டைல்ஸ் பதிக்கும் போது கவனிக்க வேண்டியவை:
Tue Mar 08, 2016 6:44 pm
1. முதலில் டைல்ஸ் பதிப்பதற்கு முறைப்படி அனுபவம் வாய்ந்த கொத்தனாரை தேர்வு தெய்து இந்தப் பணியினைத் தொடங்க வேண்டும்.
2. டைல்ஸ் பதிக்கப்படுவதற்கு முன்பு அந்த இடத்தினை சுத்தம் செய்து சிறுசிறு கற்கள் தூசிகள் இல்லாமல் சுத்தம் செய்து தண்ணீர் நன்றாகத் தெளித்து ஈரமான பதத்துடன் பொருத்தப்பட வேண்டும்.
3. டைல்ஸ் சாதாரண சிமெண்ட் தரையிலோ அல்லது பழைய டைல்ஸ் உள்ள இடத்திலோ பொருத்தப்படும் போது வழவழப்பாக இருக்கக் கூடாது. சிமெண்ட் தரையில் போடும்போது கூரிய இரும்பு கம்பிகளை கொண்டு புள்ளிகள் போட்டு பின் பொருத்தப்பட வேண்டும். பழைய டைல்ஸ் மேல் போடும் போது (Tile Adhesive ) ரசாயன கலவையினை முதலில் தடவிய பின் டைல்ஸ் பொருத்தப்பட வேண்டும்.
4. டைல்ஸ்களை தண்ணீரில் நனைத்து 5 நிமிடம் ஊற வைத்து பின் பொருத்தப்பட வேண்டும்.
5. மணலை நன்றாக சல்லடை போட்டு சலித்து பின் அடித்தள சிமெண்ட் கலவை 1:3 விகிதத்தில் சுத்தமான மிகக் குறைவான தண்ணீர் ஊற்றி கலக்கியபின் 20 மி.மீ லிருந்து 25 மி.மீ கனத்தில் புட்டு சிமெண்ட் கலவை போட்டு டைல்ஸ் பொருத்தப்பட வேண்டும்.
6. டைல்ஸ் போடும் போது டைல்ஸ் கிரவுட் பசை உபயோகப்படுத்துவது சாலச் சிறந்தது.
7. ஒரு டைலுக்கும் அடுத்த டைலுக்கும் குறைந்தபட்சம் 2லிருந்து 3மி.மீ இடைவெளி விட்டு நேர் கோட்டில் டைல்ஸ் ஒரே சீராகப் பதிக்க வேண்டும் (இடைவெளி இல்லாமல் பதிப்பது நல்லது).
8. டைல்ஸ் சிமெண்ட் கலவையில் பொருத்தியபின் சிஷீய மரக்கட்டை மூலம் டைல்ஸ்சினை தட்டி உள்ளே இருக்கும் காற்றினை வெளியேற்ற வேண்டும்.
9. டைல்ஸ் பொருத்தியபின் இரண்டு டைல்ஸ்களின் இடைவெளி கலவையினை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீராற்றிய பின் நன்றாக ரசாயன கெமிக்கலைத் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
10. டைல்ஸ் போடுவதற்கு முன்பு வெறும் தரையில் டைல்ஸ் நன்றாக அடுக்கி வெவ்வேறு கலர் டைல்ஸ் கலக்காமல் ஒரு சீரன கலரில் இருக்கும்படி சரிபார்த்து பின் டைல்ஸ் போடப்பட வேண்டும்.
11. டைல்ஸ் வாங்கும் போது மெல்லிய விரிசல்கள் இல்லாமல் ஒரே சீரான அளவுடன் கூடிய டைல்ஸ் வேண்டிய கலரில் வாங்கி போடப்படவேண்டும். நிறமாற்றம் இல்லாமல் ஒரே சீரான கலரில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
12. அறையின் நீள அகலத்தை கருத்தில் கொண்டு டைல்ஸ் வாங்கவேண்டும். எதற்கும் தேவைக்குமேல் பத்து சதவீதம் அதிகமாக வாங்கிப் பின்னால் டைல்ஸ் போடும் போது ஏதாவது டைல்ஸ் தவறுதலாக உடைந்து விட்டாலும் கவலை இல்லாமல் டைல்ஸ் பொருத்தும் பணி தங்கு தடையில்லாமல் நடைபெறும்.
www.buildersline.in
From buildersline monthly
For Subscribe pl call : 88254 79234

Permissions in this forum:
You cannot reply to topics in this forum