தீர்க்கதரிசியும் தீர்க்கதரிசனமும்
Fri Feb 12, 2016 9:41 am
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
கர்த்தருடைய வார்த்தைகளை பகிர்ந்துகொள்ளும்படியாக கர்த்தர் கொடுத்த நல்ல தருணத்திற்காக தேவனுக்கு முதலாவது நன்றி செலுத்துகிறேன்.
அருமையானவர்களே அநேகர் தங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை அறிவதிலேயே அதிக கவனம் செலுத்துவர். ஒரு அவிசுவாசியானால் தன்னுடைய எதிர் காலத்தை அறிந்து கொள்ளும்படியாக கிளி ஜோஸியம், கைரேகை, நாள் பார்ப்பவன் அல்லது குறிசொல்பவனையோ தேடிப்போவார்கள். விசுவாசியோ தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும், தேவ சமாதானத்திற்காகவும், இன்னும் பல காரணங்களுக்காக நாம் தீர்க்கதரிசியை நாடிப்போகலாம். இதைத்தான் நாம் கொஞ்சம் விபரமாக தீர்க்கதரிசி மற்றும் தீர்க்கதரிசனம் பற்றி வேதாகமத்தின் அடிப்படையில் பார்ப்போம்.
யார் இந்த தீர்க்கதரிசி?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு நெருங்கியிருக்கிறவனும், அவரிடத்திலிலுந்து செய்தியை கொண்டு வருகிறவனே உண்மையான தீர்க்கதரிசி. சுருக்கமாக சொல்வோமானால் அவன் கர்த்தருடைய தூதன். ஒருவேளை அந்த செய்தி தேவனிடத்திலிருந்து வரவில்லை என்றால் அது கள்ள தீர்க்கதரிசி.
எது தீர்க்கதரிசனம்?
எதிர்காலத்தைக் குறித்ததான ஆசீர்வாதமோ அல்லது எச்சரிப்போ தேவ மனுஷர் மூலமாக வரும் கர்த்தருடைய செய்தியானது தீர்க்கதரிசனம் எனப்படும்.
கர்த்தர் எதற்காக தீர்க்கதரிசியை உண்டாக்கினார்?;
சத்தியவான் எவனும் அவர் சத்தம் கேட்கிறான். தேவன் பரிசுத்தராக இருக்கிறபடியினால், அவருடைய ஆடுகள் (அவருடைய பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்ட ஜனங்கள்) அவருடைய சத்தத்தை கேட்பார்கள். எனவேதான் பழைய ஏற்பாட்டின் காலத்தில் அவருடைய செய்தியை அனுப்பும் படியாக தேவனுக்குகந்த மனிதரை அவர் தேர்ந்தெடுத்து கர்த்தர் ஜனங்களோடு உறவாடினார்.
நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார். உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
இன்று அநேகர் தீர்க்கதரிசி என்பவர் பழைய ஏற்பாட்டிற்கு மாத்திரம்தான் உரியவர், புதிய ஏற்பாடு காலத்திற்கு சரியாகாது என்ற முரணான கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள். அது தவறு என்பதை கீழ்காணும் வசனத்தின் மூலமாக உங்களுக்கு எடுத்து சொல்ல விரும்புகிறேன்.
தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். மத்தேயு 10:41
எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். 1 கொரி 14:31
தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். 1 தெச 5:20
இந்த வசனங்கள் புதிய ஏற்பாடு விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விசுவாசிக்க வேண்டும்
கவனம் தேவை
1. இன்றைய அன்றாட வாழ்க்கையில் அநேக நேரங்களில் கிறிஸ்தவ குடும்பங்கள் தீhக்கதரிசிகளையே நம்பி அவர்களையே தெய்வமாக பாவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் விக்கிரக ஆராதனை செய்து அருவருப்பை சம்பாத்தியம் செய்து கொள்ளுகிறவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை கர்த்தர் நேரடியாக வந்து அவர்களிடத்தில் பேசினாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மனம் இடம் கொடுப்பதில்லை. அருமையானவர்களே தீர்க்கதரிசியானவன் தேவனால் அனுப்பப்பட்;ட தூதனே தவிர தேவன் அல்லவே அல்ல. வேதம் தெளிவாகச் சொல்கிறது
சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். உபா 18:20
2. சில நேரங்களில் தீர்ககதரிசிகள் தங்கள் அனுபவத்திலிருந்தும், அறிவினாலும் அல்லது அவர்கள் புரிந்து கொண்டதை வைத்தும் தீர்க்க தரிசனம் சொல்வதுண்டு. அதாவது தேவன் அவர்களுக்கு கட்டளை கொடுக்காததையும் சொல்வதுண்டு. எனவே இந்த விஷயத்தில் நாம் மிக தெளிவாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். பொய்யான தீர்க்கதரிசிகளையும் கள்ள தீர்க்கதரிசிகளையும் நம்பி நம்முடைய ஆத்துமாவை நாம் இழந்து விடக்கூடாது.
பரிசுத்த வேதத்தை திருப்புவோம்.....
1ராஜாக்கள் 13 ம் அதிகாரத்தில் பேர் குறிப்பிடாத 2 தீர்க்க தரிசிகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒருவன் யூதாவிலிருந்து வந்த கர்த்தருடைய தீர்க்கதரிசி; மற்றொருவன் பெத்தேலிலுள்ள ஒரு வயதான தீர்க்கதரிசி. கர்த்தர் யெரோபெயாம்; என்கிற இஸ்ரேல் ராஜாவிற்கு எச்சரிப்பு கொடுக்கும்படி யூதாவிலுள்ள ஒரு இள தீர்க்கதரிசி;யை தேர்;ந்தெடுத்து நீ ராஜாவுக்கு அறிவித்து திரும்பும் மட்டும் அவனோடு உண்ணவோ குடிக்கவோ கூடாது எனறு சொல்லி அனுப்புவதை பார்க்கலாம்.
அதுபோல அவன் வந்து கர்த்தருடைய காரியத்தை சொல்லி முடித்து விட்டு வீடு திரும்பும் வேளையில், ராஜா அவனை விருந்து சாப்பிட அழைத்தான். ஆனால் அவனோ கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அங்கே உணவு உண்ண மறுத்ததை நாம் பார்க்கிறோம்.
வந்த காரியத்தை முடித்து தன்னுடைய ஊருக்கு வருகிற வழியில் முதிர் வயதுடைய ஒரு தீர்க்கதரிசி அவனிடம் வந்து சாப்பிடுமாறு அழைத்த பொழுது அவன் மறுத்தான். ஆனால் அவர் நானும் ஒரு தீர்க்கரிசி தான், தேவதூதன் என்னோடு பேசினார் என்று செல்லி அவனை நம்ப வைத்து உண்ணும் படியாக பொய் சொன்னான் என்பதை நாம் பார்க்கலாம்.
அந்த தீர்க்க தரிசி சொன்னதை நம்பி உணவு அருந்தி தண்ணீர் குடித்தபொழுது கர்த்தருடைய வார்த்தை திரும்பவும் அந்த முதிர் தீர்க்கதரிசி மூலமாக வெளிப்பட்டு, உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்றான். அப்படியே ஒரு சிங்கம் வந்து அவனை கொன்று போட்டது என்று பார்க்கிறோம்.
தீர்க்க தரிசனமே முக்கியம்
தீர்க்கதரிசனமானது எதிர்காலத்தை குறித்த கர்த்தருடைய வார்த்தை. வேதம் சொல்கிறது வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் கர்த்தருடைய வார்த்தை ஒருபோதும் அழியாது. தீர்க்கதரிசியோ கர்த்தரால் பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரம் மாத்திரமே. ஆகவே தீர்க்கதரிசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்க்கிலும் தீர்க்கதரிசினத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இந்த நிகழ்ச்சியிலே தீர்க்கதரிசி ஒரு தீர்க்கதரிசிக்கே முக்கியத்துவம் கொடுத்தானே தவிர தீர்க்க தரிசனத்திற்கு கொடுக்கவில்லை. ஆனால் கர்த்தருடைய வார்த்தை (தீர்க்கதரிசனம); மாறமல் அது சொன்னதை அப்படியே செய்து முடித்தது.
தீர்க்கதரிசிக்கு தேவன் கொடுத்த அதிகாரம்
தொடர்ந்து இந்த சம்பவத்தில் பார்க்கும்பொழுது அந்த தீர்க்கதரிசி இராஜாவிக்கு எச்சரிக்கை செய்கிற வேளையிலே ராஜா தீர்க்கதரிசிக்கு எதிராக தன் கைகளை நீட்டும்போது ராஜாவின் கை உறைந்து போயிற்று. மறுபடியும் தீர்க்கதரிசியை பார்த்து தேவனிடத்தில் கேட்க சொன்னதினிமித்தம், அவன் தேவனிடத்தில் வேண்டுதல் செய்யும் போது அவனுடைய கை பழைய நிலைமைக்கு வந்து விடுவதைப் பார்க்கலாம். கர்த்தருடைய மகிமை தீர்க்கதரிசியோடே இருந்ததை மிகத் தெளிவாக நாம் காண முடியும். தீர்க்கதரி;சிக்;கு அதி காரமும் வல்லமையும் உண்டு என்பதை இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
இதையே வேதம் சொல்கிறது. தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித் தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான் மத் 10:41
திருத்தப்பட வேண்டிய தவறுகள்
1. மறுஉறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்
கர்த்தர் நம்மோடு நேரடியாக பேசுவாரானால், இதை நாம் யாரி;டமும் சென்று மறு உறுதிப்படுத்திக் கொள்ள அவசியம் இல்லை. ஆனால் தீர்க்கதரிசி மூலமாக தேவன் பேசுவாரானால் கர்த்தரிடத்தில் மட்டுமே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு மாறாக மற்றொரு தீர்க்கதரிசியை தேடிப்போகக் கூடாது. அப்படி போவீர்களானால் அது ஒருகாலமும் முடியாத தொடர்கதையாகி விடும். எப்படியெனில் 2 வது தீர்க்க தரிசியை தேடிப்போவோம் அதிலும் சந்தேகம் இருந்தால் 3 வது தீர்க்கதரிசியை....... 4 வது தீர்க்கதரிசியை தேடிப்போவோம். இப்படியே போவோமென்றால் கடைசி வரைக்கும் கர்த்தருடைய திட்டம் நம்மிடத்தில் நிறைவேறாமல் போய் விடும்.
இள தீர்க்கதரிசி முதிர் தீர்க்கதரிசி சொன்ன விஷயங்களைக் குறித்து கண்டிப்பாக கர்த்தரிடத்தில் மறுஉறுதிப்படுத்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர் தவற விடவே விளைவு மோசமாக இருந்தது என்று பார்க்கிறோம்.
2. சரிசெய்யப்பட வேண்டும்
அருமையானவர்களே! எச்சரிக்கையாக வரும் தீர்க்க தரிசனங்களை அசட்டையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உடனே நடக்கக் கூடிய காரியமாக கூட இருக்கலாம். அதை ஏற்றுக்கொண்டு நம்முடைய பாதையை சரிசெய்யாவிட்டால் நம்முடைய வாழ்கை மிக மோசமாகிவிடும். இந்த நிகழ்ச்சியில் அந்த தீர்க்கதரிசிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் அது நிறைவேற அதிக ஆண்டுகள் எடுக்கவில்லை. அடுத்த நாளே அவனை மரணத்திற்கு கொண்டுபோய்விட்டது. நினிவே நகரத்துக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டபோது அனைவரும் அவர்களை காப்பாற்றிக் கொண்டார்கள்.
அநேக நேரங்களில் ஜனங்கள் ஆசீர்வாதமான செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவி;ட்டு எச்சரிக்கை செய்தியை கேட்காமல் தூங்கிவிடுகின்றனர். எனவே இரட்சிப்பு, வல்லமை, ஆசீர்வாதம், பரிசுத்த ஆவியை இழந்துபோகிறோம்.
3. மன்னிப்பு
ஒருவேளை நாம் மறுஉறுதிப்படுத்தாமல் தவறிவிட்டோமானால் கர்த்தரிடத்தில் நாம் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க தவற வேண்டாம். அந்த இள தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் மறந்து போய், கர்த்தர் நினைவுபடுத்தினாலும் உணர்வில்லாமல் காணப்பட்டதாலே அவன் மரித்து போய் விட்டான். கர்த்தரிடத்தில் வந்து மன்னிப்பு கேட்டிருப்பானேயானால் அவனுடைய உயிரை காப்பாற்றி இருக்க முடியும். அவனுடைய தவறுதலுக்காக கர்த்தர் மன்னித்திருப்பார்.
எப்பொழுது தீர்க்கதரிசனம் சம்பவிக்கும்?
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, ஆசீர்வாதமும் எச்சரிக்கையும் சோந்;ததுதான் தீர்க்கதரிசனம். அநேக ஜனங்கள் தீர்க்கதரிசனங்களைப் பெற்றுக்கொண்டு அது நம் வாழ்க் கையில் அடுத்த நிமிடமோ அல்லது அடுத்த மணி நேரத்திலோ அல்லது நாளையோ நடந்து விடும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். ஆபிராகாமை கர்த்தர் வானத்து நட்சத்திரங்களைப் போல ஆசீர்வதிப்பேன் என்று சொன்னார். இந்த காரியம் ஒரு நிமிஷத்திலோ ஒரு நாளிலோ அல்லது வருஷத்திலோ நடக்க கூடிய காரியமா? வசனத்தை பாருங்கள்
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2:3
இந்த கால தாமதம் இன்னும் நாம் கர்த்தருடைய பாதையில் நடந்து அவருடைய ஆசீர்வாத்தை சுதந்தரித்துக் கொள்ளும் படியாகவேதான். இயேசு கிறி;ஸ்து சீக்கிரமாய் வரப்போகிறார் என்று நாம் எல்லோரும் இந்த பொதுவான தீர்க்கதரிசனத்தை பெற்றிருக்கிறோம். ஆகவே இன்றைக்கு பரிசுத்தமான வாழ்;க்கை வாழ நம்மை அவருக்கு ஒப்புக் கொடுப்போமா!
இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும் தீர்க்கரிசியையும் தீர்க்கதரிசனைங்களைக் குறித்தும் அலட்சியமாக இருக்க வேண்டாம். கர்த்தர் நம்முடைய பாதைகள் செவ்வையாய் இருக்கும்படியாக தீர்கதரிசிகளையும் தீர்க்கதரிசனங்களையும் நமக்காக வைத்திருக்கிறார்.
ஆசீர்வாதமான வசனத்தை மட்டும் ஏற்றுக்கொள்வது மட்டு மல்லாமல் எச்சரிக்கையின் சத்தத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தைக்கு மிகவும் கவனம் செலுத்துவோமாக. நம்முடைய பாதைகளை சீர் படுத்தும்படியாக கர்த்தர் அநேக தீர்க்கதரிசிகளை விட்டுச் சென்றிருக்கிறார். தீர்க்கதரிசிகள் நம்மை பெலப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் சீர்படுத்தவும் ஆலோசனை கொடுக்கவும் கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள்
தீர்க்கதரிசனங்ளை அசட்டைசெய்யாமலும் அதே நேரத்தில் எல்லா தீர்க்கதரிசனங்களையும் கர்த்தரிடம் உறுதி செய்யாமலும் உடனே நம்பி விடக்கூடாது. பரிசுத்த ஆவியானவர் எப்போதும் நம்முடனே இருக்கிறார். எப்படி அந்த யூத தீர்க்கதரிசி கர்த்தருடைய சத்தத்தை கேட்டானோ அதோபோல நாமும் அவருடைய பாதத்தில் அமர்ந்திருப்போமானால் அவருடைய சத்தத்தை கேட்க முடியும். இல்லாவிட்டால் கடைசி நாட்களில் சத்துருவால் இழுத்துக்கொள்ளப்படுவோம். தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum