உங்களால் மக்கள் படும் அவதி
Sun Feb 21, 2016 4:30 pm
கண்டிப்பாக சிந்திக்கவும்...
தமிழகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி தான்.
ஒரு தனியார் நிறுவன பியூன் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
குறைந்த பட்சம் 4000 - அதிகபட்சம் 12000
அரசு பியூன் சம்பளம் 20000 - 80000
தனியார் பள்ளி ஆசிரியர்கள்
5000 - 35000
அரசு பள்ளி ஆசிரியர்கள்
24000 - 1,25,000
தனியாரிடம் வேலை பார்ப்பவர் 12 மணி நேரம் குறைந்த பட்சம் வேலை பார்க்க வேண்டும், பி எப், மெடிகல் கிலைம் எதுவும் இல்லை. உயிர் போனாலும் ஒன்றும் இல்லை.
அரசு ஊழியர்கள் 8 மணி நேரம் வேலை. அதில் என்னவெல்லாம் இல்லையோ எல்லாம் உண்டு. கேள்வி கேட்க ஆள் மட்டும் இல்லை.
இவ்வாறு இருக்க சம்பளம் பற்றவில்லை என்று கூறி போராட்டம். மத்திய அரசு இணையாக சம்பளம் வேண்டும் (இரண்டு மடங்கு) அதுவும் எந்த நேரத்தில்? தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு. யாரை ஏமாற்ற இந்த போராட்டம்? யாருடைய தூண்களில் இந்த போராட்டம்?
கடந்த நாளே முக்கால் ஆண்டில் ஏன் இந்த போராட்டம் செய்ய வில்லை? அல்லது, இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தவர்கள் இன்னும் 3 மாதம் ஏன் பொறுக்க வில்லை? திட்டம் புரிகிறதா?
சரி, உங்களுக்கு தான் சம்பளம் பற்றவில்லையே? நீங்கள் ஏன் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற வேண்டும்? வேலையை வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு, உங்கள் திறமைக்கு ஏற்ற (மத்திய அரசு பணி) அதிக சம்பளம் கிடைக்கும் வேலைக்கு போக வேண்டியது தானே? ஏன் அதை செய்ய வில்லை?
நீங்கள் அப்படி செய்தால், உங்களை விட அதிகம் படித்த, திறமையான, வறுமையில் வாடும் இளைஞர்கள் பலர் உங்கள் சம்பளத்தில் கால் பாகம் கிடைத்தால் போதும் வேலை செய்ய காத்திருக்காத்திருக்கிறார்கள்.
வீணாக அரசியல்வாதிகளோடு சேர்ந்து மக்களை ஏமாற்றும் செயல் செய்ய வேண்டாம்.
மக்களின் நலனுக்காக பணியமர்த்த பட்ட உங்களால் மக்கள் படும் அவதியை சிந்தனை செய்து பாருங்கள்.
Jegatheesan Csg Jegatheesan Csg ஒரு நாள் 24 மணிநேரத்தில் 5மணி நேரம் நிழலில் வேலை19 மணிநேரம் ஓய்வுஎந்த பொருப்பும் கிடையாது ஐந்துமணிநேரம்வேலைக்கு1200 ரூ சம்பளம் இதில் சனி ஞாயிறு காலாண்டு அறையாண்டு முழு ஆண்டுலீவு El. Ml. Cl ஆக365ல் 80 நாளே வேலை இதில் நாள் ஒன்றுக்கு ஐந்து மணிநேரமே வேலைவேலைசெய்யாத 285 நாளுக்கும் சம்பளம் ஆனால்இந்த அரசு வேலைகளில் இரவு பகல் ஓய்வே இல்லாமல் குறைந்த சம்ளத்தில் தன்உயிரைபொருள்படுத்தாமல்24மணிநேரமும் வேலைசெய்யும்ஊழியர்களும் இருக்கின்றார்கள் இவர்கள் எதுவும்போராடி கேட்டதே கிடையாது
Permissions in this forum:
You cannot reply to topics in this forum