தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
எரேமியாவின் ஒப்பாரி – புலம்பல் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

எரேமியாவின் ஒப்பாரி – புலம்பல் Empty எரேமியாவின் ஒப்பாரி – புலம்பல்

Sat Feb 13, 2016 9:07 am
☀ எபிரேயத்தில் இந்தப் புத்தகம் அதன் முதல் வார்த்தையாகிய எஹ்கா! (Ehkhah!) என்பதன் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ‘எவ்வாறு!’ என்பதாகும். ☀ கிரேக்க மொழிபெயர்ப்பு "எரேமியாவின் புலம்பல்" என்னும் பொருள் கொண்ட "Threnoi Hieremiou" என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. 

☀ இலத்தீனில் எழுதிய ஜெரோம் இதற்கு லாமென்டேஷனெஸ் (Lamentationes) என பெயரிட்டார். இதிலிருந்தே ஆங்கில பெயர் லாமென்டேஷன்ஸ் வந்தது. ☀ புலம்பல் புத்தகமானது தற்கால வேதாகமங்களில் எரேமியாவிற்கு அடுத்து உள்ளது.

 ☀ தற்கால எபிரேய வேதாகமங்கள் சிலவற்றில் இது ரூத்துக்கும் பிரசங்கிக்கும் அல்லது எஸ்தருக்கும் பிரசங்கிக்கும் இடையில் உள்ளது. 

☀ ஆனால் பூர்வ பிரதிகளில், இன்று நம்முடைய வேதாகமங்களில் இருப்பது போலவே எரேமியாவுக்கு பின் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

☀ எரேமியாவே இந்தப் புத்தகத்தை எழுதினார் என்பதற்கு அத்தாட்சிகளாக, “2-ம் 4-ம் அதிகாரங்களிலுள்ள எருசலேமின் தத்ரூபமான விவரிப்புகளை வாசிக்கையில் அது கண்கண்ட சாட்சி எழுதியவையே என்பது தெளிவாய் தெரிகிறது. ☀ அவ்வாறே அந்தச் செய்யுட்கள் முழுவதிலும் காணப்படும் ஆழ்ந்த இரக்கமும் தீர்க்கதரிசன அம்சமும் அவருக்கே சொந்தமானவை. 

☀ அதோடு அவற்றின் எழுத்துநடையும் சொல்நயமும் கருத்துகளும் கூட எரேமியாவிற்கே உரியவை.” புலம்பலிலும் எரேமியாவிலும் காணப்படும் அநேக சொற்றொடர்கள் ஒரேவிதமாக உள்ளன. உதாரணமாக, துயரம் மிகுந்த ‘கண்கள் நீராய் (கண்ணீர்) சொரிகின்றன’ என்பது, (புல.1:16, 2:11, 3:48,50 ; எரே.9:1, 13:17, 14:17) தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் செய்த ஊழல் காரணமாக அவர்களிடம் வெறுப்பைக் காண்பிப்பது போன்றவை. (புல.2:14, 4:13,14 ; எரே.2:34, 5:30,31, 14:13,14) 

☀ எரேமியா 8:18-22-லும் 14:17,18-லும் உள்ள பகுதிகள், புலம்பலில் காணப்படும் துயர்மிகுந்த எழுத்து நடையில் எரேமியாவால் நிச்சயம் எழுத முடிந்திருக்கும் என்பதைக் காட்டுகின்றன. ☀ கி.மு. 586இல் எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் தொடர் நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும் பற்றிய புலம்பலாக இப்புத்தகம் அமைந்துள்ளது.

 ☀ முதல் புலம்பல் (அதிகாரம் 1): எருசலேம் அழிவுற்ற நிலையில் தன் துயரங்களை எடுத்துக் கூறி, ஒரு "கைம்பெண்" போல ஒப்பாரி வைக்கிறது. 

☀ இரண்டாம் புலம்பல் (அதிகாரம் 2): எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவுக்குக் காரணம் மக்களின் பாவமே என்றும், அதனால் கடவுள் தண்டனை அளித்தார் எனவும் அமைந்துள்ளது. 

☀ மூன்றாம் புலம்பல் (அதிகாரம் 3): கடவுளால் தேர்ந்துகொண்ட மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்னும் கருத்து வெளிப்படுகிறது. கடவுள் அனுப்பும் துன்பங்கள் மக்களைக் கண்டித்துத் திருத்தி அவர்களை நல்வழிக்குக் கொண்டுவரும் என்னும் கருத்து துலங்குகிறது. 

☀ நான்காம் புலம்பல் (அதிகாரம் 4): மக்கள் செய்த பாவத்தின் விளைவாக எருசலேம் நகரும் தேவாலயமும் அழிந்துபட்டன என்னும் கருத்து எடுத்துரைக்கப்படுகிறது. 

☀ ஐந்தாம் புலம்பல் (அதிகாரம் 5): மக்கள் மனம் திரும்பி கடவுளை நாடிச்சென்று மன்னிப்பு அடையும்படியாக வேண்டல். ☀ இந்தப் புலம்பல் புத்தகம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, கவிதை நடையில் எழுதப்பட்ட ஐந்து பாடல்களின் தொகுப்பாகும். ☀ முதல் நான்கும் புலம்பல் பாடல்களாகும், அதாவது துயரப் பாடல்களாகும்.

 ☀ ஐந்தாவது பாடல் ஒரு விண்ணப்பமாகும், அதாவது ஜெபமாகும். ☀ முதல் நான்கு பாடல்களும் அகரவரிசையில் எழுதப்பட்டுள்ளன; அதாவது, அவற்றின் ஒவ்வொரு வசனமும் எபிரேய மொழியின் 22 எழுத்துக்களில் ஒன்றோடு தொடங்குகிறது. ☀ ஐந்தாம் பாடலில் எபிரேய மொழியின் எழுத்துக்களுக்கு இணையாக 22 வசனங்கள் இருக்கிற போதிலும், அது அகரவரிசையில் எழுதப்படவில்லை. 

☀ கடவுளுடைய பல எச்சரிக்கைகளும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றமடைந்ததைக் புலம்பல் புத்தகம் காட்டுகிறது. (புல.1:2 — எரே.30:14, புல.2:15 — எரே.18:16, புல.2:17 — லேவி.26:17, புல.2:20 — உபா.28:53) ☀ உபாகமம் 28:63-65-ன் நிறைவேற்றத்திற்கான தெளிவான அத்தாட்சியைப் புலம்பல் புத்தகத்தில் பார்க்கிறோம். 

☀ பரிசுத்த வேதாகமத்தின் மற்ற பாகங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல மேற்கோள்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. (புல.2:15 — சங்.48:2, புல.3:24 — சங்.119:57) ☀ புலம்பல் 1:5-ம் 3:42-ம் கூறுவது போல ஜனங்களின் சொந்த மீறுதல்கள் காரணமாகவே அழிவு வந்தது என்பதை தானியேல் 9:5-14 உறுதிப்படுத்துகிறது. ☀ மொத்தம் 5 அதிகாரங்களும், 154 வசனங்களையும் கொண்டுள்ளது. ☀ 1,2,4,5 ஆகிய அதிகாரங்கள் முறையே 22 வசனங்களை உள்ளடக்கிய அதிகாரங்களாகவும் 3-ம் அதிகாரம் 66 வசனங்களையும் கொண்டுள்ளது. ☀ சீயோனை நினைவுகூர்ந்து அதைத்திரும்ப நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையைப் புலம்பல் அளிக்கிறது. (புல.3:31,32; 4:22)
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum