போதிக்கும் அபிஷேகம்
Fri Feb 12, 2016 9:42 am
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அருமையானவர்களே! வேதத்தில் அநேக உபதேசங்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு பவுல் எழுதிய நிருபங்கள் மூலமாகவும் மற்றும் அவருடைய பல்வேறு சீஷர்கள் எனப்பட்ட அப்போஸ்தலர்களால் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலமாகவும் உப தேசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உபதேசங்களின் அடிப்படையில் தான் இன்று பல்வேறு விதமான சபைகளும் உள்ளது.
ஒரு சபை பிரிவை வைத்து அத்திருச்சபையின் மக்கள் (மந்தை) யாவரும் அதன்படியே நடப்பர். ஒரு விசுவாசியின் தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சியில் தேவன் அவனை நடத்தும் பங்கு, இந்த நாட்களில் மாறி, கொஞ்சம் கொஞ்சமாக சபைகளும், சபைகளின் சட்ட திட்டங்களும் தான் இன்று அவனை அதிகமாக பாதித்து (Influnce) நடத்துகின்றது. அவைகள் யாவும் கிறிஸ்துவுக்குள் அவனை வளர்ந்து வருவதற்கு உதவுகிறதா என்றால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியுள்ளது.
ஆம். இந்த கடைசி காலங்களில் கிறிஸ்தவ உலகம் உபதேசம் உபதேசம் என்று சொல்லி அந்த பரிசேயரின் ஆவி சபைகளுக்குள் கிரியை செய்து கொண்டு வருகின்றது. ஆம் அவர்கள் அறிவு என்னும் திறவுகோலை கையில் வைத்திருக்கிறார்கள்.
எதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டுமோ எதை வலியுறுத்த வேண்டுமோ அதை செய்யாதபடி வெறும் உயிரோட்டமில்லாத உபதேசங்களை கட்டாயப்படுத்தி கற்பித்து ஜனங்களை இடறலுக்கும் சடங்காச்சாரங்களாக செய்வதற்கும் வலியுறுத்தி வருகின்ற மனுஷ உபதேசங்களாய் மாறுகிறது.
உபதேசங்களை பரிசுத்த ஆவியின் துணையோடு உருவாக்கிய பவுல் அப்போஸ்தலனே உபதேசங்களைப்பற்றி சொல்லும்போது கிறிஸ்துவுக்குள் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை. புதுசிருஷ்டியே காரியம் என்று கூறினார். ஆம் ஒருவன் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக மாறவில்லை என்றால் எப்படிப்பட்ட வெறுமையான உபதேசங்களில் நிலைத்திருந்தாலும் பிரயோஜனம் ஒன்றும் இல்லை.
எனவே புதுசிருஷ்டி என்ற காரியத்தை முதன்மை படுத்தாதபடிக்கு உபதேசத்தை மாத்திரம் முதன்மைபடுத்துவோமானால் அது சாரமற்ற உப்பைப் போலாகும். உணவு பதார்த்தங்கள் இல்லாமல் வெறும் உப்பை வைத்துக் கொண்டால் என்ன பிரயோஜனம்?
புதுசிருஷ்டி = மனம் மறுரூபம்
சரி புதுசிருஷ்டி புதுசிருஷ்டி என்று சொல்கிறோமே அப்படி யென்றால் என்ன? என்பதைக் குறித்தும் நம் அன்றாட வாழ்க்கையிலும் மனுஷர் கற்பிக்கும் உபதேசத்தை முன்னிலையாகக் கொண்டு வாழும் வாழ்க்கை என்ன என்பதைப் பற்றியும் சற்று விளக்கமாகப் பார்ப்போமா!
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான். புழை யவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின 2கொரி5:17
அந்தப்படி முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளான கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள். எபே 2: 22-24
புதிய சிருஷ்டியாய் நாம் உருவாக்கப்படுவதற்கு நமக்குண்டான பழைய நடக்கைகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய குணங்கள், பழைய தன்மைகள், பழைய கெட்ட வீணான சிந்தைகள் முற்றிலும் நம்மை விட்டு மாற வேண்டும் என்று வேதம் போதிக்கிறது. ஒரே வார்த்தையால் சொல்லவேண்டுமானால் நம் மனம் மறுரூபமாக்கப்படவேண்டும்.
மறுரூபமும் போதனையும்
மனம் மறுரூபமாக்கப்படுதல் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதாவது நம் தனிப்பட்ட வாழ்;க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நிலைகளில் இருப்பார்கள். சிலர் ஜீவனத்தின் பெருமை மிக்கவர்களாயிருப்பார்கள். ஆதற்கு காரணம் சிறு வயதிலிருந்தே, வளர்ப்புமுறைகளாலோ, தன்னைச் சுற்றியுள்ளவர்களாலோ அப்படி காணப்படுவார்கள்.
வேறு சிலரோ ஜீவனத்தின் பெருமை இல்லாமல் கண்களின் இச்சை உள்ளவர்களாய் காணப்படுவார்கள். மற்றும் சிலர் மாம்சத்தின் இச்சை உள்ளவர்களாவோ அல்லது பணம் மற்றும் பொருளாசை
உள்ளவர்களாகவோ காணப்படுவார்கள். சிலருக்கு எல்லாம் இருக்கும். ஆனால் ஒருசில காரியங்கள் மேலோங்கிக் காணப்படும்.
மனுஷர் கற்பிக்கும் உபதேசங்களால் இவைகளை சீர்படுத்த முடியாது. மாறாக தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நம் நிலையை நன்கறிந்திருக்கிறவர். நமது பெற்றோர் கணவர் மனைவி நடத்துபவர் மேய்ப்பர் போதிப்பவர் இவர்களெல்லாரைக்காட்டிலும் நம் உள்ளான அந்தரங்க நிலைமையை அறிந்தவர். எனவே தான் யோவான் தன்னுடைய நிருபங்களில் இவ்வாராக எழுதியுள்ளார்
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது. ஒருவரும் உங்களுக்குள்ளே போதி;க்கவேண்டியதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது. பொய்யல்ல அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக 1 யோவா 2:27
இதை ஒரு உதாரணத்துடன் விளக்குவோமானால் இன்னும் நமக்கு நன்றாக அந்த அபிஷேகத்தின் வல்லமையை உணர்ந்து கொள்ளமுடியும்.
ஒருவர் நல்ல நகைகள் அணிந்து பிறருக்கு முன்பாக அதை வெளிப்படுத்துவதில் பெருமை உள்ளவர்களாய் காணப்படு பவரை எடுத்துக்கொள்வோம். நகைகளை அணிந்து கொள்வது தவறல்ல. மணவாட்டியைக் குறித்துக் கூறும்போதும் சகோதரிகளைக் குறித்துக் கூறும்போதும் “அவர்கள் அணி வது போல” என்று வேதம் குறிப்பிடுகின்றது. எனவே நகைகளை அணிந்து கொள்ளுதல் தவறல்ல. ஆனால் சிலர் அதனையே மையப்படுத்தி நகை ஆசை உள்ளவராய் அதை ஒரு விக்கிரகம் போல் வைத்து அதை அனுபவிப்பருக்கு அது தேவனை வி;ட்டு விலகச்செய்யும் காரியம் என்பது ஆவியானவருக்குத் தெரியும்.
எனவே அவர்களின் நிலையிலிருந்து “மகளே! உன் அணிகலன்களை கழற்றிவிடு என்று போதிப்பார். இது தனிப்பட்ட ஒருவரின் நிலையை வைத்து அவர்களுக்கு இந்த காரியத்தில் மறுரூபமாக்கப்படுதல் அவசியம் என்று பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் போதிக்கும். மாறாக எல்லாருமே அணிகலன்களை கழற்ற வேண்டும். அவர்கள் யாருமே அணியக் கூடாது என்று போதித்தால் அது தவறானதாகும். எனவே தான் மறுரூபமாக்கப்படுதலை அபிஷேகத்தின் மூலமாய் பெற்றுக்கொள்ளாமல் மனுஷர் கற்பிக்கும் முறையின்படி பெற்றுக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் அவைகள் எல்லாம் வெறும் உபதேசங்களாகக் காணப்படுகிறது.
மறுரூபமாக்கப்படும் அனுபவம் இல்லை. எனவே இப்படிப்பட்ட ஒரு சிலரின் நடக்கைகளை கூர்மையாக கவனித்துப் பார்த்தால் அவர்கள் திருமண காரியங்களில் நாங்கள் நகை அணியமாட்டோம். எனவே நகை வேண்டாம். அதற்கு பதிலாக ரொக்கமாக பணம் தாருங்கள். புது கார் வண்டி தாருங்கள் என்று வரதட்சணையாக சிறிதும் கூசாமல் வெட்கப்படாமல் கர்த்தருக்குப் பயப்படும் பயம் இல்லாதபடி கேட்கின் றதை நாம் பார்க்க முடியும். எதற்காக தாங்கள் நகை போடுவதில்லை என்பதே தெரியாத அறியாத மந்தைகளாக இருப்பது பரிதாப நிலையை அளிக்கிறது.
ஒரு சிலர் நகை அணிகலன்களை அணியக்கூடாது என்று வேதத்தின் ஒரு பகுதியை வைத்துப்போதிக்கின்றனர் வேதத்தில் யாத் 33: 3-4 ல் “கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திர வழியாய் வழிநடத்தி வந்தபோது மோசே நாற்பது நாள் உபவாசித்து சீனாய் மலையிலிருந்து வந்த போது மோசே நாற்பதுநாள் உபவாசித்து சீனாய் மலையிலிருந்து தேவசமூகத்தில் கட்டளைகளையும் கற்பனைகளையும் பெற்று வர சென்றிருந்தான்.
அவன் வர தாமதமானபோது ஆரோனின் மூலமாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய பொன் ஆபரணங்கள் அனைத்தையும் கழற்றி பொன் கன்றுகுட்டியை உருவாக்கினார்கள் யாத் 32:35ல் ஆரோன் செய்த கனறுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார். பின்னும் அவர் 33:3 ல் நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன். நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.
யாத் 33:4 துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்ட போது ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் 33:5 ல் உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போடுங்கள்: அப்பொழுது நான் உங்களுக்குச் செய்ய வேண்டியதை அறிவேன். என்று இஸ்ரேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
கர்த்தர் சொன்னதின் நோக்கம் அந்த ஆபரணங்கள் மூலமாகத்தான் தனக்கு கன்றுக்குட்டியை உருவாக்கி தெய்வம் என்று வழிபட்டு தேவனை விட்டு விலகினர். எனவே தன்னை விட்டு விலகி சென்று விடாதபடிக்கு இனி அப்படிப்பட்ட மதி கெட்ட காரியத்தை செய்துவிடக்கூடாது என்றே தேவன் கூறினார். இப்படிதான் இன்றும் தேவன் பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனை வி;ட்டு விலகச் செய்யும் காரியங்களை போதிக்கிறார்.
எனவே இப்படிப்பட்ட போதனைகளையும் உபதேசங்களையும் நாம் மனுஷர் கற்பிக்கும் மூலமாக கடைபிடிக்காத படிக்கு அபிஷேகம் நமக்கு போதிப்பதன் மூலம் நாம் கடைபிடிக்கும் போது அது உண்மையான மறுரூபமாக்கப்படுதலை நமக்கு கொண்டு வரும். அதுவே கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் நம்மை மாற்றும்.
இது ஒரு சிறு உதாரணம். இது போலத்தான் தேவன் எல்லாக் காரியங்களிலும் தேவன் நமக்கு போதிப்பார்.
எப்போது போதிப்பார்?
ஒருவருக்கு கர்த்தருடைய அபிஷேகம் இருப்பதினால் மாத்திரம் இவைகள் நடந்து விடாது. மாறாக பரிசுத்த ஆவியானவரின் நிறைவான அபிஷேகத்தை பெறுவது மாத்திரமல்ல, புதுசிருஷ்டியால் நம்மை மாற்றுவதற்கு நம்மை முழுவதுமாக எல்லாவற்றையும் எல்லா நிலைகளையும் தேவனுக்கு அர்ப்பணித்து கற்றுத்தரவும் கீழ்படியவும் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது தான் தேவனுடைய அபிஷேகம் ஒருவருக்கு போதிக்கும் அபிஷேகமாக வெளிப்படுகிறது.
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங் 32:8
இப்படிப்பட்ட மறுரூபமாக்கப்படும் காரியங்களில் அபிஷேகம் போதிக்கும் போது பரிசுத்த ஆவியானவருக்கு நாம் கீழ்படி வோமானால் மற்ற உலகப்பிரகாரமான வேலை ஸ்தலங்களிலும் குடும்ப காரியங்களிலும் சபை காரியங்களிலும் எல்லா நேரங்களிலும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு போதித்து அவருடைய ஆலோசனைகளை அருளி செம்மையான பாதையில் பசும்புல்லுள்ள இடங்களில் நம்மை நடத்தி இயேசு கிறிஸ்துவின் மூலமாக நித்திய ஜீவனைத் தந்திடுவார். ஆமென்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum