தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விமானத்தில் செல்லும்போது இதையெல்லாம் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விமானத்தில் செல்லும்போது இதையெல்லாம் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். Empty விமானத்தில் செல்லும்போது இதையெல்லாம் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

Sun Apr 10, 2016 8:41 am
விமானத்தில் செல்லும்போது இதையெல்லாம் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். Sixindigoone
விமானத்தில் செல்லும்போது இதையெல்லாம் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

பல அளவிலான கத்திகள், வாள்கள், ஷேவிங் ரேஸரின் பிளேடுகள், இறைச்சியை அறுக்கும் கருவி, கத்திரிக்கோல், ஆயுதங்களின் வடிவத்தைப் பிரதிபலிக்கும் பொம்மைகள், கைத்துப்பாக்கி, வெடி பொருட்கள், இரட்டைக் குழல் துப்பாக்கி, காற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கி, கருவிகள், கோடாரி, கடப்பாரை, சுத்தியல், சுவரில் துளையிடும் இயந்திரம், தானியங்கி வீல் சேர், மருத்துவம் தொடர்பான எலெக்ட்ரானிக் பொருட்கள் , விஷம். கதிரியக்கத்தை உமிழும் பொருட்கள், பாதரசம், அமிலம், பேட்டரி, காந்தம், பட்டாசுகள், கையெறி குண்டு, பெட்ரோல், மண்ணென்ணெய், பெயின்ட், தீப்பெட்டி, சிகரெட் லைட்டர், பலவிதமான ரசாயனங்கள், துருப்பிடித்த பொருட்கள், அலாரம் கொண்ட பெட்டிகள், வெடி மருந்து, எரியும் தன்மை உடைய பொருட்கள், வெடிகளின் வடிவத்தைப் பிரதிபலிக்கும் பொம்மைகள், பிளாஸ்டிக் வெடிபொருள் இவற்றைத் தவிர குறிப்பிட்ட அளவிலான ஐஸ், ஆல்கஹால், எலெக்ட்ரானிக் சிகரெட், நீர் ஆகாரம், மருத்துவ சாதனங்கள், ட்ரிம்மர், குடை, பாடி ஸ்பிரே, மருந்து பாட்டில்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்லலாம்.

ஆனால் விமான பயணம் மேற்கொள்ளும்போது, இஷ்டத்திற்குப் பொருட்களை கொண்டு செல்வது, கடைசி நேரத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே சரியான முறையில் தேவையான பொருட்களை மட்டும் பேக் செய்து கொண்டாலே பெரும் சிக்கலைத் தவிர்க்கலாம்.
விமானத்தில் செல்லும்போது இதையெல்லாம் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். Flighthostes
இந்த வழிமுறைகளை மனசுல வச்சுக்கங்க...

1. எவ்வளவு எடையுள்ள பொருட்களை நாம் கொண்டு செல்ல முடியும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.


2. அவற்றில் அதிக விலை மதிப்புள்ள பொருட்களை வைக்காமல் இருப்பது நல்லது.


3. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பொருட்களை வைத்திருந்தால், அவற்றிற்கு கூடுதல் விலை செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.


4. பெட்டிகளில் பெயர் மற்றும் விலாசத்துடன் கூடிய லேபிள்களை கண்டிப்பாக ஒட்ட வேண்டும்.


5. எந்த பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என்ற விபரங்களை அறிந்து கொள்வது அவசியம்.


6. தேவையான மருந்துகள், ஆவணங்கள், பணம், விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கைப்பையில் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.


7. மற்றவர்கள் கொடுக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம்.


8. அப்படி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும், உள்ளே என்ன இருக்கிறது என்பதை பொறுத்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுங்கள்.


9. பாதுகாப்பு காரணங்களுக்காக, உங்கள் உடைமைகளை நீங்கள் சரியாக கணிக்க வேண்டியிருக்கும் என்பதால், ஏதேனும் அடையாளங்களை உண்டாக்கிக் கொள்வது நலம்.


10. நீங்கள் கொண்டு வந்த பெட்டி/பேக் ஆகியவற்றை பத்திரமாக உடன் வைத்திருங்கள். ஏனெனில் விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்பாரின்றி இருக்கும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிடுவார்கள்.


11. தனிப்பட்ட முறையில் பேட்டரி, ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஏதெனும் வைத்திருந்தால், அவற்றைப் பற்றி சோதனைச் சாவடியில் தெரிவிக்கவும்.


12. எக்ஸ்-ரே மெஷினில் உங்கள் உடைமைகள் அனைத்தையும் முதலில் வைத்துவிட்டு, கடைசியாக நீங்கள் செல்ல வேண்டும். 

- ராகுல் சிவகுரு
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum