கிறிஸ்துவுக்குள் மாறாத பிரமாணங்கள்
Fri Feb 12, 2016 8:59 am
"நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால் உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர். ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் (லேவி. 19:2)."
"உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர். ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே
(1 பேது. 1:15-16)."
பழைய ஏற்பாட்டு சட்டங்கள் யாவும் கிறிஸ்துவுக்குள் நிறைவேறிவிட்டன என்பது உண்மைதான். ஆயினும் அந்தச் சட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் நெறிகள் நித்தியம் வரை நிலைத்திருக்கும்.
பயபக்தி:
பெற்றோருக்கும், பெரியவர்களுக்கும், அந்நியர்களுக்கும் கூட உரிய மதிப்பையும், மரியாதையையும் இஸ்ரவேலர் கொடுக்க வேண்டும் என்பது தேவ கட்டளை (லேவி. 19:3, 32-34). அதுபோலவே கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கையிலும் கீழ்ப்படியாமைக்கும், முரட்டாட்டத்துக்கும் இடமில்லை (எபே. 2:2). உங்களுக்குள் இருக்கிற கிறிஸ்து இயேசு சாந்தமும் மனத்தாழ்மையும் உடையவர் (மத். 11:29). அவர் தன் பெற்றோருக்கு ஒரு தாழ்மையுள்ள தச்சு வேலைக்காரராக கீழ்ப்படிந்திருந்தார் (லூக். 2:51). கிறிஸ்துவுக்குள் அவருடைய தாழ்மையின் சிந்தை உங்களுக்குரியது (பிலி. 2:5-11). நம்முடைய ஆவியானவரும் கீழ்படிதலின் ஆவியானவர். அவர் உங்களைத் தெய்வ பயத்தோடே கீழ்ப்படியப் பண்ணுவார் (எபே. 5:18-21).
உதாரத்துவம்:
தேவனைப் போலவே இஸ்ரவேலரும் உதாரத்துவமாய் இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்த்தார். அவர்கள் முழு அறுவடையையும் அறுக்கவோ சேகரிக்கவோ இல்லை. எளியவர்களுக்கும் அந்நியர்களுக்கும் போதுமான அளவு வயலிலேயே விட்டு வைத்தனர் (லேவி. 19:9-10). அவர்கள் கனி மரங்களை நாட்டியபோது மூன்று வருஷம் அதின் கனிகளைப் புசிக்க அனுமதிக்கப்படவில்லை. நான்காம் வருஷம் அதின் கனிகளெல்லாம் முழுமையாக ஆண்டவருக்கு செலுத்தப்பட்டது (லேவி. 19:23-24). தேவனுடைய ராஜ்ஜியம் உதாரத்துவத்தில் செயல்படுகிறது.
அப்படியானால் கிறிஸ்துவுக்குள் வாழும் நீங்கள் எத்தனை மடங்கு தாராளமாய் இருக்கவேண்டும்! கொடுப்பது எல்லாம் விதைப்பதுதானே (பிலி. 4:17). பெருக விதைத்துப் பெருக அறுப்பதே கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சிலாக்கியமும் வாழ்க்கைப்பாணியுமாகும். உங்கள் இரட்சகரைப் போலவே நீங்களும் உதாரத்துவமாய் இருக்கும்போது ஆண்டவர் உங்கள் களஞ்சியத்தைப் பெருகப் பண்ணி உங்கள் விளைச்சலை வர்த்திக்கப் பண்ணுவார். உங்கள் உதாரத்துவம் அநேகரைத் துதிக்க வைக்கும் (2 கொரி. 9:6-13).
மனதுருக்கம்:
ஆண்டவர் மனதுருக்கமும் இரக்கத்தில் பெரியவருமாயிருக்கிறார். தன் ஜனங்களும் அன்பும் மனதுருக்கமுமாய் இருக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். தேவனுடைய ராஜ்ஜியத்தில் மற்றவர்களை திருடி, ஏமாற்றுவதற்கு எள்ளளவும் இடம் கிடையாது. வேலைக்காரர்களின் கூலி, வேலை செய்த நாளின் பொழுது போகுமுன்னே அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். விடியற்காலம் மட்டும் அதை வைத்திருக்கக் கூடாது. அனுதினக்கூலியில் அனுதினமும் சாப்பிட வேண்டிய ஏழையின் நிலையை கர்த்தர் கவனித்திருக்கிறார் (லேவி. 19:13; உபா. 24:14-15; எரே. 22:13). ஊனமுற்றவர்கள் மீது சிறப்புக் கரிசனை காட்ட வேண்டும் என்பது தேவ கட்டளை (லேவி. 19:14). தேவையுள்ளவர்கள் மீது ஒரு விசேஷித்த கரிசனையை கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய மனதுருக்கம் உங்கள் மூலமாய் வியாதியஸ்தர்கள், தேவையிலிருப்பவர்கள் யாவர் மீதும் பாய்ந்து செல்கிறது (மத். 14:14; மாற். 5:19; 8:1-3).
ஆண்டவரே, நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால்,
"உமக்கென்று பரிசுத்தனாயிருக்கிறேன். பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் என்னை உமக்கு சொந்த ஜனமாயிருக்கும்படி தெரிந்து கொண்டீர் (உபா. 7:6)."
நன்றி: தந்தை.பெர்க்கமான்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum