மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்
Mon Mar 14, 2016 4:29 pm
உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி மீது கொலை வெறி தாக்குதல் நடந்திருப்பது அதுவும் 8 மாதங்களுக்கு பிறகு என்றால் ஜாதி வெறி எந்த அளவிற்கு இந்த சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்..
கணவர் இறந்துவிட்டார். மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். இனி அந்த பெண்ணின் எதிர்காலம்? ஆசை ஆசையாய் வளர்த்த மகனை கொன்றுவிட்டார்களே என துடிதுடிக்கும் பெற்றோர்கள் நிலை? இனி என்ன நடக்கும்.. யாருக்குமே தெரியாது. ஆனால் அந்த குடும்பத்தில் இந்த சம்பவத்தை வைத்தே சாதி மாறி காதலித்தால் உனக்கும் இந்த நிலை தான் என்று ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படுவார்கள். அதன் முடிவு என்னவாக இருக்கும்?
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் இப்போது அதிகரித்துள்ள போதும் ஜாதி மீதான பற்று கூடியிருப்பதும் நிஜம்.
அதற்கு சின்ன உதாரணம் இன்று முகநூலில் உள்ள பலரும் தங்கள் பெயருக்கு பின்னால் கட்டாயமாக, பெருமையாக ஜாதி பெயரை போட்டிருப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
எந்த பள்ளியும் கல்லூரியும் ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்ப்பதில்லை..
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடிய மண்ணில் தான் இன்று கம்யூனிட்டி.டாட் காம்மில் வரன்களையும் தேடுகிறோம்..
ஒவ்வொரு ஜாதிக்கும் 100 க்கணக்கன சங்கங்கள் செயல்படுவதை பார்க்கிறோம்..
தேர்தல் நேரங்களில் நம்மை யார் ஆள வேண்டும் என்பதில் ஜாதி சார்ந்த நுண் அரசியலை பார்க்கிறோம்.
இதையெல்லாம் தாண்டி ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அது ஒவ்வொரு தனி மனிதனிடத்தில் இருந்து தொடங்கினால் மட்டுமே அது முடியும். சாதி சார்ந்த செயல்களை ஊக்குவிப்பதை கைவிட்டு மனிதம் சார்ந்த செயல்களை வளர்த்தெடுப்போம். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum