம்... என்று மனப்பாடம் செய்யாமல் அந்த நிறுவனத்தைப் பற்றி படித்து தெரிந்துகொண்டு அதனுடைய கலாசாரம் மற்றும் செயல்பாடு குறித்த ஒரு தொழில்முறை மதிப்பீட்டையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே கெமிஸ்ட்ரி தேர்வில் வெற்றிபெற வழிவகுக்கும் என்கிறார். இதற்காக தேவைப்பட்டால் நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களை சென்று பார்க்கவும், பேசவும், நண்பர்களிடம் விசாரிக்கவும்கூட செய்யலாம். அது தப்பே இல்லை என்கிறார்.
கெமிஸ்ட்ரி என்பதே பெரிய அளவில் நேர்காணலில் வெற்றி பெற உதவுகிறது என்பதால், உங்கள் உடையில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. சரியோ, தவறோ, உங்கள் வெளிப்புற தோற்றத்தைக்கொண்டே உங்களைப் பற்றிய முதல் கணிப்பு செய்யப்படுகிறது. அதனால் கொஞ்சம் அதிகப்படியான கவனம் ஆடைகள் விஷயத்தில் இருந்தால் தவறில்லை. ஒருபோதும் குறைவான தரத்தில் ஆடை அணிந்துகொண்டு சென்றுவிடாதீர்கள். நேர்காணலில் அணியப்போகும் ஆடைக்காக சம்பளத்தில் நான்கில் ஒரு பங்குவரைகூட செலவு செய்யலாம் என்கிறார் ஆசிரியர். ஏனென்றால் அது ஒரு முதலீடுதானே!
கொஞ்சம் சிரிங்க பாஸ்!
ஆடையெல்லாம் சரி, செலவில்லாமல் கிடைக்கும் ஒன்று இருக்கிறது. அதை அணிய மறந்துவிடாதீர்கள். அதுதான் புன்னகை என்று கிண்டல் செய்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.
புன்னகை நேர்மறை விளைவுகளை தராவிட்டாலும் கூட நிச்சயமாய் எதிர்மறை விளைவுகளை தராத ஒரு விஷயம் என்பதை மறந்துவிடாதீர்கள் என்கிறார். நேர்காணல் நடத்துபவர்களை ஒரு நொடி நேரக் கண்ணோடத்தில் கணியுங்கள். அவர்கள் கட்டுப்பெட்டியாய் தெரிந்தால், நீங்கள் கட்டுப்பெட்டியாய் நடந்துகொள்ளுங்கள். கொஞ்சம் புது நாகரீக பண்பாட்டுடன் இருந்தால், அதேபோல் நடந்துகொள்ளுங்கள். ஏறக்குறைய அவர்களது குணாதிசியங்களை பிரதிபலிக்க முற்படுங்கள். ஆனால், கொஞ்சம்கூட மிகையான நடிப்பைக் காட்டிவிடாதீர்கள் என எச்சரிக்கிறார்.
நேர்காணலில் பொதுவான கருத்துக்களை பேசாமல் உதாரணங்களைச் சொல்லிப் பேசிப் பழகுங்கள். உதாரணங்கள், நேர்காணல் செய்பவர்களின் மனதில் நின்றுவிடும் வாய்ப்பு அதிகம். உதாரணங்கள் சொல்லும்போது நான் ஷாக்காயிட்டேன், கடுப்பாயிட்டேன் என்பது போன்ற பேச்சையெல்லாம் பேசாதீர்கள். வேலையில் ஷாக்கு களும், கடுப்புகளும் வரத்தான் செய்யும். அதை கையாளுவதுதான் உங்கள் கடமை என்பதை நினைவுகூர்கிறார் ஆசிரியர்.
உண்மையைவிட சிறந்தது வாய்மை!
எல்லா நேர்காணலுமே தகுதியானவர்களால் நடத்தப்படுவதில்லை என்பதையும் அவ்வப்போது நினைவில்கொள்வது நல்லது என்றும் சொல்கிறார் ஆசிரியர்.
நேர்காணலில் பொய் சொல்வதைப் பற்றி குறிப்பிடும் ஆசிரியர், நேர்காணலைப் பொறுத்தவரை உண்மையைவிட வாய்மையே சிறந்தது என்கிறார். பலருக்கும் நேர்காணல் என்றவுடன் உடம்பு ஜில்லிடு கிறது. ஏனென்றால் உடல், மூளை மற்றும் நம் நடவடிக்கை என்ற மூன்றுமே ஒன்றுக்கொன்று இணைந்த விஷயமாகும். மூளையில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அவநம்பிக்கையுமே உங்கள் உடலையும் நடவடிக்கையையும் பெருமளவில் பாதிக்கிறது. அதனாலேயே எதிர்மறை எண்ணங்களை துரத்துங்கள்; நேர்காணலைப் பொறுத்தவரை, பயமே ஜெயத்தை பெறவிடாமல் செய்கிற முக்கிய விஷயம் என்கிறார். நேர்காணலைப் பொறுத்த வரை, பொதுவாக கேட்கப்படும் கேள்வி உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்னும் கேள்வி. பிறந்த ஊர், வளர்ந்த விதம், உங்களுக்குப் பிடித்த நடிகர், உங்கள் இலக்கு என்பதைப் பற்றியெல்லாம் இதில் பேசினால் தவறேதும் இல்லை.
ஆனால், அவற்றை கேட்பதால் உங்களை நேர்காணல் செய்பவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று நக்கலடிக்கிறார் ஆசிரியர். வேலை, வேலை சம்பந்தப்பட்ட நடவடிக்கை, வேலை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் பற்றி மட்டும் பேசுங்கள். குடும்பம், இலக்கு என்பதைப் பற்றி தோண்டித் துருவி கேட்டால் மட்டுமே சொல்வது நலம் என்கிறார்.
குறை சொல்லாதீர்கள்!
பொதுவாக, நேர்காணலில் பதில் சொல்லும்போது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால், நாம் சொல்லும் பதிலில் இருந்து முளைக்கிற கேள்வியைக் குறித்துத்தான் என்று சொல்லும் ஆசிரியர், இதை மனதில் வைத்தே நமது பதில்கள் இருக்க வேண்டும் என்று பல்வேறு உதாரணங் களுடன் விளக்குகிறார்.
ஏன் இந்த வேலை உங்களுக்கு வேண்டும் என்று கேட்கப்படும் போது, அதற்கான காரணங்களைச் சொல்ல வேண்டுமே தவிர, பார்க்கும் வேலையை ஏன் விடப் போகிறீர்கள் என்ற காரணத்தை ஒருபோதும் சொல்லிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார்.
நேர்காணலின்போது எந்த சமயத்திலும் நாலு நல்ல வார்த்தைகளைச் சொல்லிவிட்டு பின்னால் குறைகளைச் சொல்லவேண்டுமே தவிர, ஒரேயடியாய் எதிர்மறை விஷயங்களை கொட்டக்கூடாது என்கிறார் ஆசிரியர்.
உங்களுக்கான மதிப்பீடு அதிகம் என்பதைக் காண்பிக்க, நீங்களே என்னை அமெரிக்காவுல கூப்பிட்டாக, அண்டார்டிக் காவுல கூப்பிட்டாக என்று கதை விடாதீர்கள். நேர்காணல் செய்பவர்கள், இவர் பேசாமல் அண்டார்டிக்காவுக்கே போகட் டும் என நினைத்து ஒதுக்கிவிடும் வாய்ப்பே அதிகம் என்கிறார்.
அடுத்தபடியாக, உங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்ற கேள்விக்கு, பலவீனம் குறித்து சொல்லும்போது, அதை சரிசெய்ய என்ன முயற்சிகள் எடுக்கிறீர்கள் என்பதைப் பற்றியும் இரண்டு பிட்டுகளை உடனடியாகப் போட்டுவிடுங்கள் என்கிறார் ஆசிரியர்.
நான் வானத்தை வில்லாக வளைப்பேனாக்கும் என்று சொல்ல நினைகிறீர்களா? ஓ.கே., ஏற்கெனவே வளைத்ததற்கான ஆதாரத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பேசுங்கள். இல்லாவிட்டால் இதுபோன்ற பேச்சை முழுமையாகத் தவிருங்கள் என்கிறார் ஆசிரியர்.
மொத்த நேர்காணலிலுமே நேர்காணல் செய்கிறவர்களைப் பேசவிட்டு, நீங்கள் பேசினால் மட்டுமே வேலை கிடைப்ப தற்கான வாய்ப்புகள் அதிகம் என்று முடிக்கிறார் ஆசிரியர்.
மிகவும் எளிமையாகவும், பல உதாரணங்களுடனும் எழுதப் பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை வேலை தேடும் அனைவருமே படிப்பது நல்லது.
-நாணயம் டீம்
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)Permissions in this forum:
You cannot reply to topics in this forum