எச்சரிக்கை: Indian Christian Church என்ற பெயரில் கள்ள அமைப்பு
Fri Feb 05, 2016 7:49 pm
Indian Christian Church என்ற பெயரில் பரவிக்கொண்டிருக்கும் கள்ள அமைப்பைக் குறித்து ஏற்கனவே எழுதி எச்சரித்திருக்கிறேன்.
இன்றும் காலையில் ஒரு கல்லூரி மாணவர் மிகுந்த கலக்கத்துடனே என்னை தொடர்பு கொண்டார். நானோ அதிகாலை 4 மணிக்கு தான் படுக்கைக்கு சென்றிருந்தேன். ஆனாலும் தவிர்க்கமுடியாமல் அவரோடு பேசியதில் நிலைமையின் தீவிரம் புரிந்தது.
நீ கிறிஸ்தவனா என்பதில் துவங்கி மடக்கி மடக்கி கேள்விகளை எழுப்பி முடிவில் நான் கிறிஸ்தவனல்ல என்று சொல்லும்வரை அந்த கள்ளன் இந்த அப்பாவி இளைஞனை மனரீதியில் துன்புறுத்தியிருக்கிறான். முற்றிலும் சமாதானம் இழந்த நிலையில் என்னை தொடர்புகொண்ட அந்த வாலிபனை நான் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றானது.
இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் சர்வதேச முகாமில் கலந்துகொள்ள வருந்தி அழைத்த அந்த நபரை மறுக்கமுடியாமலும் தவிக்கிறார், நம்மவர். விஷயம் என்னவென்றால் ...
எந்த சபையும் பைபிள் மாதிரியில் இல்லை. முக்கியமாக சீஷத்துவத்தை முற்றிலும் மறந்துவிட்டது. ஆராதிப்பதும் ஜெபம் செய்வதும் வசனம் கேட்பதும் கிறிஸ்தவமல்ல. கன்மலையில் கட்டப்பட்ட வீட்டைப் போன்ற உறுதியான விசுவாசம் வேண்டுமென்றால் எங்களிடம் வந்து பயிற்சி எடுக்கவேண்டும். அதுவரை ஊழியத்துக்கே செல்லக்கூடாது....இப்படி போகிறது கதை.
இளைஞர்களை குறிவைத்து இயங்கும் இந்த கள்ள அமைப்பைக் குறித்து திருச்சபை அமைப்பும் அதன் தலைவர்களும் எச்சரிக்கையாய் இருந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அமைப்பிடம் என்ன பிரச்சினையென்றால் ...
இது எந்தவொரு உள்ளூர் சபையுடனும் ஐக்கியமின்றி தனித்து இயங்குவது. இதன் கொள்கைகளும் கூட விகர்ப்பமாய் இருக்கிறது என்பதே.
ஏற்கனவே கிறிஸ்தவத்தைக் குறித்த தெளிவின்றி இளைய சமுதாயம் குழம்பியிருக்க இதுபோன்ற அமைப்புகளும் எழும்பி குடும்பங்களை சிதைக்காதிருக்கவேண்டும்.
பெற்றோருடன் செல்லும் உள்ளூர் சபை சிறியதேயானாலும் அங்கே கற்பிக்கப்பட்டு கற்பிக்கும் பொறுப்பையேற்றுக்கொள்ளுவதே ஆரோக்கிய கிறிஸ்தவமாகும். குடும்ப ஜெபம் மற்றும் குழு ஜெபத்தினாலும் வேத ஆராய்ச்சியினாலும் பக்திவிருத்தியுண்டாகும்.
மற்றபடி அனைத்தும் இக்கரைக்கு அக்கரை பச்சை கதையே.
http://chennaiicc.org/
https://in.answers.yahoo.com/question/index…
நன்றி: சில்சாம்
Chennai International Christian Church
A member of the SoldOut Discipling Movement of Churches
CHENNAIICC.ORG

Permissions in this forum:
You cannot reply to topics in this forum