ஸ்ட்ரோக் அடையாளம் கண்டு கொள்வது எப்படி?
Sat Apr 02, 2016 11:12 pm
STROKE ; பக்கவாதம்
முதல் மூன்று எழுத்துக்களை நினைவில் கொள்ளவும்!....... S...T...R...
இவ்வளவு இலகுவான ஒன்றை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், நம்மால் சிலரை காப்பாற்ற முடியும்!
எனவே இந்தப் பதிவு!
Stroke. அடையாளம்
**********************
கண்டுகொள்வது;;
**********************
ஒரு பார்ட்டியின் போது, ஒரு பெண் , கையில் உணவுத் தட்டுடன் நடக்கும்போது, சிறிது தடுமாறி, விழப் போகும் போது சமாளித்து விட்டாள்.
மற்றவர்கள் ஆம்புலன்ஸ் கூப்பிடவா என கேட்டபொழுது,
அவள் அனைவருக்கும் சொன்னது அவளது புது காலணிகள் கல்லில் தடுக்கியதால் அவள் தடுமாறி விழப் போனதாகவும், தான் நன்றாக இருப்பதாகவும் கூறினாள்!.
எனவே அவளது உடையைச் சுத்தம் பண்ண உதவி, வேறு உணவும் அவளுக்கு அளித்தனர்!
அந்தப் பெண், இன்கிரிட் அவளது பெயர்! எதிர்பாராது நடந்த தடுமாற்றத்தால் சற்றே ஆடிப் போயிருந்தாலும், அந்த விருந்தின் மீதி நேரத்தை நண்பர்களுடன் நன்றாகவே கழித்துக் கொண்டிருந்தாள்....!
இன்கிரிட்சின் கணவர்
பிறகு அவரது மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகக் கூறினார்! ( மாலை 6 மணிக்கு இன்கிரிட் இறந்து போனதாகத் தகவல் வந்தது!)
அவர்களுக்கு மட்டும் ஸ்டோரோக் வருவதன் அறிகுறிகளை அடையாளம் காணத் தெரிந்திருந்தால்,
ஒருவேளை இன்கிரிட் நம்மிடையே இன்று உயிரோடு இருந்திருக்கக் கூடும்!!
சிலர் ஸ்ட்ரோக் வருவதினால் இறப்பதில்லை! மாறாக
ஒரு நம்பிக்கையற்ற, ஆதரவற்ற நிலையை அடைகிறார்கள்!
STROKE அறிகுறிகளை அடையாளப் படுத்த:-
ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை, பாதிப்பு ஏற்பட்ட முதல் 3 மணி நேரத்திற்குள், நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று விட்டால், அந்நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முழுவதுமாக மாற்றி விடலாம் என்கிறார் நரம்பியல் நிபுணர்!! முழுவதுமாக.......
அவர் சொல்வது
அதற்குத் தேவை,
1)பாதிக்கப்பட்ட நபரின் பாதிப்பைக் கண்டு பிடித்து அங்கீகரிப்பது,
2)பாதிக்கப்பட்டவரின் பாதிப்பு , 'ஸ்ட்ரோக்' என அடையாளம் கண்டறியப்படுவது,
3)மூன்றாவதாக அந்நபரை சரியான மருத்துவ வசதிக்குட்படுத்துவது!!
3 மணி நேரத்திற்குள்!
இது மிகவும் கடினமானதே!! "
ஸ்ட்ரோக் அடையாளம் கண்டு கொள்வது எப்படி?
3 வழிகள் எப்போதும் நினைவில் வையுங்கள்!
எவையெல்லாம்?சிலசமயங்களில் ஸ்ட்ரோக் என்பதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு கொள்வது கடினமாக இருக்கும்!! துரதிஷ்டவசமாக அதற்கான விழிப்புணர்வு இல்லாமை பாதிப்பை அதிகமாகத் தருகிறது!
பாதிக்கப்படும் நபரின் அருகிலிருப்பவர்கள்
"ஸ்ட்ரோக்" என்பதை அடையாளம் காணத் தவறும் போது,ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படுபவர், கடுமையான மூளை பாதிப்புக்குள்ளாகிறார்!
தற்போது டாக்டர்கள் சொல்வது
பாதிக்கப்படும் நபரின் அருகிலிருக்கும் பார்வையாளர்கள், மூன்று. எளிய கேள்விகளைப் பாதிக்கப்பட்ட நபரிடம் கேட்பதினால், பாதிக்கப்பட்டவருக்கு, ஸ்ட்ரோக் அறிகுறிகள் இருப்பதாக அடையாளம் காணலாம்" என்கின்றனர்.
S** Smile பாதிக்கப்பட்ட நபரைப் புன்னகை ( Smile) புரியச் சொல்லுங்கள்!
T** Talk. பாதிக்கப்பட்ட நபரை ஒரு எளிய வாக்கியத்தைத் தடுமாற்றமின்றி பேசச் சொல்லுங்கள்!
(உ.ம். வானம் மிகவும் தெளிவாய் இருக்கிறது!)
R*** Raise பாதிக்கப்பட்ட நபரின் இரண்டு கைகளையும் உயர்த்தச் சொல்லுங்கள்!
பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த மூன்று பணிகளைச் செய்வதில்,ஏதாவது ஒன்றில். பிரச்சினையிருந்தாலும்,
உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்பவரிடம், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை விளக்கிச் சொல்லுங்கள்!
குறிப்பு;; "ஸ்ட்ரோக்" கின் மற்றுமொரு அடையாளம்!!
1. பாதிக்கப்பட்ட நபரை அவரது நாக்கை வெளியே நீட்டச் சொல்லுங்கள்!
2. அவரது நாக்கு கோணலாய் இருந்தாலோ, நாக்கு ஏதாவது ஒரு பக்கமாய்ச் சென்றால் அதுவும் அவர் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டதிற்கான அடையாளமே!
ஒரு முக்கியமான இதய நோய் நிபுணர் சொல்வது;;
இந்த பதிவைப் படிப்பவர்கள்,
அனைவரும் 10 நபர்களுக்காவது இதனை இமெயிலில் அனுப்பினால், ஒரு உயிரையாவது காப்பாற்றலாம்!
அது உங்களுடையதாகவும் இருக்கலாம்!!!!
- இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
- எப்படி கண்டு பிடிச்ச...
- தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று போட்டோவுடன் தெரிந்து கொள்வது எப்படி?
- நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி?
- நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??
Permissions in this forum:
You cannot reply to topics in this forum