மிதிக்கப்படாத பாதை
Wed Feb 03, 2016 10:34 am
நமக்கு முன்பாக 366 நாட்கள் இவ்வாண்டில் காத்துக்கொண்டிருக்கின்றன. இதுவரை மிதிக்காத புதிய பாதையில் நாம் நடக்கப்போகிறோம். அது நாம் அறியாத பாதைதான். ஆயினும் அப்பாதையில் நம்முடன் கைக்கோர்த்து நடக்க ஒருவர் ஆவலாய்க் காத்துக்கொண்டிருக்கிறார். யார் அவர்? அவர்தான் நல்ல மேய்ப்பர் இயேசு கிறிஸ்து.
திருவார்த்தை: சங்கீதம் 31:15: “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது.”
ஆம், என் காலங்கள், உங்கள் காலங்கள் இறைவனின் கைகளில் இருக்கின்றது. ஒரு மனித வாழ்க்கையின் காலங்களை நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கலாம் – சிறு வயது, வாலிப வயது, நடுத்தர வயது, முதிர் வயது. இச்செய்தியைப் படிக்கிற நீங்கள் எப்பகுதியில் இருக்கிறீர்கள் என நான் அறியேன். எதுவாயினும் உங்களுக்குமுன் ஒரு புதிய ஆண்டு காத்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்குமுன் ஒரு பாதை, புதிய பாதை, நீங்கள் அறியாத பாதை, இதுவரை நீங்கள் மிதித்திராத பாதை, உங்கள் வரவை எதிர்நோக்கியிருக்கிறது. அது குறுகிய பாதையோ, நீண்ட பாதையோ நான் அறியேன், நீங்களும் அறியீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்டப் பாதையில் நடக்கவேண்டும். எவ்வளவு தூரம் நடப்போம்? இந்த ஆண்டை முடிப்போமா? இந்தப் பாதையில் என்னென்ன சந்திக்கவிருக்கிறோம்? இவ்வாண்டு ஒரு வளமுள்ள ஆண்டாக இருக்குமா? இப்புதிய ஆண்டிலாவது என் நோய்ப்படுக்கை மாறுமா? என் வீட்டில் ஒரு நல்ல காரியம் நடக்குமா? தீராத என் பிரச்சனை தீருமா? நல்லதொரு வேலை கிடைக்குமா? இப்படி உங்கள் உள்ளத்தில் பல கேள்விகள் எழுவது இயற்கை. உங்களில் சிலருக்கு இப்புதிய ஆண்டு எப்படியிருக்குமோவென்ற ஐயமும் அச்சமும் இருக்கலாம். ஆனால் எல்லா பயங்களிலிருந்தும் உங்களை விடுவிக்க ஒருவர் உண்டு. புதிய பாதையில் உங்களை நடத்திச்செல்ல ஒருவர் உண்டு. அவர்தான் அன்பு மீட்பர் இயேசு கிறிஸ்து. அவர் கரத்தில் உங்கள் கரத்தைக் கொடுத்துவிட்டால் அச்சம் ஏது? ஐயம் ஏது? கொடுக்க ஆயத்தமா சகோதரனே, சகோதரியே? புத்தாண்டு வழிபாட்டில் கலந்து கொண்டிருப்பீர்கள். புதிய தீர்மானங்களும் செய்திருப்பீர்கள். நல்லது. ஆனால் “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” என்று முற்றிலும் தம்மை ஒப்புக்கொடுத்துப் பாடிய தாவீதைப்போல் உணர்வுடன் அவர் கையில் உங்களை ஒப்புக்கொடுத்துவிட்டீர்களா என்பதுதான் கேள்வி. இறைமனிதர் மோசேயின் மன்றாட்டைச் சற்றுக் கவனியுங்கள்: “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” சங்கீதம் 90:12.
யார் ஞானி? என்றென்றும் இவ்வுலகில் வாழ்வேன், வாழ்ந்துகொண்டே இருப்பேன் என்று கனவு காண்கிறவன் அறிவிலி. அல்லது ‘என் நாட்கள் என் கரத்தில் இருக்கிறது’ என்று கூறுபவன் ஞானமற்றவன். யார் ஞானி? தன் நாட்களை எண்ணுகிறவனே ஞானி என்று திருமறை கூறுகிறது. ஏன்? தன் நாட்களை எண்ணும் அறிவு ஒருவனுக்கு இருக்குமேயானால், அவன் துணிகரமாகத் தீயவழியில் நடக்கமாட்டான். தன் நட்களை எண்ணுகிறவன் சிந்திப்பான். மனிதவாழ்வு புல்லுக்கு ஒப்பானது, காலையில் முளைத்து, மாலையில் உலர்ந்துபோகும் புல்லைப் போன்றது என அறிவான். மேலும் மோசே கூறுகிறார்: “எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்” சங்கீதம் 90:9.
உண்மைதானே சகோதரனே! உண்மைதானே சகோதரி! புத்தாண்டின் தொடக்கத்தில் நிற்கும் நீங்கள் சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். உங்கள் நாட்கள், உங்கள் ஆண்டுகள் எப்படிக் கழிந்தன? ஒரு கதையைப்போல் கடந்துவிட்டதல்லவா? நேற்றுதான் தாயின் மடியில் விளையாடியதுபோல் தோன்றுகிறது. ஆனால் இன்று முதிர் வயதை எட்டிப்பிடித்தாயிற்று. கதை! கதை! வெறும் கதை! கதையில் பாதி முடிந்துவிட்டதோ? ஒரு வேளை பெரும் பகுதி முடிந்துவிட்டதோ? உங்கள் கதை நல்ல கதைதானா? இயேசுவால் நீதிமானாக்கப்பட்டவனின் கதைதானா? கடந்துபோன ஆண்டுகள் ஆசிமிக்க ஆண்டுகள்தானா? மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்திருக்கிறீர்களா?
புத்தாண்டின் தொடக்கம் வியாபாரிகளுக்குக் கணக்கெடுக்கும் வேளை. ஒரு கிறிஸ்தவனுக்கும் அது கணக்கெடுக்கும் நாளாய் இருக்கவேண்டும். கடந்த ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்து, ஆண்டவரின் இரக்கமுள்ள கரத்தில் பெற்ற நன்மைகளை எண்ணிப் பார்க்கும் நாள். நாம் அவரை மறுதலித்த நேரங்கள் உண்டு. அவருக்குப் பிரியமில்லாததைப் பேசியதுண்டு. கிறிஸ்தவ வாழ்க்கையில் பல முறை தோல்வி அடைந்ததுண்டு. ஆயினும் அவர் நல்ல கரம், தயவுள்ள கரம், நீதியின் கரம் நம்மைப் பொறுமையுடன் நடத்தியதை எண்ணிப் பார்ப்போம். அது மட்டுமன்று, இது முன்னோக்கிப் பார்க்க வேண்டிய நாள். புதிய ஆண்டு, புதிய வாய்ப்பு, புதிய பொறுப்பு, புதிய சிலாக்கியம் நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
நல்ல புதிய தீர்மானங்களைச் செய்வதைப் பார்க்கிலும், புதிதாய் நம்மை ஒப்புகொடுப்பதையே ஆண்டவர் விரும்புகிறார். இப்புத்தாண்டில் கிறிஸ்துவுக்காக வாழ, கிறிஸ்துவுக்காக உழைக்க, இறைப்பணியின் பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட நம்மைத் தத்தம் செய்வோம், ஒப்புக் கொடுப்போம். அப்பொழுது அவர் நமக்குப் புதிய பெலனை, புதிய வல்லமையை, புதிய கிருபைகளை அருள்வது உறுதி.
,
ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, இவ்வாண்டை எப்படி சந்திப்போம் என்று நாங்கள் அறியோம். புதிய பாதை, நாங்கள் அறியாத பாதை, நாங்கள் இதுவரை மிதிக்காத பாதை. அது இருண்ட இடிமுழக்கங்கள் கொண்ட பாதையோ? இனந்தெரியாத திகில், அச்சம், கவலையோ? வேதனையின் பெருமூச்சோ? இல்லை, ஆனந்தக் கண்ணீரோ? எதுவாயினும், எதிரேயுள்ள நாட்களை நாங்கள் தனியே எப்படி சந்திப்போம்? மிதிக்காத, அறியாத பாதையைக் கண்டுபிடிப்பது எப்படி? நீர் எங்களுடன் வாரும். அது போதும். மற்றவையெல்லாம் மங்கி இருக்கட்டும், தள்ளாடட்டும். இரவு கும்மிருட்டாய் இருக்கட்டும். இருளின் ஆற்றல்கள் ஒளியின்மேல் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யட்டும். நில நடுக்கம், பெருந்தீ, கடும்புயல், சீறும் உலகம், எதுவாயினும் ஒரு குரலைக் கேட்கிறோம். அமைதியைக் கூறி அறிவிக்கும் மேய்ப்பனின் குரல் அது. இயேசுவே, நீர் அமைதியைத் தருகிறீர். இளைப்பாறுதலைத் தருகிறீர். ஆம் இயேசுவே, இதோ, எங்களை முற்றிலுமாய் உம் கரத்தில் ஒப்படைக்கிறோம். எங்கள் பிள்ளைகளை, எங்கள் செல்வங்களை, எங்கள் உடைமைகளை, உம் கைகளில் தத்தம் செய்கிறோம். இனி நாங்கள் செல்லும் பாதையை நாங்கள் அறியாதிருக்கலாம். ஆனால் நீர் அறிவீர். அது போதும். எங்களை ஏற்றுக் கொள்ளும். உம் இனிய பெயரில் வேண்டுகிறோம். ஆமென்.
- டாலி சாமுவேல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum