கடவுள் உயிர் வாழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?
Fri Feb 12, 2016 6:27 pm
கேள்வி: கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் வாழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?
பதில்: கடவுள் உயிர் வாழ்கிறாரா? இதை நான் மிகவும் விருப்பத்துடன் கண்டுபிடிப்பதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுதுள்ள கணக்கெடுப்பின்படி 90 சதவிகித ஜனங்கள் கடவுள் உயிரோடிருக்கிறாரென்றும், மேலான ஒரு சக்தி இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் மேல் அவர் உயிரோடிருக்கிறார் என்பதை வெளிப்படுத்த பொறுப்புகள் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் வேறு சில காரணங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
எப்படியிருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதோ நிரூபியாமல் இருப்பதோ கூடாத காரியம் நாம் கடவைள விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதகாரியம். (எபி.11:16) கடவுள் விரும்பினால் அவர் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும் அவர் அப்படிச் செய்தால் அவரை விசுவாசிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விடும். (யோ. 20:29)
விசுவாசத்தினால் கடவுளை நம்பவேண்டும் என்று சொல்வதனால், அவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்று சொல்லிவிட முடியாது. (சங். 19:1-4) நாம் நட்சத்திரங்களைக் காண்பதிலும், அகில உலகத்தையம் காண்பதிலும், இயற்கையின் அதிசயங்களைப் கவனிப்பதிலும், சூரியன் மறைவதின் அழகை ரசிப்பதிலும் இவைகளை படைத்த ஒருவர் இருக்கிறார் என்பதைப் புரியச்செய்கிறது. இவைகள் எல்லாம் போதுமானதாக இல்லாவிட்டால், நம்முடைய இருதயங்களிலே, அவர் வாழ்கிறார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. (பிர.3:11) நம்முடைய வாழ்கைக்குப் பின், இதைவிட மேலான ஒரு வாழ்வு இருக்கிறது என்பது தெரிகிறது. அறிவுப்பூர்வமாக ஒருவேளை இதை நாம் மறுக்கலாம். தேவபிரசன்னம் நம்மில் இருந்துகொண்டிருக்கிறது. சிலர் கடவுள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கிறார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. (சங்.14:1).
வரலாற்றில் முழுவதுமாக பார்க்கும்பொழுது எல்லாக் கலாச்சாரத்திலும், மனித மேம்பாட்டிலும், எல்லாக் கண்டங்களிலும் தேவன் இருக்கிறார் என்பதை 98 சதவிகித ஜனங்கள் நம்புகிறார்கள். இவர்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு ஏதாவது ஒரு தூண்டுதல் இருக்கலாம்.
கடவுள் இருக்கிறார் என்பதற்கு பரிசுத்த வேத விவாதத்தை தவிர வேறு விவாதங்களும் உள்ளன.
1. ஆன்டோலாஜிக்கல் (Ontological) விவாதத்தின் கருத்துக்களின் அடிப்படையில் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கப்படுகின்றன. “கடவுளைத்தவிர வேறொரு பெரியகாரியம் இருக்க முடியாது. இருப்பது இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் பெரியது. ஆகையால் அந்த பெரியகாரியம் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். கடவுள் இல்லாவிட்டால் அந்த பெரியகாரியம் இருந்திருக்க முடியாது. ஆனால் இது முரன்பாடான கடவுளைக்குறித்த விளக்கம்.
2. டெலிலாஜிக்கல் (Teleological) விவாதம்: உலகம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருப்பதனால், இதனை உருவாக்கிய ஒருவர் இருக்கவேண்டும். உதாரணமாக பூமி சூரியனுக்கு 100 மைல் தூரமாயிருந்தாலும் அருகாமையில் இருந்தாலும். பூமியில் வசிக்கிற மக்கள் உயிர்வாழ முடியாது. நம்முடைய தட்ப வெட்ப நிலையில் சில சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் பூமியிலிருக்கிற எல்லா உயிரினங்களும் மரித்துப்போய்விடும். நம் உடம்பிலுள்ள ஒரு அணு உருவாகுவதற்கு அனேக புரத அணுக்கள் தேவை. அதாவது ஒரு அணு உருவாக குறைந்தபட்சம் 10243 புரத மூலக்கூறுகள் தேவை. அதாவது பத்;தோடு(10) 243 பூஜ்ஜியங்களைச் சேர்க்க வேண்டும்.
3. காஸ்மோலாஜிக்கல்(Cosmological) விவாதம் : தேவன் இருக்கிறார் என்பதற்கு ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருகாரணம் இருக்கிறதென்று விவாதிப்பவர்கள். உலகமும் அதில் உள்ளயெல்லாம் ஒரு செயல். இவைகளெல்லாம் உருவாகுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். காரணமாவதற்கு இறுதியாக எல்லாவற்றையும், எல்லா செயல்களுக்கும் காரணமாயிருக்கிற ஒருவர் இருக்கவேண்டும். அவருக்கு மேலே அவரை உருவாக்குவதற்கு காரணமாக யாருமில்லை. தன்னை உருவாக்க ஒருவருமில்லாமல் இருக்கிறவர் தான் கடவுள்.
4. ஒழுக்கநெறி (Moral) விவாதம் : இது நல்நடத்தையைப் பற்றியது. வரலாற்றில், எல்லாக் கலாச்சார மக்களுக்கும் ஒரு நியதி அல்லது ஒழுங்குமுறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் தவறு அல்லது சரி என்று உணர்கிற உணர்வு உண்டு. கொலை, பொய், திருட்டு, தவறான நடத்தை இவைகளெல்லாம் எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களும் இது தவறு, இது சரி என்று மறுப்பு தெரிவிக்கிறார்கள். நன்மை எது, தீமை எது என்ற உணர்வு எல்லா மனிதருக்கும் இருக்கிறது. இந்த உணர்வு கடவுளிடத்திலிருந்துதான் வருகிறது. இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் மக்கள் தேவனைக் குறித்த அறிவைமறுத்து பொய்யை நம்புவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவாக சொல்கிறது. (ரோ. 1:25) மக்கள் கடவுளை நம்பாமல் இருப்பதற்கு, எந்த ஒரு கராணத்தையம் கூற முடியாது. (ரோ.1:20) அறிவியல் பூர்வமாக கடவுளை நிரூபிக்க முடியாது என்று அவரை நம்பாமல் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் தங்களைக் குறித்து அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும், பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணரவேண்டும். (ரோ.3:23,6:23) கடவுள் இல்லையென்றால் நாம் நம் விருப்பப்படி நம் மனம்போல வாழலாம். பரிணாமக் கொள்கையைப் பிடித்துக்கொண்டு கடவுளை உதாசினப்படுத்தி வாழ்கிற ஒரு கூட்டம் உண்டு.
கடவுள் உயிரோடிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கும் கடுமையான முயற்சியே, கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
கடவுள் இருக்கிறார் என்பதற்கு நான் கொடுக்கும் இறுதியான விவாதம். கடவுள் இருக்கிறார் என்பது எனக்கு எப்படித்தெரியம்? நான் கடவுளுடன் தினமும் பேசுவதால், அவர் இருக்கிறார் என்பதை அறிகிறேன். அவர் பேசுவதை நான் சத்தமாகக் கேட்பதில்லை ஆனால் அவர் பிரசங்கத்தை, வழிநடத்துதலை, அன்பை, கிருபையை உணர்கிறேன். என் வாழ்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுக்கிற பொழுது கடவுள் இருக்கிறார் என்பதைத்தவிர, வேறு விளக்கம் கொடுக்க முடியவில்லை. கடவுள் என்மை ஆச்சரியமான விதமாக இரட்சித்து என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். ஆகவே அவரைத்துதித்து அன்பு செலுத்துவதைத்தவிர நான் ஒன்றும் இல்லை என்று உணர்கிறேன்.
இறுதியாக கடவுள் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின் மூலமாக அறிந்துகொள்கிறோம். (எபி.11:6). தேவன்பேரில் வைக்கும் விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல. விசுவாசம் என்பது ஒரு பாதுகாப்பான, வெளிச்சமான அறையில் அடி எடுத்து வைப்பதாகும். இதில் ஏற்கெனவே 90 சதவிகித மக்கள் இருக்கிறார்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum