தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்
Sat Feb 13, 2016 8:32 am
தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்
(ஏசாயா முதல் மல்கியா வரை)
அ) இனவாரியாக பிரித்தல்: (பெறுபவர்களின்படி)
1. இஸ்ரவேலுக்கு - ஓசியா, ஆமோஸ்
2. யூதாவுக்கு - யோவேல், ஏசாயா, மீகா, செப்பனியா, புலம்பல், எரேமியா, ஆபகூக், ஆகாய், சகரியா, மல்கியா.
3. நினிவேக்கு (அசீரியா) - யோனா, நாகூம்.
4. பாபிலோனுக்கு - தானியேல்
5. பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு - எசேக்கியேீல்
6. ஏதோமிற்கு - ஒபதியா
ஆ) தீர்க்கதரிசியின் பொருள் விளக்கம்:
வார்த்தைகள்: (1நாளாகமம்: 29:29,30).
1. நபி (Nabi) - “(தேவனால்) அழைக்கப்படட்வர்”
2. ரோயே (Roeh) - “ஞானதிருஷ்டிக்காரன்” (“பார்த்தல்” என்ற மூல வார்த்தையிலிருந்து).
3. ஹோசே (Hozeh) - “ஞானதிருஷ்டிக்காரன், தீர்க்கதரிசி” (“பார்த்தல்” என்ற மூல வார்த்தையிலிருந்து).
தேவன் தம்முடைய வார்த்தையையும், சித்தத்தையும் (முதன்மையாகத் தம்முடைய மக்களுக்கு) அறிவிக்கும்படி, தமது சார்பில் பேசுவதற்காக தெரிந்தெடுத்து அழைக்கும் ஒரு மனிதன் “தீர்க்கதரிசி” எனப்படுகிறான்.
விளக்கம்:
1. “முன்னறிந்து கூறுதல்” (அடிக்கடி) - தேவனுடைய சார்பில், பொதுவாக நிகழ் காலத்தைக் குறித்தத் தேவனுடைய சித்தத்தை முன்னறிந்து கூறுதல்.
2. “முன்னறிவி” (அவ்வப்போது) - தேவனுடைய சார்பில், முன்குறிக்கப்பட்ட எதிர்கால சம்பவங்களை மையமாகக் கொண்ட, நிகழ்காலத்திற்குரியவைகளைக் குறித்தத் தேவனுடைய சித்தத்தைக் குறிப்பாகக் கூறுதல்.
இ) தீர்க்கதரிசனத்தின் தன்மை:
மூலாதாரம்: இயற்கைக்கு அப்பாற்ப்பட்டது. (2பேதுரு: 1:20,21)
வழிவகைகள்:
1. சொப்பனங்களும், இரவு தரிசனங்களும் (எண்ணாகமம்: 12:6)
2. தரிசனங்களும், மிகையான உணர்வுகளும் (ஏசாயா: 2:1; 29:7; ஆமோஸ்: 1:1; மீகா:1:1)
3. தேவனோடு நேரடியாக எதிர்ப்படுதல் (2இராஜாக்கள்: 20:1-6; ஏசாயா: 6:1-10, 38:4)
4. வெளிப்படுத்தலுடன் வரலாற்றுச் சம்பவங்கள் (எரேமியா: 21:1,2; 36:1-26; 42:7-22)
5. தீர்க்கதரிசியின் வாழ்க்கைச் சூழ்நிலை (ஏசாயா: 39:1-
நோக்கம்: நெறிமுறை சார்ந்தது (ஆமோஸ்: 4:12; 2பேதுரு: 3:11; 1யோவான்: 3:3)
தோற்றம்: இரட்டைப் பரிமாணம்.
- “எப்போது” என்பதைவிட, “என்ன” மற்றும் “யார்” என்பவை தெளிவாயிருப்பதால், காலத்தின் பரிமாணம் துல்லியமாக இல்லாவிட்டாலும் எப்போதும் ஓரளவிற்கு சரியாக உள்ளது. (ஏசாயா: 13:6, எசேக்கியேல்: 30:3, யோவேல்: 1:5, ஒபதியா: 15, செப்பனியா: 1:7,14, மத்தேயு: 10:23, 16:28, 24:34, யாக்கோபு: 5:8,9, 1தெசலோனிக்கேயர்: 4:15, பிலிப்பியர்: 4:5, வெளிப்படுத்தல்: 1:1,3, 22:6,10,12,20).
மாதிரிப் படிவம்: சமநிலையடைந்தது:
1. பாவத்திற்காக தேவன் அளித்த நியாயத்தீர்ப்பு தற்போதைய துயரத்தின் காரணமாகும்; எனவே, “வரவிருக்கும் “கர்த்தரின் நாளைச்” (தேசங்களின் நியாயத்தீர்ப்பு) சந்திப்பதற்காக மனம் வருந்தி, தேவனிடம் திரும்புங்கள். தேவன் மன்னிப்பை அளித்து, மீண்டும் ஆசீர்வதிப்பார். மேசியாவின் யுகமும், ஒரு உயரிய நிலை உள்பட மகிமையான எதிர்காலமும் வரவிருக்கிறது.
2. (கள்ளத்தீர்க்தரிசிகளுக்கான) சோதனைகள். நிறைவேறுதல்: உபாகமம்: 18:20-22.
3. தேசிய நீதி (உபாகமம்: 13:1-5, எரேமியா: 23:13,14)
4. தனிப்பட்ட நீதி (எரேமியா: 23:9-12, மத்தேயு: 7:15-20)
Re: தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்
Sat Feb 13, 2016 8:43 am
வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் எவ்வளவு பேர் உள்ளார்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை, ஆனால் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் – சுவிசேசகர்கள் கர்த்தரின் உள்ளத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். கர்த்தர் உரைத்ததை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
பெண் தீர்க்கதரிசிகளும் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ளனர். எல்லா தீக்கதரிசிகளும் நிறைவாய் இதில் அடங்கி உள்ளார்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆங்கிலத்திலே சொல்லுவார்கள் Cover To Cover – இப்படி படித்து ஆராய்ந்தால் தவிர முடியாது.
பழைய ஏற்பாட்டில் 1239 தீர்க்கதரிசனங்களும், புதிய ஏற்பாட்டில் 578 தீர்க்கதரிசனங்களும் மொத்தமாக 1817 உள்ளன. இது சம்பந்தமான வசனங்கள் 8352 ஆகும். இவையெல்லாம் வேத அறிஞர்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டவை. மொத்த தீர்க்கதரிசிகள் 80க்கும் மேற்பட்டவர்கள். இதில் பெரும்பான்மை தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன. முதலில் நாம் தீர்க்கதரிசனம் பற்றி அறிய வேண்டியது…….
2 பேதுரு 1:21
“தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.”
இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்க்கு ஆதாரமாக ஆவியானவர் அப்போஸ்தலர். யோவானிடம் சொல்லுவதை கேளுங்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 10 : 11
” அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்ல
வேண்டும் என்றான்.”
மேலும் பவுலின் எச்சரிப்பை பாருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:20
“தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாது
இருங்கள்.
தீர்க்கதரிசிகள் பட்டியல் :
• ஆரோன் (யாத்ரா 7: 1)
• ஆபேல் (லூக்கா 11: 50-51)
• ஆபிரகாம் (ஆதி 20: 7)
• அகபு (அப்போஸ் 21: 10; 11: 27-28)
• ஆகூர் (நீதி 30: 1)
• அகியா (1 இராஜா 11: 29;
14:2, (2 நாளாக 9: 29)
• ஆமோஸ் ( ஆமோஸ் 1: 1,
7: 12- 15)
• ஆசாப் ( 2 நாளா 29:30);
(மத் 13:35); (சங்கீ 78: 2)
• அசாரியா ( 2 நாளா 15: 1-
• பாலாம் (எண் 23, 24)
• காய்பா (யோவான் 11: 49-52)
• தாவீது (சங் 16: 8-11)
(அப் 2: 25-30)
• தானியேல் (தானி 12: 11)
(மத் 24: 15, மாற்கு 13: 14)
• எபேசு சீடர்கள் (அப் 19:6)
• எல்தாத் (எண் 11:26)
• எலியா (1 இராஜா 18: 22, 36)
( 1 இராஜா 17: 1)
• எலியேசர் ( 2 நாளா 20: 37)
• எலிசா ( 1 இராஜா 19:6, 2
இராஜா 9:1, 6: 12)
• எசக்கியேல் (எசக் 6: 1-2, 11:
4-5, 13:2,17)
• ஏனோக் ( யூதா 1: 14)
• காத் (1 சாமு 22: 5),
(சாமு 24:11)(1 நாளா 21: 9)
• ஆபாகூக் ( ஆபாகூக் 1: 1, 3: 1)
• ஆகாய் (ஆகாய் 1: 1, 3, 12,
2:1,10) (எஸ்ரா 5: 1)
• அனானி (2 நாளா 16: 7-10; 19: 2)
• ஓசியா (ஓசியா 1: 1)
• இத்தோ (சகரியா 1: 1)
(2 நாளா 13:22, 9:29)
• ஏமான் ( 1 நாளா 25: 5)
• ஏசாயா ( 2 இராஜா 19: 2)
(மத் 3: 3)
• யாக்கோபு (ஆதி 49: 1)
• யகாசியேல் ( 2 நாளாக 20:
14-17)
• எதுத்தூன் ( 2 நாளாக 35: 15)
•யெகூ (1 இராஜா 16: 17, 12)
• எரேமியா (2 நாளா 36: 12,21),
(ஏரே 20: 1-2; 25: 2)
• இயேசு (மத் 13: 57; 21: 11)
(லூக் 24: 19)
• யோவேல் (யோவேல் 1: 1) (அப் 2: 16)
• யோவான்ஸ்நானன்
(லூக்கா 7: 26-28; 1:76)
(மத் 14: 15)
• யோவான் (வெளி 1: 1)
• யோனா (2 இராஜா 14:25)
(மத் 12: 39;16:4)
•யோசேப்பு (ஆதி 37: 5-11)
• யோசுவா (1 இராஜா 16: 34)
• யூதா பர்னபா (அப் 15:32)
• மல்கியா (மல்கி 1: 1)
• மேதாத் (எண் 16: 26)
• மீகா (மீகா 1: 1) (எரேமி 26: 18)
(மத்தேயு 2: 5-6)
• மிகாயா (1 இராஜா 22: 7-
• மோசே (உபா 34: 10; 18: 18; (அப் 3: 22-23)
• நாகூம் (நாகூம் 1: 1)
• நாத்தான் (2 சாமு 7: 2)
(1 இராஜா 1: 10)
• ஒபேதியா (ஒபேதி 1: 1)
• ஓபேத் (2 நாளா 28: 9)
• யூதாவிலிருந்து தீர்க்கதரிசிகள்
(1இராஜா 13: 1- 3)
(2 இராஜா 23:17-18)
• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
(1 இராஜா 20: 13-14)
• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
– இரண்டாம் முறை
(1 இராஜா 20: 35-42)
• அமாசியாவிற்க்கு அனுப்பின
தீர்க்கதரிசிகள்
( 2 நாளா 25:7-9)
• அமாசியாவிற்க்கு அனுப்பின.
தீர்க்கதரிசிகள் – 2ம் முறை
(2 நாளா 25:7-9)
• ஏலிக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
(1 சாமு 2: 27-36)
• இஸ்ரவேலுக்கு அனுப்பின.
தீர்க்கதரிசிகள்
( நியாதி 6: 7-10 )
• எலியாவை அனுப்பி ஏகூவை
அபிசேகித்த தீர்க்கதரிசி (2 இராஜா 9: 1-10)
• எலிசாவுக்கு தீர்க்கதரிசனம் உரைத்த. தீர்க்கரிசிகள்
(2 இராஜா 2: 3-5)
• சாமுவேல் (1 சாமு 3: 20; 9:
18-19) (அப் 13:20)
• சவுல் & மற்றவர்கள் (1 சாமு
10: 5-6, 10-13; 19: 20- 24)
• இஸ்ரவேலின் 70 மூப்பர்கள்
(எண் 11: 25)
• செமாயா (2 இராஜா 12: 22)
(2 நாளா 12:5,7,15)
• சீலா (அப் 15: 32)
• சிமியோன் ( லூக்கா 2: 25-35)
• சாலமோன்
( சங்கீதம் 72: 7,10-11,17)
• இரண்டு சாட்சிகள்
(வெ. விசே 11: 3,6,10)
• உரியா (எரேமியா 26: 20)
• சகரியா [யோவான்ஸ்நானன் தந்தை] (லூக்கா 1: 67)
• சாதோக் (2 சாமு 15: 27)
• சகரியா (சகரியா 1: 1)
(எஸ்ரா 5: 1; 6: 4)
• சகரியா (யோய்தாவின்
குமாரன்) (2 நாளா 24: 20)
• செப்பானியா (செப் 1: 1)
• மத்தேயு
• மாற்கு
• லூக்கா
• பவுல்
• பேதுரு
• யாக்கோபு
• யூதா
பெண் தீர்க்கதரிசிகள் :
• மிரியம் (யாத் 15: 20)
• தெபோராள் (நியாதி 4: 4)
• உல்தா (2 இராஜா 22: 14)
• ஏசாயாவின் மனைவி
(ஏசா 8: 3)
• அன்னாள் ( லூக்கா 2: 36-38)
• பிலிப்பின் 4 மகள்கள்
(அப் 21: 8-9)
• ராக்கேல் ( ஆதி 30:24)
• அன்னாள் (1 சாமு 2: 1- 10)
• அபிகாயில் (1 சாமு 25: 28-31)
• எலிசபெத் (லூக்கா 1: 41-45)
• இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள் (லூக்கா 1: 46- 55)
தீர்க்கதரிசி குழுக்கள் :
• 1 இராஜா 18: 4,13
• 2 இராஜா 23 :2
• அப் 11 :27
• அப் 13: 1
• யூத மத தல்முத் ( யூத மத குடியுரிமை
& சடங்குகள்) சாராளையும் எஸ்தரையும் தீர்க்கரிசினிகளாக இணைத்திருக்கிறார்கள்.
சிலர் பெண் தீர்க்கதரிசிகள் பொய் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள், அவர்கள் :
• நொவாதியாள் (நெக 6: 14)
• யேசபேல் (வெ.விசே 2: 20)
பின்வரும் காலங்களில் உங்களது குழந்தைகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் – மூப்பர் கனவு காண்பார்கள், வாலிபர் தரிசனம் காண்பார்கள் என்று யோவேல் தீர்க்கதரிசி என்று உரைத்திருக்கிறார். தீர்க்கதரிசிகள் எண்ணிக்கை இப்போது அதிகமாகியிருக்கிறதும் நிரூபணம் ஆகிவிட்டது.
யோவேல் 2 : 28
“அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29 ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.”
Permissions in this forum:
You cannot reply to topics in this forum