முன்னோர்களின் மண், உலோக பாத்திரங்களின் நன்மைகள்
Fri Feb 26, 2016 9:47 pm
மண்பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.
பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
செம்பு பாத்திரத்தில் சிறிது துளசி இலைகளை நீருடன் சேர்த்து இரவு முழுதும் வைத்து பகலில் தேவையானபோது பருகி வர தேகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும்.
(குறிப்பு- 1. செம்பு பாத்திரத்தில் நெய்விட்டு சமைத்தல் கூடாது, முள்ளங்கி, பருப்பு வகைகள், உளுந்து, இறைச்சி, கீரை சமைத்தல் கூடாது. தயிர், மோர், பால், பழங்கள், மற்றும் புளிப்பு-துவர்ப்பு-உவர்ப்பு சுவையுடைய எதையும் வைத்து பயன்படுத்தக் கூடாது)
(குறிப்பு-2. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை புளியை உபயோகித்து செம்பு பாத்திரத்தை கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்.)
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!
E- COLI / இ-கோலையின் முதல் எதிரி செப்புப் பாத்திரங்கள் – மருத்துவர்கள் தகவல்
செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள் தண்ணீரில் கெடுதலை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நோய் தடுக்கும் உலோகங்கள்:
பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்தத் தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கங்கை நீர் ரகசியம்
இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆயுர்வேத மருத்துவம்
செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
எகிப்திலும் செப்பு பாத்திரம்
சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை.செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில் தொன்மைக் காலம் முதலே செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு.
இ-கோலைக்கு எதிரி
உலகையே அச்சுறுத்தும் “இ-கோலை” பாக்டீரியாவைக் கொல்லும் திறன் செப்பு உலோகத்திற்கு உண்டு என பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட இதுபோன்ற திறன் கிடையாது.
இயற்கை பியூரிபையர்
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் அறையின் வெப்ப நிலையிலேயே நான்கே மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.
ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.
இரத்த சோகை மருந்து
இரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் இரத்தசோகை குறைகிறது. இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், கலங்களால் உறிஞ்சப்படுகிறது. உடலில் ‘மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், ‘விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum