தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கர்ப்பமாக இருக்கும் போது உண்ண வேண்டிய உணவுகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்ப்பமாக இருக்கும் போது உண்ண வேண்டிய உணவுகள் Empty கர்ப்பமாக இருக்கும் போது உண்ண வேண்டிய உணவுகள்

Tue Mar 12, 2013 8:43 pm




கர்ப்பமாக இருக்கும் போது உண்ண வேண்டிய உணவுகள் Pregant_food_001
கர்ப்பிணிகள்
மிகவும் கவனமாக இருக்க வேண்டியது, சாப்பாட்டு விடயத்தில்தான். இரண்டு
உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே? தாயின் வயிற்றில் கரு
உருவாகி 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.அப்போது ஒரு கர்ப்பிணிக்கு கால்சியம், இரும்பு சத்துகள் அவசியம் தேவைப்படும்.

ஆகவே உங்களின் அன்றாட உணவில் தினமும் ஒருவகை கீரை, பருப்பு, பால், தயிர்
ஆகியவை தவறாமல் இடம்பெறட்டும். தினம் ஒரு அப்பிள், வாழைப்பழம்
சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன்
சூப் சாப்பிடலாம். பாலில் கால்சியம், புரதம் உள்ளிட்ட தாதுஉப்புகள் அதிகம்.

ஆகவே அன்றாடம் ஒரு லிட்டர் வரையில் கொஞ்சம்-கொஞ்சமாகவேனும் பால்
அருந்தி வரவேண்டும். தயிர், பால்பொருட்கள், கொண்டைகடலை, பட்டாணி
சாப்பிடலாம். இத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் மருத்துவர் ஆலோசனைபேரில்
எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் மாத்திரையைவிட பால் நல்லது.

பொதுவாக கர்ப்பமான 4ம் மாதத்தில் அனைவருக்கும் வரும்
பிரச்னை-மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. நிறைய
கீரை- பழங்கள் சாப்பிடுவதுதான், இந்த பிரச்னைக்கு அருமருந்து. பழச்சாறு
சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து
மலச்சிக்கலை நீக்கும்.

பழங்களில் பப்பாளி, அன்னாசியை தவிர்ப்பது நல்லது. 'இத்தகைய பழங்களால்
கரு கலைந்துவிடும்' என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
எனினும் இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை.

'கர்ப்பிணிகள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறுதான் சாப்பிட வேண்டும்' என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இது முற்றிலும் தவறு. அப்படியாக கர்ப்பிணிகள் அரை வயிற்றுக்கு
சாப்பிட்டால் பிரசவத்தின்போது கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ நிகழும்.
இதுதவிர, பிரசவத்துக்கு முன் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, தாய்சேய் இருவரில்
ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கும் வாய்ப்பு போன்றவை ஏற்படலாம்.

அதேவேளையில் 'இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டுமே?' என்று ஊட்டமாக
சாப்பிட்டாலும், சங்கடம்தான். அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடைவரையில் கூடுதலாக இருக்கலாம்.
அதற்குமேல் அதிகரிக்க கூடாது. கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்தஅழுத்தம்
அதிகரிக்கும்.

எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி, பல்வேறு பிரச்னைகளை
உருவாக்கிவிடும். இதுதவிர பிரசவத்திலும் சிக்கல் வரலாம். ஆகவே கொழுப்பு
சத்து குறைந்த-நல்ல உணவுகளை தெரிவு செய்து சாப்பிடுவது அவசியம். தோல்
நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

மேலும் அடர் பச்சை-மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில்
கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அதிகம் உள்ளன. கர்ப்பிணிகள்
சாப்பாட்டில் மட்டுமல்ல, குடிநீர் விடயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
சுத்தமான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி-வடிகட்டி
குடியுங்கள்.

இல்லையெனில், அத்தகைய அசுத்த நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள்
வரலாம். சில பெண்களுக்கு எட்டாம்-ஒன்பதாம் மாதங்களில் உடம்பில் நீர்கோத்து
கை-கால்கள் வீங்கிவிடும்.

இப்படிப்பட்டவர்கள் உணவில் உப்பை குறைத்து கொள்வது அவசியம். இதுதவிர
பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால், உடம்பில்
தேங்கி நிற்கும் நீர் சிறுநீராக வெளியேறி எடை குறையும்.
நன்றி: லங்கா

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum