வியத்தகு விழா
Wed Feb 03, 2016 10:31 am
(ஏசாயா 9:6)
1. வியத்தகு கொண்டாட்டம்:
அக்டோபர் 2, நவம்பர் 14, டிசம்பர் 25 ஆகிய நாட்களில் வரிசையாக மூவர் பிறந்த நாட்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் ஒரு பெரிய வேற்றுமை! குழந்தை காந்தியையோ, குழந்தை நேருவையோ ஒருவரும் கொண்டாடவில்லை, கொண்டாடுவதுமில்லை. ஏன்? அவர்கள் எவ்வளவாய் இந்திய நாட்டின் வரலாற்றை மாற்றப்போகிறார்கள் என்று யாரும் அறிந்திருக்கவில்லை, அறிவிக்கவுமில்லை. யாரும் அவர்களைத் தொழுதுகொள்ளவில்லை, தொழுதுகொள்ள கட்டளைப் பெறவுமில்லை.
2. வியத்தகு குழந்தை:
இயேசு பாலகனைத் தொழுதுகொள்ள விண்தூதர்களுக்குக் கட்டளைப் பிறந்தது. “தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்” (எபிரெயர் 1:6). மேய்ப்பரும் மேதையரும் அவரைத் தொழுதுகொண்டார்கள். தூதர் யரைத் தொழுதனர்? பல்லூழிகாலமாய் அவர்கள் தொழுதுகொண்டவரை. இந்த எளிய பாலகன்தான் அவர்களைப் படைத்தவர். மேய்ப்பர் யரைத் தொழுதனர்? ராஜாக்கள் தங்களைவிட மேலான ராஜாக்களைத்தான் தொழுது கொள்வார்கள். அவர்கள் மன்னாதிமன்னரை, நமக்காய்ப் பரிந்து பேசுபவரை, நமக்காய்த் தம்முயிரை ஈந்தவரைத் தொழுதுகொண்டார்கள் (மத்தேயு 2:11).
3. வியத்தகு அடையளம்:
மேய்ப்பருக்கு அவர்களுக்கு ஏற்ற அடையாளம் கொடுக்கப்பட்டது (லூக்கா 2:12). மேய்ப்பர் ஏழைகள். ஏழைகளுக்கு ஏற்ற அடையாளம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் படுக்கை பஞ்சணை அன்று, புல்லணை. அவர் கிடந்தது தங்கத் தொட்டிலில் அன்று, தீவனத்தொட்டியில். அவர் அணிந்திருந்தது பட்டுத்துணி அன்று, கந்தைத்துணி. மேதையருக்கு அவர்களுக்கேற்ற அடையளாம் கொடுக்கப்பட்டது (மத்தேயு 2:2). ஒரு விந்தைத் தாரகை, வரலாற்றில் தனிச்சிறப்புப் பெற்ற தாரகை அவர்களை வழி நடத்தியது. மேய்ப்பர், மேதையர் சந்தேகப்படவில்லை. இல்லாவிட்டால் மேதையர் நாடு கடந்து வெகு தூரம் பயணம் செய்திரார். ஆனால் ஆணித்தரமான அடையாளத்தை அறிந்திருந்த ஆசாரியர் அதைப் புறக்கணித்தார்கள் (மத்தேயு 2:4-6). அவர்கள் மெத்தப்படித்த அறிவிலிகள்.
4. வியத்தகு மரணம்:
நேருவின் மரண நாள் எது? காந்தியின் மரண நாளைக் கொண்டாடுவோர் எத்தனை பேர்? இயேசுவின் மரணம் விந்தை மரணம். அது சாவற்ற சாவு. இயேசு கூறினார்: “நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார் (யோவான் 10:17,18). அவர் தம்முயிரை மறுபடியும் எடுத்துக்கொண்டாரா? ஆம் – 1 கொரிந்தியர் 15:14-17. ஒருவரின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு மூன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரே ஒருவர் இயேசு மாத்திரமே.
5. வியத்தகு வருகை:
இயேசுவின் பிறப்பையும், இறப்பையும், உயிர்ப்பையும் பொருளுணர்ந்து கொண்டாடுகிறவன் ஞானவான். அவன் இன்னொரு வியத்தகு நிகழ்ச்சிக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வான். அதுதான் இயேசுவின் இரண்டாம் வருகை. இன்று பாலகன், நாளை மாமன்னர்; இன்று புல்லணை, நாளை அரியணை; இன்று கந்தைத்துணி, நாளை விண்ணுடை; இன்று பரம ஏழை, நாளை பரத்தின் இறைவன்.
கிறிஸ்மஸ் ஒரு வியத்தகு விழா! அவர் பிறந்து 2000 ஆண்டுகள் கடந்தும், அவர் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கிறார் மனித உள்ளங்களில். உன் உள்ளத்தில் அவர் பிறந்துவிட்டாரா? இன்று கலர் பேப்பரில் சுற்றி, ரிப்பன் கட்டிய வெகுமதிகளைப் பரிமாறிக் கொள்ளுகிறோம். ஆனால் இயேசுவை மகிழச்செய்யும் ஒரே பரிசு, காணிக்கை உன் குறையுள்ள சின்ன இதயமே!
- சி. சாமுவேல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum