** வேர்க்கடலை சாலட் ***
Wed Mar 23, 2016 2:30 pm
சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்! #doctorvikatan
தேவையானவை: தோல் நீக்கிய வேர்க்கடலை - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையுடன், நறுக்கிய காய்கறிக் கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலாக கொத்தமல்லித் தழையைத் தூவினால், வேர்க்கடலை சாலட் ரெடி. வறுத்த வேர்க்கடலை என்பதால், மொறுமொறுப்பாக இருக்கும்.
பலன்கள்: இதில் கலோரி அதிகமாக உள்ளது. 100 கிராம் வேர்க்கடலையில் 567 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் இ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.
தேவையானவை: முளை கட்டிய பச்சைப் பயறு - அரை கப், துருவிய மாங்காய் - இரண்டு டேபிள்ஸ்பூன், பிஞ்சு வெள்ளரிக்காய், நாட்டுத் தக்காளி - தலா 1, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத் தூள் - இரண்டு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கவும் அல்லது துருவிக்கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இரண்டையும் முளைகட்டிய பச்சைப் பயறுடன் சேர்த்துக் கலக்கவும். துருவிய மாங்காய், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: நார்ச்சத்து நிறைந்தது என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் கட்டுக்குள்வைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளர்கள் சாப்பிட உகந்தது. வைட்டமின் சி நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.[/size]
** வேர்க்கடலை சாலட் ***
தேவையானவை: தோல் நீக்கிய வேர்க்கடலை - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையுடன், நறுக்கிய காய்கறிக் கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலாக கொத்தமல்லித் தழையைத் தூவினால், வேர்க்கடலை சாலட் ரெடி. வறுத்த வேர்க்கடலை என்பதால், மொறுமொறுப்பாக இருக்கும்.
பலன்கள்: இதில் கலோரி அதிகமாக உள்ளது. 100 கிராம் வேர்க்கடலையில் 567 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் இ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.
** முளைப்பயறு மாங்காய் சாலட் **
[size]தேவையானவை: முளை கட்டிய பச்சைப் பயறு - அரை கப், துருவிய மாங்காய் - இரண்டு டேபிள்ஸ்பூன், பிஞ்சு வெள்ளரிக்காய், நாட்டுத் தக்காளி - தலா 1, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத் தூள் - இரண்டு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கவும் அல்லது துருவிக்கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இரண்டையும் முளைகட்டிய பச்சைப் பயறுடன் சேர்த்துக் கலக்கவும். துருவிய மாங்காய், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: நார்ச்சத்து நிறைந்தது என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் கட்டுக்குள்வைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளர்கள் சாப்பிட உகந்தது. வைட்டமின் சி நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum