லெந்து நாள் - துக்கம் கொண்டாடுவது யாருக்காக?
Tue Feb 02, 2016 2:21 pm
ஈஸ்டர்
கி.பி 60 ம் ஆண்டு வேதாகமத்தின் வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்ட காலம் வரை இந்த ஈஸ்டர் பற்றி எங்கேயும் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. பிறகு எப்படி இந்த ஈஸ்டர் ”கிறிஸ்துவின் சீஷர்”கள் என்றழைக்கப்படும் ”கிறிஸ்தவர்”களுக்குள் வந்தது என்பதைத் தான் வரலாறை புரட்டி வைத்து பார்க்க போகிறோம்.
எஸ்ட்ரே (Eastre) என்ற, சொர்க்க லோகத்திற்கு அதிபதியான பெண் தெய்வத்தின் தினமே இதுவாகும். (இந்த சொல் ஆங்கில மொழியில் ஈஸ்டர் என்று உச்சரிக்கப் படுகின்றது.) பண்டைய ஐரோப்பாவில், ஈஸ்டர் தினத்தன்று, வசந்த காலத்தின் வருகையை கொண்டாடினார்கள்.
ஆங்கிலேயரின் ஈஸ்டர் என்ற சொல், பாபிலோனியர்களின் இஷ்தார் என்ற பெண் தெய்வத்தின் பெயர் மருவி வந்திருக்கலாம். பெயரில் ஒற்றுமை இருப்பதைக் கவனிக்கவும். பாபிலோனியாவில் இஸ்தார் சொர்க்க லோக அதிபதியாக கருதப்பட்டார். இஷ்தாரின் கணவன்/காதலன் தமுஸ் இறந்த பின்னர், அவனை உயிர்ப்பிப்பதற்காக பாதாள லோகம் செல்கிறாள். ஒவ்வொரு வருடமும், வசந்த காலத்தில், அதாவது ஈஸ்டர் தினத்தன்று தமுஸ் உயிர்த்தெழுவதாக பாபிலோனியரின் புராணக்கதை தெரிவிக்கின்றது
கிறிஸ்துமஸ், சூரிய ஒளி மிகக் குறைவாகக் கிடைக்கும் தினம். ஈஸ்டர், இரவும், பகலும் சரிசமமாக வரும் இளவேனில் காலத்தின் தொடக்கம். இந்தக் காரணங்களுக்காகத் தான், அந்தப் பண்டிகைகள் கொண்டாடப் பட்டனவே தவிர, அவற்றிற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
“இஷ்தார்” யார்?
இஷ்தார் தெய்வ வழிபாடு, விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ஒரே மாதிரியான கதைகள் பல நாடுகளில் காணப்படுகின்றன. (Ishtar, http://en.wikipedia.org/wiki/Ishtar ) பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக உள்ளன. சுமேரியர்கள் காலத்தில் அதன் பெயர் “இனானா”. கிரேக்கர்களுக்கு “அப்ரோடித்”. ரோமர்களுக்கு “வீனஸ்”. அதே மாதிரி இந்தியர்களின் துர்க்கை அம்மனும், இஷ்தார் தெய்வத்தைக் குறிக்கும் இன்னொரு பெயராக இருக்கலாம். துர்க்கை அம்மனின் வாகனமாக சிங்கம் காணப்படுகின்றது. அதே போல இஷ்தாரின் வாகனமும் சிங்கம் என்பது ஆச்சரியத்திற்குரியது!
இஷ்தாரின் கையில் உள்ள தீப்பந்தம், துர்காதேவி கையில் உள்ள சூலாயுதம் போலத் தெரிகின்றது. இஷ்தார் காதல் தெய்வம் மட்டுமல்ல, அது ஒரு யுத்த தேவதையுமாகும். (இந்து மதத்தில் வீரத்திற்கு துர்க்கை இருப்பது போல) பாபிலோனிய அரசர்கள் போருக்கு புறப்படுவதற்கு முன்னர், இஷ்தாரை வழிபட்டு விட்டுச் செல்வார்கள். பாபிலோனியரின் இஷ்தார் தெய்வ வழிபாடு, தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் துர்க்கை அம்மன் வழிபாடாக தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இஷ்தாரை தனியே துர்க்காதேவியுடன் மட்டும் ஒப்பிட முடியாது. பாபிலோனியாவில் இஷ்தார் பற்றிய கதைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில, பார்வதி தேவியின் கதைகளுடன் ஒத்துப் போகின்றன. பொதுவாக, இஷ்தாரை, ஆதி பராசக்தியுடன் ஒப்பிடலாம்.
இந்துப் புராணக் கதைகள் போன்று, சுமேரியர்களின் அல்லது பாபிலோனியர்களின் கடவுளரும் மனித வடிவில் அவதாரம் எடுப்பதுண்டு. சுமேரியர்களால் தமுசி என்றும், பாபிலோனியர்களால் தம்முஸ் என்றும் அழைக்கப்பட்ட அவதார புருஷனின் கதை மிகவும் பிரபலமானது. அந்த தெய்வத்தை போற்றிப் பாடும் செய்யுள்கள் அளவுக்கு அதிகமாகவே காணப்படுகின்றன.
குழந்தையாக அவதரித்த தினத்தில் இருந்து மரணமடைந்த இறுதிக் கணம் வரை ஒரு தனி மனிதனின் காவியம் போன்று பாடப் பட்டு வந்தது. அந்தக் கதையில், தமுசி/தம்முஸ் ஒரு ஆடு, மாடு மேய்க்கும் இடையனாக அறிமுகமாகிறார். பருவ வயதை அடைந்ததும், அவரை மணம் முடிக்க காத்திருக்கும் அரசனின் மகளாக, இஷ்தார் கடவுள் அவதாரம் எடுத்துள்ளார். இருவரையும் சுற்றி புனையப் பட்ட காதல் காவியம், ரோமியோ-ஜூலியட் கதையை விடப் பழமையானது. தம்முஸ், தனக்கேற்ற கணவனா என்று கண்டறிவதற்காக , இஷ்தார் பல சோதனைகளை வைக்கிறார். அதிலே கேட்கப்படும் கேள்விகள், விவசாய சமூகம் சம்பந்தமானவை. அதாவது, கால்நடைகளை மேய்த்து வந்த புராதன கால சமுதாயத்திற்கும், விவசாய தொழில்நுட்பம் தெரிந்த நவீன கால சமுதாயத்திற்கும் இடைப்பட்ட முரண்பாடுகளை அதில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
விவசாய சமூகம், தன்னை நாகரீகமடைந்த சமூகமாக கருதிக் கொண்ட காலத்தில் இந்தப் புராணக் கதை தோன்றியுள்ளது. இஷ்தாரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தம்முஸ், கால்நடை வளர்ப்பின் சிறப்பைப் பற்றிப் பாடுகின்றார். இறுதியில், இருவரும் திருமணம் செய்து கொள்வதன் மூலம், புராதன சமுதாயமும், நவீன சமுதாயமும் ஒன்று சேருகின்றன.
தம்முஸ்-இஷ்தார் காதல் ஜோடியின் இல்லற வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. தம்முசை ஒரு காட்டுப் பன்றி அடித்துக் கொன்று விடுகின்றது. செய்தி கேள்விப்பட்ட இஷ்தார், கணவன் இறந்ததால் ஏற்பட்ட துயரத்தால் தவிக்கிறார். தனது பிரியத்திற்குரிய கணவனை உயிர்ப்பிப்பதற்காக, எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராகிறார். அதற்காக பாதாள உலகம் நோக்கி பயணிக்கிறார். பாதாள லோகத்தில் உள்ள ஏழு வாயில்களிலும், ஆபரணங்களையும் உடைகளையும் களைந்து விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. 40 நாட்கள் இறுதியில், பாதாள லோகத்தின் அதிபதி விதிக்கும் சோதனைகளை எல்லாம் கடந்து, கணவனின் உயிரை மீட்கிறார்.
ஆனால், “தம்முஸ் – இஷ்தார்” கதை இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. கணவனின் மரணம் தொடர்பாக, இஷ்தார் பிறப்பித்த உத்தரவுகள், மக்களால் பல ஆயிரம் வருடங்களாக பின்பற்றப் பட்டு வந்துள்ளன. அந்தப் பழக்கங்கள் இன்றைய உலகில் மறைந்து விடவில்லை. இன்றைக்கும் வேறு வடிவில் தொடர்கின்றன என்பது ஆச்சரியத்திற்குரியது.
அன்றைய சுமேரிய/பாபிலோனிய மக்கள் தம்மூஸை மீட்க பாதாளத்திற்கு பயணித்த அந்த 40 நாட்கள் முழுவதும் கோயிலில் இருந்து அழுது, ஒப்பாரி வைப்பது வழக்கம். அதே போல் இஸ்ரவேல் வம்சத்தாரின் ஸ்திரீகளும் அழுது கொண்டிருப்பார்கள் என்று பைபிளில் பழைய ஏற்பாட்டில் அது குறிப்பிடப் பட்டுள்ளது. (பார்க்கவும்: எசேக்கியேல்) அனேகமாக, பிற்காலத்தில் பரவிய, யூத மதமும், கிறிஸ்தவ மதமும் அந்தப் பழக்கத்தை அடியோடு அழித்து விட்டன. (அழும் வழிபாட்டாளர்களை ஆண்டவரின் உத்தரவுப் படி கொன்றதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது.) கொஞ்சம் அமைதியாக இருங்கள். சுமேரியரின் தம்முஸ் வழிபாட்டிற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.
இதற்கிடையே, தலைநகர் ரோமில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த செனட் சபையில் இருந்த செனட்டர்கள்(பிரபுக்கள்) பலர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தனர். தமது மதமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக பழைய ரோம கோவில்களை பூட்டினார்கள். அங்கிருந்த தெய்வச் சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். ரோம சாம்ராஜ்யம் முழுவதும் ரோம கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்றப்பட்டன. (பண்டைய ரோம ஆலயம் எப்படி இருந்தது என்று பார்க்க விரும்புபவர்கள், மால்ட்டா தீவிலும், இத்தாலியின் சில இடங்களிலும் இப்போதும் சென்று பார்வையிடலாம்.) பல செனட்டர்கள் புதிய தேவாலயங்கள் கட்டுவதற்கு நன்கொடை வழங்கினர். இருப்பினும் பெரும்பான்மையான ரோம பிரசைகள் பெயரளவில் கிறிஸ்தவர்களாகவும், நடைமுறையில் ரோம மத சடங்குகளை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். பிற்காலத்தில் கத்தோலிக்க மதம் பல ரோம கலாச்சாரக் கூறுகளை, சடங்குகளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது. சில கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமரின் சடங்குகள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன. டிசம்பர் 25 ம திகதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினம் முதல், ஈஸ்டர் பண்டிகையில் வைக்கப்படும் முயல்,முட்டை வடிவ இனிப்புப் பண்டங்கள் வரை பல உதாரணங்களை கூறலாம்.( பூப்புனித நீராட்டு விழா கூட)
ரோம சாம்ராஜ்யம் அழிந்து, அதன் பிறகு கிறிஸ்தவ மத ராஜ்யம் தோன்றியதாக சொல்லப்படுவது உண்மையல்ல. ரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் அழியவில்லை. அதை கிறிஸ்தவ மத நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது. ரோமா புரியில் இருந்த அதிகார மையம், அதிலிருந்து சில மைல் தூரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாட்டிக்கான் நகருக்கு மாறியது. புதிதாக உருவாக்கப்பட்ட "பாப்பரசர்" என்ற பதவியில் இருத்தப்பட்டவர், (கத்தோலிக்க கிறிஸ்தவ) மதத்திற்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் தலைவராக வீற்றிருந்தார். பிராந்திய அரசர்கள் யாவரும் பாப்பரசரின் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்திற்கு அடிபணிந்து ஆட்சி செய்தனர். ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய புரட்டஸ்தாந்து பிரிவினரின் எழுச்சியானது, பாப்பரசரின் உலகளாவிய அரசியல் அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியது.
தம்முசின் மரணத்தை நினைவுகூரும் வகையில், ஈச்சமர ஓலையை எரித்த சாம்பலை எடுத்து நெற்றியில் திலகமிட வேண்டும். ஒவ்வொரு பக்தரும், தம்முஸ் தெய்வத்தின் சின்னமான சிலுவையை தமது நெற்றியில் சாம்பலால் இட்டுக் கொண்டனர். அந்த வழக்கம் இன்றைக்கும் கிறிஸ்தவர்களால், “சாம்பல் புதன்” என்ற பெயரில் பின்பற்றப் படுகின்றது. (Ash Wednesday,http://en.wikipedia.org/wiki/Ash_Wednesday) சைவ சமயத்தை சேர்ந்தவர்கள், சாம்பலை திருநீறாக பூசிக் கொள்ளும் வழக்கமும் சுமேரியாவில் இருந்து வந்திருக்க வேண்டும்.
சிலுவைக் குறியை வழிபடுவது, இயேசு கிறிஸ்துவுடன் ஆரம்பித்த வழக்கம் அல்ல. அது தம்முஸ் தெய்வத்தின் சின்னம். தம்முஸ் என்ற பெயரைக் குறிக்கும் எழுத்து சிலுவை அல்லது சக அடையாளம் போன்றிருக்கும். அன்றைய சுமேரியர்களும், பாபிலோனியர்களும் அதனை தம்முஸ் கடவுளைக் குறிக்கும் மதச் சின்னமாக வழிபட்டு வந்தார்கள். (The Sign of the Cross, http://www.piney.com/His56.html) தம்முஸ் மரணமடைந்ததும், “அவர் தனது தந்தையிடம் சென்று விட்டார்.” என்று இஷ்தார் மக்களுக்கு தெரிவித்தார். அந்தப் புராணக் கதையில், “எயா அல்லது என்கி” என்ற கடவுளின் குமாரனாகவே தம்முஸ் பூமியில் அவதரிக்கின்றார்.
சுமேரியர்களின் கதை ஒன்று அவரை சூரியக் கடவுளின் குமாரராக சித்தரிக்கின்றது. இஷ்தார்-தம்முஸ் வழிபாடு ஈராக்குடன் மட்டும் நின்று விடவில்லை. சிரியா, ஜெருசலேம் வரை பரவியிருந்தது. பாபிலோனியாவில் இருந்து விடுதலையாகி ஜெருசலேம் வந்த யூதர்கள், அங்கேயும் தம்முஸ்-இஷ்தார் தெய்வங்களை வழிபட்டதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது.
ஹீபுரு மொழியில் தமுசுக்கு “பக்குஸ்” (அழுபவர்களின் கடவுள் என்ற அர்த்தம்) என்று பெயரிட்டிருந்தனர்.கிரேக்கர்கள் தமது மொழியில், தம்முசை அடோனிஸ் என்றும், இஷ்தாரை அப்ரோடித் என்றும் பெயரிட்டார்கள்.
இஷ்தாரைப் பற்றியதான குறிப்புகள் கில்கமேஸின் இதிகாசங்கள் (THE BOOK OF GILGAMESH) என்கிற பெயரில் வெளிவந்ததான புத்தகத்தில் தெளிவாக இருக்கிறது.
குறிப்பாக 40 நாள் லெந்து நாள் என்று எப்படி கிறிஸ்தவத்திற்குள் வந்தது?
ஜனங்கள் அன்று, இஷ்தார் தேவதை பாதாளத்திற்கு சென்ற போது துக்கமாயிருந்த அந்த 40 நாட்களே இப்பொழுது சொல்லப்படும் லெந்து நாட்கள். ஆனால் அநேகர் சொல்லுகிறார்கள், இயேசு மரிப்பதற்கு முன்பு 40 நாட்கள் துக்கமாயிருந்தார், அந்த நாள் தான் லெந்து நாள் என்று… ஆனால் வேதத்தில் (மத்தேயு 26:2) மரிப்பதற்கு 2 நாட்கள் முன்பு இயேசு பஸ்கா ஆசரித்தார் என்று கூறப்பட்டுள்ளது., அதே போல் சில நாட்களுக்கு முன்பதாக அவர் எருசலேமுக்கு கழுதை மேல் செல்லும் போது, அங்கே எல்லாரும் ஓசன்னா பாடினார்கள், அவரும் அதை ஏற்றுக் கொண்டார் (மத்தேயு 21: 8,9,15) என்று கூறப்பட்டுள்ளது.
அவர் கெத்சமேனேயில் கடைசி சில நிமிடங்களில் அவர் துக்கமாயிருந்தார் என்று மட்டுமே போடப்பட்டுள்ளது., வேறே எங்கும் அவர் துக்கமாயிருந்தார் என சொல்லப்படவில்லை.
இதை சில பேர் இயேசு 40 நாட்கள் உபவாசமிருந்தார், அது தான் இந்த லெந்து நாள் என்று கூறுகிறார்கள்., ஆனால் வேதம் தெளிவாக கூறுகிறது, அந்த 40 நாள், இயேசு ஊழியத்திற்கு வருவதற்கு முன்பாக (மத்தேயு 4:2,17), சிலுவையிலறையப்படுவதற்கு முன்பாக இல்லவே இல்லை. அவர் 40 நாட்கள் கழித்து சாத்தானோடு போராடினார் (மத்தேயு 4:3) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நாமோ புத்தாடை போடுகிறோம், நன்றாக புதிய வகை உணவுகளை உண்கிறோம். ஆகவே அதற்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை என்பது தெளிவாகிறது.
நாம் துக்க நாட்களாய் கொண்டாடும் இந்த 40 நாட்கள், இஷ்தார் தேவதை தன் கணவனை மீட்பதற்காக பாதாளத்திற்கு சென்ற நாட்கள் என்பதை அனைவரும் அறிய வேண்டும்
அதுமட்டுமல்லாமல், ஈஸ்டர் eggs என்று ஒன்று சொல்லப்படுகிறது, இதற்கும், உயிர்த்தெழுதலுக்கும் கூட எந்த சம்பந்தமேயில்லை., ”அவன் எப்படி வெளிவருவான் என்றால், எப்படி முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருகிறதோ, அப்படியே தம்மூஸ் முட்டையிலிருந்து வருவான்” என்று அந்த இஸ்தார் தேவதை பாதாளத்திற்கு போகுமுன் கூறினாள், தம்மூஸ் முட்டையிலிருந்து வெளிவருவான் என்பதைத் தான், ஈஸ்டர் eggs ஆக கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையை இறுதியாக கிரேக்கர்கள் மூலமாக ரோமர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள், ரோமர்கள் (கான்ஸ்டண்டைன் காலத்தில்) கிறிஸ்தவர்களாக மாறின பின்பு இப்பண்டிகை கிறிஸ்தவத்திற்குள் நுழைந்துவிட்டது. இது முழுவதுமாக அந்நிய பண்டிகை. இப்பொழுதும் ஈராக்குக்கு செல்வீர்களென்றால் இஷ்தார் Gate இருக்கிறது. அதற்கு கீழே ”நரகத்தின் நுழைவாயில்” என்று பெயர் போடப்பட்டிருக்கும். இன்னும் ஈராக் அப்பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டு தான் வருகிறது.
இந்த விதமான அருவருப்பான காரியஙளை நீங்களும் செய்தால், ஆண்டவர் உங்களைப் பார்த்தும் கூறுவார், அதிக அருவருப்புகளை செய்யும் என் ஜனங்கள் (எசே 8:13,14,15), என்று.,
இந்த அருவருப்புகளை செய்பவர்களின் முடிவு எப்படி இருக்கும்?
அன்று அந்த அருவருப்புகளை செய்யும் ஜனங்களை, கர்த்தர் எப்படி அழித்தாரோ அப்படியே அழிப்பார் என்பதைத் தான் நமக்கு திருஷ்டாந்தமாக எழுதப்பட்டுள்ளது.
Eze 9:3 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு,
Eze 9:4 கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
Eze 9:5 பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,
Eze 9:6 முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்குமுன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்.
Eze 9:7 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.
ஈஸ்டர் என்பது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம் தேவாலயங்களில் இஷ்தார் காதல் தேவதையை புகழ்ந்து “Happy ஈஸ்டர்” என்று நாம் கொண்டாடி வருகிறோம் (தனி ஆராதனை வைத்து ).
Exo 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். பரிசுத்தமான தேவனை ஆராதிக்கும் நம் தேவாலயத்தில் இந்த விதமான அசுத்த வார்த்தைகளை உபயோகிக்காதிருங்கள். கர்த்தர் உங்களை இந்தவிதமான எல்லா அருவருப்புகளிலிருந்து காப்பாராக…. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக… ஆமேன்…
Permissions in this forum:
You cannot reply to topics in this forum