அன்பின் ஆழமான வெளிப்பாடு
Sat Feb 20, 2016 5:34 pm
ஒரு சமயம் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட அந்த பெண்ணுடைய தியாகமான வாழ்க்கையைப் பார்த்த ஒரு மனிதர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் அந்த யூத பெண்ணிடம் சென்று, “உன்னுடைய தியாகமான வாழ்க்கைக்கு உன்னைத் தூண்டியது எது? நீ எவ்வாறு இயேசு கிறித்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாய்?” என்று கேட்டபோது, அவள் தனது கதையைச் சொன்னாள்.
இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களை கொடூரமாய் கொல்வதற்காக பிரான்ஸ் நாட்டில் சித்திரவதை முகாம்களை ஜெர்மானியர் அமைத்திருந்தனர். அப்படிப்பட்ட முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு யூதப் பெண்ணானவள், வதை முகாமிலிருந்து தப்பித்து ஓடி பிரெஞ்சு விதவைப் பெண் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். அவளைத் துரத்திக் கொண்டு ஜெர்மானிய போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டில் இருந்த பிரெஞ்சு பெண் அவளிடம், “நீ வேறெங்காவது போய் ஒழிந்து கொள். நீ இந்த வீட்டிற்குள் நுழைவதை அவர்கள் பார்த்து விட்டார்கள்” என்று கூறினாள். அப்பொழுது அந்த யூத பெண் கதறி அழத் தொடங்கினாள். அதைக் கண்டு மனதுருகிய அந்த பிரெஞ்சு விதவைப் பெண், “உன்னுடைய யூத அடையாள அட்டையை என்னிடம் கொடு” என்றாள். அந்த பெண்ணின் திட்டத்தை புரிந்துகொண்ட யூதப்பெண், “நீங்கள் ஏன் இதைக் கேட்கின்றீர்கள். அவர்கள் எனக்கு பதிலாக உங்களைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள்” என்று கூறினாள்.
அப்பொழுது அந்த விதவைப் பெண், “என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்கின்றேன். இயேசு கிறிஸ்து எனக்காகவும், உனக்காகவும் சிலுவையில் தமது உயிரையே கொடுத்திருக்கின்றாரே” என்று கூறினாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் நுழைந்த ஜெர்மானிய போலீசார், யூத அடையாள அட்டையை கையில் வைத்திருந்த அந்த பிரெஞ்சு விதவைப் பெண்ணை பிடித்து சென்றார்கள்.
ஆறு மாதத்தில் ஜெர்மானியர்களின் சிறையிருப்பில் அந்த பெண் மரணமடைந்தாள். அந்த பிரெஞ்சு விதவைப் பெண் செய்ததை மறக்க முடியாத அந்த யூத பெண், இயேசு கிறிஸ்துவிடம் தமது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக தமது சாட்சியை அந்த மனிதரிடம் கூறினாள். அதைக்கேட்ட அந்த மனிதரும் இயேசுவின் அன்பால் தொடப்பட்டார். அன்பின் ஆழமான வெளிப்பாடு தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவே..ஆமேன்.
நன்றி: ஜீவஒளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum