மறந்து போன மருத்துவ உணவுகள்
Fri Mar 18, 2016 6:07 am
எல்லா வேலைகளுக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால், இயந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கட்டிய கோட்டைகளும் கோயில்களும் இன்றளவும் அவர்களின் உழைப்புக்கு சாட்சிகள். அவர்கள் உடல் பலத்துடன் இருந்ததால் இயந்திரங்கள் தேவைப்படவில்லை. அந்த உடல் பலத்துக்கு முக்கியக் காரணம், அவர்களுடைய உணவுப் பழக்கம். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே...
நெருஞ்சில் கஞ்சி
தேவையானவை: காய்ந்த நெருஞ்சில் - ஒரு கைப்பிடி, சோம்பு, சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், நொய்யரிசி - கால் கிலோ, உப்பு - தேவைக்கேற்ப.
மருத்துவப் பயன்: ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாட்டினின் அளவை முறைப்படுத்தும். சிறுநீரகச் செயல் இழப்பைத் தடுக்கும். சிறுநீரில் வெளிய£கும் யூரிக் அமிலம், அல்புமின், புரதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இளைத்த உடலைத் தேற்றும்.
கருங்காலி கஷாயம்
தேவையானவை: கருங்காலிக் கட்டை - 100 கிராம், பனை வெல்லம் - 50 கிராம், சுக்கு, மிளகு - தலா 10 கிராம், ஏலக்காய் - 10.
மருத்துவப் பயன்: உடல் உறுதி பெறும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சி உண்டாக்கும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த விருத்தியை அதிகப்படுத்தும். இளமையிலேயே முதுமைத் தோற்றம் உண்டாவதைத் தடுக்கும். இந்தக் கஷாயத்தைத் தொடர்ந்து குடித்துவர சர்க்கரை நோய் வருவதைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள மாவுச்சத்தை சரியான அளவில் வைத்திருக்கும் தன்மைகொண்டது.
பூண்டுத் தேன்
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - தலா 2 கைப்பிடி, நறுக்கிய பூண்டு - ஒரு கைப்பிடி, எலுமிச்சைச் சாறு - 200 மி.லி., சுத்தமான தேன் - ஒரு கிலோ
மருத்துவப் பயன்: உடல் எடையைக் குறைத்து 'சிக்’கென்று வைக்கும். உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அகற்றும். இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் வைத்திருக்கும். மன அழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சலைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்கு ஊட்டம் தரும்.
நாயுருவி ஊட்டச்சத்து மாவு
தேவையானவை: நாயுருவி விதை - 100 கிராம், சிவப்பு அரிசி - 100 கிராம், பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, வெள்ளரி விதை, பூசணி விதை, முந்திரிப் பருப்பு, கறுப்பு எள் - தலா 50 கிராம், ஏலக்காய் - 20.
மருத்துவப் பயன்: உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். பசியைத் தாங்கும் தன்மை கொண்டது. மூல நோயாளிகளுக்கு இது மிகச் சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உண்டாகக் கூடிய கற்களைக் கரைக்கும் ஆற்றல்கொண்டது. பற்களுக்கு வலிமை தரும்.
நெருஞ்சில் கஞ்சி
தேவையானவை: காய்ந்த நெருஞ்சில் - ஒரு கைப்பிடி, சோம்பு, சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், நொய்யரிசி - கால் கிலோ, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: நெருஞ்சில், சோம்பு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தமான, பயன்படுத்தாத வெள்ளைப் பருத்தித் துணியில் முடிந்துகொள்ளவும். நொய்யரிசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதில் இந்த மூட்டையைப் போடவும். மூட்டை அவிழ்ந்துவிடாதபடி இறுக்கமாகக் கட்ட வேண்டியது அவசியம். அரிசி நன்றாகக் கொதித்துக் கஞ்சிப் பதத்திற்கு வரும்போது, மூட்டையை வெளியே எடுத்துவிட வேண்டும். அதில் உள்ள சாறு கஞ்சியில் இறங்கி இருக்கும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாட்டினின் அளவை முறைப்படுத்தும். சிறுநீரகச் செயல் இழப்பைத் தடுக்கும். சிறுநீரில் வெளிய£கும் யூரிக் அமிலம், அல்புமின், புரதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இளைத்த உடலைத் தேற்றும்.
கருங்காலி கஷாயம்
தேவையானவை: கருங்காலிக் கட்டை - 100 கிராம், பனை வெல்லம் - 50 கிராம், சுக்கு, மிளகு - தலா 10 கிராம், ஏலக்காய் - 10.
செய்முறை: கருங்காலிக் கட்டையைத் தூள் செய்துகொள்ளவும். சுக்கு, மிளகு, ஏலக்காயை ஒன்று இரண்டாகத் தட்டிக்கொள்ளவும். பனை வெல்லம் தவிர மற்ற அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டராகச் சுண்டும்படி காய்ச்சவும். அதை வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்து மறுபடியும் சிறிது நேரம் காய்ச்சிக் குடிக்கவும்.
மருத்துவப் பயன்: உடல் உறுதி பெறும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சி உண்டாக்கும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த விருத்தியை அதிகப்படுத்தும். இளமையிலேயே முதுமைத் தோற்றம் உண்டாவதைத் தடுக்கும். இந்தக் கஷாயத்தைத் தொடர்ந்து குடித்துவர சர்க்கரை நோய் வருவதைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள மாவுச்சத்தை சரியான அளவில் வைத்திருக்கும் தன்மைகொண்டது.
பூண்டுத் தேன்
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - தலா 2 கைப்பிடி, நறுக்கிய பூண்டு - ஒரு கைப்பிடி, எலுமிச்சைச் சாறு - 200 மி.லி., சுத்தமான தேன் - ஒரு கிலோ
செய்முறை: கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சைச் சாறுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் நன்றாகக் கொதிக்கவைக்கவும். பின்னர் அதில் உள்ள சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இந்தச் சாறைக் கொதிக்கவைத்து நான்கில் ஒரு பங்கு ஆகும்படி நன்றாகச் சுண்டவிடவும். ஒரு பங்காக வந்ததும் தேனை அதில் ஊற்றி மறுபடியும் காய்ச்சவும். தேன் பதம் வந்ததும் சுத்தமான பாட்டிலில் அடைத்துப் பத்திரப்படுத்தவும். பெரியவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் பூண்டுத் தேனைக் கலந்து, காலை, இரவு குடிக்கலாம். சிறியவர்களுக்கு ஒரு டீஸ்பூன் போதும்.
மருத்துவப் பயன்: உடல் எடையைக் குறைத்து 'சிக்’கென்று வைக்கும். உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அகற்றும். இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் வைத்திருக்கும். மன அழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சலைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்கு ஊட்டம் தரும்.
நாயுருவி ஊட்டச்சத்து மாவு
தேவையானவை: நாயுருவி விதை - 100 கிராம், சிவப்பு அரிசி - 100 கிராம், பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, வெள்ளரி விதை, பூசணி விதை, முந்திரிப் பருப்பு, கறுப்பு எள் - தலா 50 கிராம், ஏலக்காய் - 20.
செய்முறை: நாயுருவி விதையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, துணியில் வைத்துக் கசக்கினால், உமியும் விதையும் தனித்தனியாகப் பிரியும். உமியை விட்டுவிட்டு விதையை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும். ஏலக்காய் தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் இள வறுப்பாகத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை கஞ்சி, அடை செய்து சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இனிப்பு உருண்டையாகவும் சாப்பிடலாம்.
மருத்துவப் பயன்: உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். பசியைத் தாங்கும் தன்மை கொண்டது. மூல நோயாளிகளுக்கு இது மிகச் சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உண்டாகக் கூடிய கற்களைக் கரைக்கும் ஆற்றல்கொண்டது. பற்களுக்கு வலிமை தரும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum