நியாயம் செய்கிற இறைவன்
Wed Feb 03, 2016 10:36 am
ஆம், அனைத்து உலகையும் உருவாக்கிய இறைவன் நியாயம் செய்கிறவர். நீதியாய் நியாயம் செய்கிறவர். மெய்யாய் நீதிமானுக்குப் பலன் அளிக்கிறவர். ஆம். சகோதரனே, சகோதரியே! பூமியலே நியாயம் செய்கிற இறைவன் உண்டென்று நான் உங்களுக்குள் சொல்லுகிறேன். இவரை நீங்கள் அறிவீர்களா?
“அப்பொழுது மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாய்ஞ் செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்” சங்கீதம் 58:11.
அநீதியாய் விரட்டப்பட்டு, சவுலினால் ஏற்பட்ட பாடுகளை அனுபவித்து. காடுகளில் மறைந்து வாழ்ந்து, தம் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள அரும் பாடுபட்ட மன்னன் தாவீது கூறிய சொற்கள் இவை. மனிதரிடத்தில் நீதியை எதிர்பார்த்து ஏமாந்து போனார். அவர் கண்டு கொண்ட உண்மை என்ன தெிாயுமா?
“மெளனமாய் இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புச் செய்வீர்களோ? மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள். பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீாகள்”. சங்கீதம் 58:1,2.
ஆம், மனிதரிடத்தில் நீதி கிடைப்பதில்லை. நீதிமன்றங்களில் நீதி கிடைப்பதில்லை. ஏன்? சமயத் தலைவர்களிடத்தில் நீதி கிடைப்பதில்லை. இதற்கு எங்களுக்கு வரும் சில கடிதங்களே சாட்சி. மனிதனிடத்தில் நீதி கிடையாமற்போகும்போது, அவர்கள் எங்களுக்கு எழுதுகிறார்கள்: “எங்களுக்காக இறை இயேசுவினிடத்தில் மன்றாடுங்கள். அவர் எங்களுக்கு நீதி செய்வார்”. இதையே அன்று மன்னன் தாவீதும் செய்தார்.
தம்முடைய சிறுமைகளைக் காண்கிற ஓர் இறைவன் உண்டு. அவரிடத்திலிருந்து நீதி கிடைக்கும், அவர் நீதிமானுக்குப் பலன் அளிக்கிறவர், அவர் நீதியாய் நியாயம் செய்கிறவர் என்பதை அறிந்திருந்த தாவீது இறைவனிடம் முறையிட்டுப் பாடிய சங்கீதமே 58ஆம் சங்கீதம். நீதிக்காய் ஏங்கும் அருமை நேயர்களே! நீங்களும் இறை இயேசுவினிடத்தில் முறையிடுங்கள். அவர் மெய்யாய் உங்களுக்கு நீதி செய்வது உறுதி.
ஆம், நியாயம் செய்கிற இறைவன் ஒருவர் உண்டு. ஆனாலும் சிலர் இதை மறந்து கடவுளே இல்லை என்று நினைத்துக்கொண்டு, மனம்போன போக்கில் வாழ்கிறார்கள். பாவத்திலும், அக்கிரமத்திலும், அநியாயத்திலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆனால் ஒரு நாள் ஆண்டவர் தம் நீதியை நிலைநாட்டும்போது இவர்கள் கதி என்னவாகும்? சகோதரனே, சகோதரியே, நீங்கள் இவர்களை விட்டு விலகுங்கள். வேறு சிலர் நீதி செய்யும் இறைவன் ஒருவர் உணெட்ன்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் தங்கள் சுய வாழ்வை விட்டுவிட மனது இல்லாமல், தங்கள் காணிக்கைகளினாலும், அறச்செயல்களினாலும், நற்கிரியைகளினாலும் இறைவனைத் திருப்திப்படுத்தி, நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக் கொள்ளலாமென்று கனவு காண்கிறார்கள். ஆனால் திருமறையின் எச்சரிப்பைக் கேளுங்கள்.
“மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” கலாத்தியர் 6:7.
இன்னும் சிலர் மெய்யான இறைவனாகிய இயேசுவை அறிந்தவர்க்ள. ஆனால் இயேசு அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், கனிவுள்ளவர் என்பதை மட்டும் நினைவில் கொண்டு, அவர் நீதியாய் நியாயம் விசாரிக்கிறவர் என்பதை மறந்து போகிறார்கள். ஆகவே பரிசுத்த வாழ்க்கையைக் குறித்துக் கவலையின்றி, கருத்தின்றி, இறை அச்சமின்றி வாழ்கிறார்கள். ஆனால் சகோதரனே, சகோதரியே! இப்படி வாழ்கிறவர்கள் நியாயத் தீர்ப்பு நாளில் நிச்சயமாய்க் கணக்குக் கொடுக்கவேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று இரக்கமுள்ள இரட்சகராய் இருந்தாலும், ஒரு நாள் தீர்ப்பளிக்கும் நியாயாதிபதியாய் வருவார். இதை விளக்க ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்.
ஒரு நாள் ஒரு நீதிபதி தம் நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஓர் இரயில் பாதையைக் கடக்கவேண்டும், அப்பொழுது அருகிலிருந்த குடிசையிலிருந்து வந்த ஒரு குழந்தை தண்டவாளங்களின் நடுவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டுத் திடுக்கிட்டார். தொலை தூரத்தில் வேகமாக வந்துகொண்டிருக்கும் ஓர் இரயில் வண்டியைக் கண்டார். உடனே வேகமாய் ஓடி, அக்குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றினார். பிறகு நீதிமன்றத்திற்குச சென்றார். அங்கு கொலையாளி ஒருவனுக்கு தூக்குத் தண்டனை கொடுத்து, தீர்ப்பு அளித்தார்.
காலையில் சிறு குழந்தைக்கு இரட்சகராக இருந்த அவர், மாலையில் ஒரு குற்றவாளிக்கு நீதிபதியாய் இருந்தார். ஆம், சகோதரனே, சகோதரியே! கல்வாரிச் சிலுவையில் நமது தண்டனையை ஏற்றுக்கொண்டு இரட்சகராய்க் காணப்பட்ட அதே இயேசு கிறிஸ்து, ஒரு நீதி செய்யும் இறைவனாய்த் தரிசனம் ஆவார்.
சகோதரனே, சகோதரியே! இன்று நீ இறை இயேசுவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால், நியாயத்தீர்ப்பின் நாளிலே நீ அவரைச் சந்திக்க அஞ்ச வேண்டியதில்லை. யோவான் தம்முடைய தரிசனத்தில் இந்த நீதியின் இறைவனை எப்படிக் காண்கிறார்?
“பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன். இதோ, ஒரு வெள்ைள்க குதிரை காணப்பட்டது. அதின் மேல் ஏறியிருந்தவர் உண்மையும், சத்தியமும் உள்ளவர் என்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயம் தீர்த்து யுத்தம் பண்ணுகிறார்” வெளிப்பாடு 19:11.
ஆம், ஒரு நாள் கழுதைக் குட்டியின்மேல் ஏறி, சமாதானத்தின் இறைவனாக வந்தவர், அருட்காலம் முடிந்தபின், நீதியைச் சரிக்கட்ட, நியாயம் செய்கிற இறைவனாக வருவார். ஒரு நாள் வழித்தப்பித் திரிந்த மக்களைக் கனிவுடன் நோக்கிய விழிகள், வாழ்க்கையில் இன்னலுற்று உழலும் ஏழைகளைக் கண்டு கலங்கிய கண்கள், நீதிபதியாய் வரும்போது, கனல் கக்கும் கண்களுடன் வெளிப்படும். ஒரு நாள் ஏழைக்கோலம் பூண்டு வந்தவர், குழுந்தைப் பருவத்தில் கந்தைத் துணியில் கிடத்தப்பட்டவர், தலை சாய்க்க இடம் அற்றவராய் இருந்தவர், தீர்ப்பின் நாளில் மணிமுடிகள் பல தரித்து, மன்னாதி மன்னராய், நியாயம் செய்கிறவராய் வருவார்.
இப்போது சகோதரனே, சகோதரியே, அவர் உங்கள் இரட்சகராய் இருக்கிறாரா? அப்படியானால், உங்களுக்கு நீதி கிடைக்கக் கடைசி நாள் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த உலகிலும் அவர் உங்களுக்கு, அதாவது, தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு, நியாயம் செய்வார். இதோ, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியைக் கேளுங்கள்.
“தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்யாமல் இருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயம் செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்”. லூக்கா 18:7,8.
ஆம், சகோதரனே, சகோதரியே! அவர் நியாயம் செய்கிற இறைவன். மெய்யாய் அவரை விசுவாசிக்கிறவர்களுக்குப் பலன் உண்டு. மெய்யாய்ப் பூமியலே இன்று நியாயம் செய்வார். இறுதி நாளிலும் நியாயம் செய்வார். அல்லேலூயா!
மன்றாடுவோம்: நீதியாய் நியாயம் செய்கிற எங்கள் இறைவா, உம்மைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, நியாயதிதீர்ப்பின் நாளுக்கென்று தங்களை ஆயத்தம் பண்ணிக்கொண்ட ஒவ்வொருவருக்காகவும் நன்றி செலுத்துகிறேன். இன்று அவர்களுடைய வழக்குகளை விசாரித்து, அவர்களுக்கு இவ்வுலகிலும் நீதி செய்வீராக. மீட்பரும், நீதிபதியுமான இறை இயேசுவின் மூலம் வேண்டுகிறேன். ஆமென்.
- டாலி சாமுவேல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum