வேத வசனமும் குள்ளச் சாமியாரும்
Sat Feb 20, 2016 5:22 pm
கிறிஸ்தவ ஊழியர் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்று சுவிசேஷத்தை அறிவிக்க ஆத்துமபாரத்தோடு கடந்து சென்றார். அக்கிராமத்தின் நடுவே நின்று கர்த்தரை மகிமைப்படுத்தும்படியான ஒரு பாடலை பாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்க்கும்படியாக அங்கிருந்த கிராம மக்கள் கூடினர். அவர் பாடல் பாடி முடித்ததும் புதிய ஏற்பாட்டைத் தனது கையில் எடுத்து, இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தை சத்தமாக வாசித்தார்.
அதைக் கேட்ட அநேகர் குறைந்த விலை கொடுத்து பரிசுத்த வேதாகமத்தை வாங்கினர். இதைப் பார்த்து கோபமடைந்த அந்த ஊரின் குள்ளச்சாமியார் ஒருவர், “சபிக்கப்பட்டவர்கள் எழுதிய இந்த வேதாகமத்தை யாரும் வாசிக்ககூடாது” என்று சொல்லி அந்த ஊழியர் கையிலிருந்த வேதாகமத்தை பிடுங்கி கிழித்துப் போட்டார். மேலும் வேதாகமத்தை வாங்கினவர்களையும் அதட்டி, அதை அந்த ஊழியரிடமே திரும்பக் கொடுத்து விடும்படி செய்தார். மனவேதனையுடன் ஊழியர் வீட்டிற்குச் சென்றார்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த ரொட்டிக் கடை வியாபாரி, குள்ளச்சாமியார் கிழித்துப் போட்ட வேதாகமத்தை எடுத்து தனித்தனி தாள்களாக கிழித்து, தான் விற்பனை செய்யும் கேக் துண்டுகளை அந்த தாளில் வைத்து அந்த கிராம மக்களுக்கு கொடுத்தார். குள்ளச்சாமியார் கிழித்துப் போட்ட வேதாகமத்தின் தாள்களைப் பார்த்த கிராம மக்கள் அநேகர் அதை வாசிக்க ஆரம்பித்தனர். வேத வசனம் கிரியை செய்ய ஆரம்பித்தது. குள்ளச்சாமியாருக்கும் கிழிக்கப்பட்ட வேதாகமத்தின் தாளில் வைத்து ஒரு கேக் துண்டை அந்த ரொட்டிக்கடை வியாபாரி கொடுத்தார். அதை வாசித்த அந்த குள்ளச்சாமியாரும் தொடப்பட்டார்.
சில நாட்களுக்கு பின்பு அந்த வேதாகம சங்க ஊழியர், அந்த கிராமம் வழியாக வேறொரு கிராமத்திற்கு செல்ல நேர்ந்தது. வேதாகமத்தை தமது சைக்கிளில் வைத்துக் கொண்டு அந்த ஊழியர் அந்த கிராமத்தை கடந்து செல்கையில், எல்லா கிராம மக்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அநேகர் குறைந்த விலை கொடுத்து பரிசுத்த வேதாகமத்தை வாங்கிச் சென்றனர். வேத வசனத்தால் தொடப்பட்ட குள்ளச்சாமியாருக்கும் வேதத்தை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், அந்த ஊழியரை நோக்கி ஓடி வந்தார். அவர் ஓடி வருவதைப் பார்த்த அந்த ஊழியர், மீண்டும் குள்ளச்சாமியார் வேதாகமத்தை கிழித்து விடுவார் என்று எண்ணி வேகமாய் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார். அவரை விரட்டிப் பிடித்த குள்ளச்சாமியார், வேத வசனம் தன்னோடு பேசியதை விளக்கிக் கூறி, தனக்கான வேதாகமத்தை குறைந்த விலைகொடுத்து வாங்கிச் சென்றார். இதைப் பார்த்த அந்த கிராமமே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனது.
“வேத வாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (II தீமோ 3: 16-17).
இயேசுவுக்கு பிரியமானவர்களே, பரிசுத்த வேதாகமம் பிரயோஜனமுள்ள அநேக காரியங்களை நமக்கு போதிக்கின்றது. நீங்கள் அனுதினமும் வேதத்தை தியானிகின்றீர்களா?
நன்றி: ஜீவ ஒளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum