டிராவல் டிப்ஸ் - 10
Wed Apr 06, 2016 8:32 am
டிராவல் டிப்ஸ் - 10
1. எந்த வேலையை செய்தாலும் பிளான் பண்ணனும். குறிப்பாக ஒரு பயணம் என்றால் வீட்டில் இருந்து கிளம்பியதில் இருந்து திரும்பும் வரைக்குமான பயணத் திட்டத்தை பிளான் செய்து கொள்வது அவசியம்.
2. வெளியிடத்துக்கு செல்லும்போது, உங்களின் அடையாள அட்டை, ஆதார் கார்டு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஜெராக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஒரிஜினல் தொலைந்து விட்டால் அவை உங்களுக்கு கைகொடுக்கக் கூடும்.
3. தேவையான அளவுக்கு மட்டுமே பணத்தை கையில் வைத்திருக்கவும். அதிக பணத்தை எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்.
4. பயணத்தின்போது, சில்லறை நோட்டுக்களையும் நாணயங்களையும் வைத்துக் கொள்ளவும். சிறிய செலவுகளின்போது அவை உங்களுக்கு பயன்படும்.
5. வெளியிடங்களுக்கு செல்லும்போது உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அதனைப் பயன்படுத்தி திருடர்கள் உங்கள் பொருட்களை திருட வாய்ப்பு இருப்பதை உணருங்கள். அதனால் உற்சாகத்துக்கு இடையே பொருட்களின் மீதும் கவனம் வைத்திருங்கள்.
6. உங்களது பயண திட்டத்தில் கூடுதலாக பணத்தையும் துணிகளையும் வைத்து கொள்ளுங்கள். ஏதாவது காரணத்துக்காக பயணத்தில் கூடுதலாக ஒருநாள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் அளவுக்கு தயாராக இருங்கள்.
7. புதிய ஊரில் வாடகை காரில் சுற்றினால், அந்த காரின் எண்ணையும் டிரைவரின் நம்பரையும் தவறாமல் கேட்டு வாங்கி குறித்து வையுங்கள். அது பின்னர் உங்களுக்கு பயன்படும் வாய்ப்பு இருக்கிறது.
8. நீங்கள் செல்லும் இடம் குறித்த குறைந்தபட்ச தகவலாவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.அதனால், நீங்கள் செல்லும் இடம் பற்றி முன்கூட்டியே சற்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
9. பயணம் செல்லும்போது அடிப்படைத் தேவைகளுக்கான மருந்து பொருட்களை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம்.
10. வெளியிடங்களுக்கு செல்லும் டூரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தவற வேண்டாம். வருங்காலத்தில் அந்த பதிவுகள் உங்களுக்கு நீங்காத நினைவை ஏற்படுத்தும் என்பதால் புகைப்பட மற்றும் வீடியோ கருவிகளை தயாராக எடுத்துச் செல்லுங்கள்.
- ஆண்டனிராஜ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum