"ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - எப்போது?
Tue Feb 02, 2016 5:31 am
"ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39
இயேசு கிறிஸ்து எத்தனை மேன்மை மிக்கவர் என்பதை நன்றாக சுட்டி காட்டும் ஒரு அழகான திருமறை வசனம் இது. உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வசனமும் கூட. ஆனால் இன்று இந்த வசனத்தை சுட்டிக்காட்டி சில தளங்கள் இயேசு கிறிஸ்துவையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் இகழ்ந்து வருவது வேதனையான செய்தி.
இயேசுநாதர் என்றாலே மக்களிடையே ஒரு மதிப்பும் அவரை பற்றி மிக உயர்ந்த சிந்தனைகளும் உண்டு என்பது உலகறிந்த உண்மை. இதனை விரும்பாத சிலர் கிறிஸ்தவம் என்றால் என்ன என்றும் அறியாமல், இயேசு கிறிஸ்து யார் என்பதையும் அறியாமல், தங்களது சுயவெறுப்புகளின் காரணமாக தூயவாழ்வை வாழ்ந்து உலகிற்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கிய உன்னதரை பரியாசம் செய்கிறார்கள். அந்த தளங்களையும் நபர்களையும் வெளியிட மனதில்லை. அவர்களுக்கு நல்ல புத்தியை கர்த்தர் அருளட்டும்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்று கூறிய கர்த்தரே அவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை என்று கீழுள்ள வசனங்களை சுட்டி இகழ்கிறார்கள்...

"இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்" - யோவான் 18,22,23
ஈராயிரம் வருடங்களாக வேதத்தைப் படித்தும் இவ்வசனங்களை கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?
வேதவசனங்களை சற்று உற்று நோக்கினாலே இயேசு கிறிஸ்து என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39
இவ்வசனத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய வாக்கியம் - "தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்" என்பதே. இந்த வாக்கியத்தை இருவாரியாக பொருள் கொள்ளலாம்.
1. தீமைக்கு எதிராக நிற்கவேண்டாம்
2. நம்மிடத்தில் தீமையை வைத்துகொண்டு எதிர்த்து நிற்கவேண்டாம்
இதில் இகழ்ந்து பதிவுகளை வெளியிடும் நண்பர்கள் எல்லாம் முதலாவது பொருளின்படி அவ்வசனத்தை நோக்குகிறார்கள். ஒருவன் எவ்வளவு அக்கிரமம் செய்தாலும், அவனை தட்டிக்கேளாமல் மறுகன்னத்தை காட்ட வேண்டும் என்பது இவர்களது கருத்தாகும். இது தவறு.
இயேசு இரண்டாவது பொருள்படவே அவ்வசனத்தை அருளியுள்ளார் என்பது அவரது செய்கையில் இருந்தே தெளிவாகும். நம்மிடத்தில் தீமையோடு எதிர்த்து நிற்க கூடாது. உன்னிடத்தில் தீமை உண்டு என்று கண்டாயாகில் ஒரு கன்னம் என்ன மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்கிறார் இயேசு.
இதனையே அவரது செய்கையும் விளக்குகிறது...
இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார் - யோவான் 18:23
இங்கே இயேசுநாதரிடத்தில் எவ்வித தீமையும் இல்லை. தீமை என்னிடத்தில் உண்டென்றால் அதனை ஒப்புவி என்கிறார். தீமை அவரிடத்தில் இல்லாத பட்சத்தில் அவர் ஏன் மறுகன்னத்தை காட்ட வேண்டும்? அவர் தன்னிடத்தில் தீமையோடு எதிர்த்து நிற்கவில்லை.
இரண்டாவதாக சில இஸ்லாமிய நண்பர்கள் பவுலடியாரின் வசனங்களை சுட்டிகாட்டி அவர் பொய்காரர் என்று இகழ்ந்து வருகின்றனர். பவுல் பொய்காரர் அல்ல, அவரை அவ்வாறு இழிவுபடுத்தி பதிவிடும் நபர்களே பொய்காரர்கள் என்பதை கீழே காணலாம்.
இந்த நண்பர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்ற பகுதி,
"அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா?" - ரோமர் 3:8,9
தேவனுக்கு புகழ் உண்டாகும் என்ற பட்சத்தில் பொய் கூறலாம், அது பாவமாக எண்ணப்படாது என்று பவுலடியார் இவ்வசனத்தில் போதித்துள்ளதாக இந்த நண்பர்கள் இழிவுபடுத்தி வருகின்றனர். அடுத்த வரியை வாசிப்பதற்கு கூட இவர்கள் பொறுமை அற்றவர்கள் என்பதை இப்பதிவுகளில் இருந்தே அறியலாம்.
"அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்" - ரோமர் 3:8,9
இதில் தங்களை சிலர் அவ்வாறு போதிக்கிறவர்கள் என்று தூசித்து சொல்வாதாக வருந்தி, தேவனுடைய மகிமைக்காக பொய் கூறும்படி போதிப்பவர்களுக்கு தேவ ஆக்கினை நேரிடும் என்கிறார்.
"நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது" - ரோமர் 9:2
குற்றம் கண்டே தீரவேண்டும் என்று இழிவான பதிவுகளை வெளியிடும் நண்பர்கள் கொஞ்சம் வேதத்தை தெளிவுற படிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum